தமிழ் | తెలుగు

» ஆன்மீக கட்டுரைகள்

கீதாஞ்சலி

“நீ என்னிடம் பெருமகிழ்ச்சி கொண்டிருக்கிறாய். நான் உன்னை முற்றிலும் உணர்ந்திருக்கிறேன். நீ இறங்கி என்னிடம் வந்திருக்கிறாய். எல்லாம் வல்ல இறைவா நான் இல்லாவிட்டால் நீ யாரிடம் அன்பு செலுத்துவாய்? என் உள்ளத்தில் உன் இன்பம் எல்லையில்லா விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறது. என் வாழ்வில், உன் எண்ணம் எப்பொழுதும் ஈடேறிக் கொண்டிருக்கிறது. நான் இல்லையென்றால் நீ யார்மீது அன்பு செலுத்துவாய்? நான் எவ்வாறு உம்மை ஒரு மனிதனாக காணமுடியும்? நீர் என்னை சிருஷ்டித்தபடியால் உம் அன்பை நீ என்மேல் காண்பிக்கிறாய். நீ என் இதயத்தில் சதா நடனம் புரிகின்றாய் என்று கவிஞர் கூறுகிறார். இறைவனைப்பற்றி நன்கு கிரஹித்து உணர்ந்தவர்களில் இரவீந்திரநாத் தாகூரும் ஒருவர். அதினால்தான் என் உள்ளத்தில் உன் இன்பம் எல்லையிலா விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறது என்பது இவரின் கருத்து. இதைப்போன்றே மற்றவர்களும் கூறுகிறார்கள். “தான்ஒரு கூறு சதாசிவன் எம்இறை! வான்ஒரு கூறு மருவியும் அங்குஉளான்! கோன்ஒரு கூறுஉடல் உள்நின்று உயிர்க்கின்ற தான்ஒரு கூறு சலமயன் ஆமே.” – திருமந்திரம் 112 இறைவன் என்று பேசினால் அவனது இருப்பு எப்படி, அவனது வண்ணம் எவ்வண்ணம், யார் அவன் என்ற கேள்விகள் வரும். ‘இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதிக் காட்ட ஒண்ணாதே’ என்று, விடை சொல்ல முடியாமல் கைவிரித்த தருணங்களும் உண்டு. திருமூலரைப்போல முரட்டு துணிச்சலுடன் சுட்டிக்காட்ட … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

காலஞானம்

தீர்க்கதரிசிகள் நாரயணருடைய மகிமைகளையும், வல்லமைகளையும், அற்புதங்களையும் அவரால் தங்களுக்கு அருளப்பட்ட ஆவியின் மூலமாக அநேக அதிசயங்களைச் செய்திருக்கின்றனர். அதேபோல போத்தலூரி வீரப்பிரம்மம் அவர்களும் நிகழ்த்திய ஒரு அற்புத காரியத்தை இங்கே கூற விரும்புகின்றேன். ஒரு முறை வீரபிரம்மம் கர்நூல் நவாபை சந்திக்க சென்றிந்த சமயம் இவருடைய பூஜையின் நேரம் நெருங்கியது. அதற்கான ஏற்பாடுகளை செய்து தரும்படி நவாபிடம் கேட்டுக்கொண்டார் வீரபிரம்மம். ஏற்பாடுகளை செய்து தருமாறு சொன்ன நவாபும் தன்னுடைய மனதில் இவரை சோதித்துப் பார்க்க வேண்டும் என விரும்பினார். பூஜைக்கான ஏற்பாடுகளை செய்தார். அவர் விளக்கேற்றுவதற்கான எண்ணெய்க்கு பதிலாக தண்ணீரை வைத்தார். ஆனால் வீரப்பிரம்மனோ நவாபுக்கு இறைவனின் சக்தியை உணர்த்த வேண்டும் என எண்ணம் கொண்டார். தாங்கள் ஒரு இஸ்லாமியராக இருந்தபோதிலும் இந்து மதத்தின் பூஜை முறைகளை அறிந்து, அதனுடைய தேவைகளை பூர்த்தி செய்ததற்காக மகிழ்சியடைகிறேன். இந்த மகிழ்ச்சி மேலும் அதிகரிப்பதற்காக தாங்களே தீபம் ஏற்றுங்கள் என கேட்டுக்கொண்டார். இதைக் கேட்ட நவாப் அதிர்ச்சியடைந்து, எல்லா தீபங்களிலும் தண்ணீரையே ஊற்றி, அதில் திரியிட்டு தீபங்களை ஏற்றினார். என்ன ஆச்சரியம்! எண்ணெயில் சுடர்விட்டு எரியும் தீபங்களைப்போல பிரகாசமாக எரிவதைக் கண்டார். இந்த நிகழ்ச்சியைக் கண்ட நவாப் ஆச்சர்யம் அடைந்தவராய் தன்னுடைய தவறை உணர்ந்து, வீரப்பிரம்மனின் கால்களில் விழுந்து மன்னிக்குமாறு … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

கீதாஞ்சலி -10

“என்னை மறைத்துக் கொண்டிருப்பது, புழுதியும், இறப்புமே; இருந்தும், ஆசையோடு அதை அணைத்துக் கொள்கிறேன்.” தூக்கம் என்பது இறப்பிற்கு சமானம் என்று ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறியுள்ளார். அதே கருத்தை இங்கே கவிஞர் கூறுகிறார். தூக்கத்தில் இறைவன் வருவதை உணர்ந்த பின்னரும் எழுந்திருக்காமல் தூக்கத்தை அணைத்துக் கொள்கிறேன் என்கிறார். இறைவனை காணாதபடி தன்னை மறைத்துக் கொண்டிருப்பது புழுதியும் இறப்பும் என்கின்ற தூக்கமாகும். தூங்கும்போது யாராவது எழுப்பினால், தூக்கம் எவ்வளவு சுகமாக இருக்கிறது என்று நாம் எழும்புகிறதில்லை. நன்றாக தூங்குகின்றோம். காலையில் எழுந்து இரவு நேரம் நான் தூங்கும்போது என்னைக் காப்பாற்றியதற்கு நன்றி என்று நாம் இறைவனுக்கு கூறுகிறதில்லை. உண்ணுவதற்கும், உறங்குவதற்கும், பணத்திற்கும், புகழுக்கும் பின்னால் ஓடுவதற்கே நாம் வாழுகிறோம். இதற்காகவா நாம் சிருஷ்டிக்கப்பட்டோம்? சிந்தியுங்கள். “என் கடன் சுமைகள் அதிகம்; என் தோல்விகள் அநேகம். என் அவமானம் கனமானது, இரகசியமானது. இருந்தும், உன்னிடம் என் நலத்தை நாடும்பொழுது, என் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு வேண்டிய வரத்தைக் கொடுத்துவிடப் போகின்றீர்களே என்று நான் பயத்தில் நடுங்குகிறேன்”. நாம் கேட்கின்ற வரம் கிடைக்க வேண்டுமென்றுதான் நாம் ஆசைப்படுவோம். ஆனால் இங்கே கவிஞர் நான் கேட்கும் வரத்தை இறைவன் கொடுத்துவிடுவாரோ என்று பயப்படுகிறேன் என்கிறார். அப்படி என்றால் அவர் என்ன வரத்தை கேட்டிருப்பார்? … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

சாந்தியளிக்கும் ஆன்மீகம் – 3

இந்துக்கள் எல்லாருமே விக்கிரக ஆராதனைக்காரர்கள், நாங்கள் விக்கிரக ஆராதனைக்காரர்கள் அல்ல என்று இன்றைக்கு அநேகர் வெறுமனே கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் இந்து மதத்தை சரியாக அறிந்திருக்கவில்லை. இந்துக்கள் தத்துவத்தை வணங்குகிறார்கள். இன்றைக்கு நாம் அநேக போலியான மதங்களை காண்கிறோம். மேலும் அவர்கள் பணம் சேகரித்து நன்கு வளமுடன் வாழ எத்தனிக்கிறார்கள். ஆனால் நாங்கள் பணத்துக்காக வரவில்லை. உங்களுக்கு சத்தியத்தை கூற விரும்புகிறோம். நீங்கள் சத்தியத்தை நம்பினால், வருங்காலத்தில் இந்தியா ஒரு பலமிக்க நாடாக இருக்கும். இந்தியாவை ஒரு பலம்மிக்க தேசமாக ஆக்க கடவுள் என்னை எழுப்பியுள்ளார் என்று நான் திட்டவட்டமாக அறிந்திருக்கிறேன். இன்றைக்கு எல்லா ஜனங்களும் உலகமெங்கும் சிதறடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலமும் தங்களுடைய மாநிலமே தலைசிறந்தது என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் கடவுள் அதைச் செய்ய வில்லை. ஒவ்வொரு தேசமும் மற்றொரு தேசத்தின்மீது சார்ந்திருக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான உணவு பொருட்களை இறைவன் வைத்திருக்கிறார். அந்த தேசம் சிறந்தது, இந்த தேசம் சிறந்தது என்று நாம் கூற முடியாது. ஆனால் நமக்கு ஒரு கடமை உண்டு. நாம் இறைவனுக்கென்று ஒரு ஐக்கியமான இந்தியாவை உருவாக்க வேண்டும். மேலும் கடவுள் திட்டமாக அதை நிறைவேற்றுவார். உங்களைப் படைத்த கடவுளின்கீழ் ஐக்கிய இந்தியா உருவாகும் என்று நீங்கள் நம்பினால், உங்களுடைய … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

கடவுளின் வருகைபற்றி வள்ளலார் கூறுவது என்ன?

கர்மயோகி அல்லது கடவுளை கிரஹித்து உணர்ந்த ஓர் பக்தனின் குணங்களாக வள்ளலார் கூறுவது என்ன?            சென்ற இதழின் தொடர்ச்சி….. திருவருட்பா 6-ம் திருமுறை. 78 பாங்கி தலைவி பெற்றி உரைத்தல் பாடல் எண் 1064:       “……பிறர் பெயர் கேட்டிடிலோ      நாராசம் செவி புகுந்தால் என்ன நலிகின்றாள்      நாடறிந்தது இது எல்லாம் நங்கை இவள் அளவில்      நீர் ஆசைப்பட்டதுண்டேல் வாய் மலர வேண்டும்      நித்திய மாமணிமன்றில் நிகழ் பெரிய துரையே விளக்கவுரை: “….பிறர் பெயர் கேட்டிடிலோ……என்ன நலிகின்றாள்” “இறைவனது பெயரைத்தவிர, வேறு பெயர்களை கோபிகை செவிமெடுக்க நேர்ந்தால், இரும்பினாலான அம்பு ஒன்று செவிக்குள் புகுந்து குடைந்தால் உண்டாகும் துன்பத்திற்கொப்பான துன்பத்தை அவள் அடைகின்றாள்”, என்பதுதான் இதன் பொருள். பொதுவாக, சத்திய மார்க்கத்தில் தீவிரமாக இருப்பவர்கள், இந்த உலக ஆசைகளின் பின்னால் விரைந்து சென்று கொண்டிருப்பவர்களுடன் இணைந்து செல்ல முடியாது என்பது ஓர் வெளிப்படையான உண்மை. கடவுளின் பெயரைக் குறித்து தெளிவான வெளிப்படுத்தலை, அவரது அருளால் பெற்றுக்கொண்ட கோபிகை அந்தப் பெயரின்மீதில் தீவிர பக்தி கொண்டு, பல அற்புதங்களைத் தனது வாழ்க்கையில் கண்டிருப்பது மட்டுமல்ல, உண்மையான, நிலையான உள்ளச் சாந்தியையும் பெற்றிருக்கிறாள். இறையன்பை தனது வாழ்க்கையில் அனுபவித்துப் பார்த்து அதைப்பற்றி பிறருக்கும் சொல்லி … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

திறவோர் காட்சியில்…

பழம்பெரும் நூல்கள் எல்லாம் பகுத்தறிவு தூண்டியே! அவை நமக்கு சொல்லாத அறிவுரை இல்லை. கேளும் செவிக்கே அது சேரும். கற்பினும் தெரியாதது பட்டதும் புரியும் அரும்பழம் நூல்கள் எல்லாம் உரைத்தது நன்றே அன்றி வேறில்லை. உணர்ந்ததால் ஏதும் கேடில்லை. புறபொருள் விளக்கும் நானூற்றில் திறவோர் காட்சியில் கண்டதாக: நீர்வழிப்படும் புணைபோ லாருயிர் முறைவழிப்ப படூஉ மென்பது….. என பூங்குன்றனார் மொழிந்தார். மானிடர்களின் அக உள்ளம்தனை ஆராய்ந்து பார்த்தோனைப்போல தெளிவாக்கி உள்ளார் புலவர். இவ்வரி சொல்லும் மெய்மை கற்றோர் அறிவர். ஆற்று பெருவெள்ளம் வீறு கொண்டு பாய்ந்து வருகையில், அவ்வெள்ள நீர் போகிற திசையிலேயே அந்நீரில் மிதக்கும் தெப்பம் பயணிக்கும். இங்கு ஆற்று பெருவெள்ளமாக ஊழ்வினையையும், தெப்பத்திற்கு உலக மக்களையும் ஒப்புமை காட்டியுள்ளார். அந்த ஊழ்வினையின் வழியில்தான் உலக மக்கள் பயணிப்பார் என்பதை உறுதியிட்டிருக்கிறார். இந்த உலக மக்கள் உலகம் ஓடுகிற பாதையிலேயே தன்னையும் அமைத்துக் கொள்வானேயொழிய, அதன் நன்மை தீமையை ஆராய்ந்து செயல்படுவாரில்லை என்ற உண்மை இதில் மையமாக்கப்பட்டது. இங்கு திரைப்பட பாடல் வரி ஒன்று நினைவில் எழுகிறது… “ஆதியில் ஆண்டவன் இந்த பூமியை படைத்தானே! ஆனால்  ஆண்டவன் எண்ணம்போல் இந்த பூமி அமையலையே!” உலகத்தையும், மக்களையும் கடவுள் படைத்தாரேயன்றி அது இப்போது கடவுள் என்ற எல்லையை தாண்டி செல்ல முயல்கிறது. வெற்றி … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

கீதாஞ்சலி – 9

ஓ தோழனே! நீ ஒருவன்தான் என்னுடைய ஒரே நண்பன். என் உயிரினும் இனியவனே! கனவைப்போல் என்னைப் பாராமுகமாக கடந்து சென்று விடாதே! அவர் வந்து என் அருகில் உட்கார்ந்தார், நான் எழுந்திருக்கவில்லை. நான் மோசம் போனேன்! என்ன பாழும் தூக்கம்! ஐயோ! என் இரவுகள் எல்லாம் ஏன் வீணாயின? ஆ! அவர் வருகையை என் தூக்கத்தில் உணர்ந்தபோதிலும் நான் ஏன் அவரைப் பார்க்க முடியாமல் போகிறது? இறைவனிடம் கனவைப்போல் என்னைப் பார்த்த பின்னரும் கடந்து சென்று விடாதேயும் என்று கேட்ட கவிஞரிடம் இறைவன் அருகில் சென்று உட்கார்ந்தபோது கவிஞரால் தூக்கத்திலிருந்து எழுந்திருக்க முடியவில்லை. ஆகையால் பாழாய்ப்போன தூக்கத்தினால் என்னால் அவரை பார்க்க முடியாமல் போனதே என்கிறார். இறைவன் அநேக சமயங்களில் நம் அருகே வந்து உட்காருகிறார். ஆனால் நாம் தூங்குகின்றோம். நாம் ஏன் அவ்வாறு தூங்குகிறோம்? தூக்கத்தை உதறி விட்டு நாம் எழுந்திருக்கலாம். ஆனால் நாம் அவ்வாறு செய்கிறதில்லை. அன்பில் பற்றாக்குறை உள்ளது. அதினால் நாம் அவ்வாறு தூங்குகிறோம். எழும்பி அவரை பார்க்க வேண்டும் என்ற விருப்பம் மேலோங்குகிறதில்லை என்று ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா விளக்கம் கூறுகிறார். என்னுடைய இரவுகள் எல்லாம் அவரை காணாமல் வீணாகிவிட்டன என்று கவிஞர் அங்கலாய்க்கிறார். அவர் வருகையை என் தூக்கத்தில் … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

சாந்தியளிக்கும் ஆன்மீகம்

மத சம்பந்தமான புஸ்தகத்திற்கு மாறாக, ஒருவர் தனது கருத்தை கூறினால் அது ஒரு மதமல்ல. பகவத்கீதையை எடுத்துக்கொள்வோம். நீங்கள் பகவத்கீதையை படித்தீர்கள் என்றால் அதில் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத்கீதை அதிகாரம் 7:3-ல் “ஆயிரம் பேர் யோகா செய்கிறார்கள், அதில் மிகவும் அபூர்வமாக ஒருவனே சாந்தி அடைகிறான்”என்று கூறுகிறார். இன்றைக்கு, எல்லோரும் யோகாவைப் பற்றி பேசுகிறார்கள். நான்கூட 6 வருடங்களாக ஒரு யோகியாக இருந்தேன். ஆனால் சாந்தியை ஒருபோதும் நான் பெற்றுக்கொள்ளவில்லை. ஆகவே அநேகர் யோகா பயிற்சியை செய்து கொண்டிருக்கிறார்கள், ஆயிரம் பேரில் ஒருவனே சாந்தியைப் பெற்றுக்கொள்கிறான் என்பது சரிதான். மீதமுள்ள 999 பேர்களின் விதி என்ன? நீங்கள் மத சம்பந்தமான நூல்களைப் படித்து அந்த நூல்கள் கூறியபடி நடக்க வேண்டும். இறைவன் ஒவ்வொரு மத சம்பந்தமான புஸ்தகங்கள் மூலமாக கிரியை செய்கிறார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். இறைவன் அவர்களுடைய புஸ்தகங்கள் மூலமாக கிரியை நடப்பிக்கிறார். ஒருவன் விவிலியம் கூறியபடி செய்யவில்லையென்றால், அவனிடம் பரிசுத்த ஆவி இல்லை. விவிலியம் கூறியபடி பிரசங்கிப்பவனே ஒரு கிறிஸ்தவனாவான். உலகம் உங்களை புகழ்ந்தால், நீங்கள் ஒரு பிசாசாவீர்கள். பல்கலைக்கழகங்களை நீங்கள் கட்டலாம், பெரிய பெரிய கோபுரங்களை நீங்கள் கட்டலாம், ஆனால் இவையெல்லாம் மக்களை வஞ்சிப்பதற்காகவே செய்யப்படுகிறது. ஆகவே பிரார்த்தனையானது இருதயத்திலிருந்தே … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்