தமிழ் | తెలుగు

தலைப்புகள்

இறைநீதி

ஒரு முதியவர் அல்லது பெரியவர், ஒரு இளைஞனின் வீட்டிற்கு வந்தால், அவன் அவருக்கு உரிய மரியாதையை காண்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவனது உயிர் சக்தியில் சிறிது வெளியேறிவிடும். பெரியவர் ஒருவரைப் பார்த்து எழுந்து நின்று வணங்குபவனுக்கு உயிர் சக்தி கிடைக்குமாம். ஒரு நல்லவர் நம் வீட்டிற்கு வந்தால், அவரை வரவேற்று உட்காரும்படி கூற வேண்டும். பின்னர் தண்ணீர் கொடுக்க வேண்டும். அவர் நலன் விசாரித்த பின்பு அவர் வந்துள்ள சமயத்திற்கேற்ப உணவு பரிமாற வேண்டும் என்று விதுர நீதி கூறுகிறது. பெற்றோருக்கு மரியாதை அளிப்பதைப் பற்றி ‘தந்தைசொல் மிக்க மந்திரமில்லை’ என்று ஒளைவை மூதாட்டி கூறியுள்ளார். விவிலியத்தில் பெற்றோருக்கு மரியாதை அளித்தால்தான் பிள்ளைகள் நீடூழி வாழ்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. பெற்றோர் மற்றும் முதியோருக்கு மரியாதை அளிப்பதைப்பற்றி ஸ்ரீமந் நாராயணர் பல கருத்துக்களை கூறியுள்ளார். பெற்றோரை மதியாதவனை தற்கொலை செய்யும்படி தூண்டச்செய்யும் எண்ணம் அவனுடைய மனதிற்குள் புகுந்துவிடும். அதினால் அவர்கள் சீக்கிரத்தில் அதாவது அற்பாயுசில் இறப்பார்கள். சீக்கிரமாக இறப்பதற்கு பெற்றோரை மதிக்காமல் இருப்பதுதான் மருந்தாகும். ஒரு குழந்தை மெல்ல மெல்ல நடக்க கற்றுக்கொள்வதைப்போலதான் நாமும் வளர வேண்டும். உடனடியாக நாம் வளர்ந்து பெரியவர்களாக முடியாது. நாம் வாழ்க்கையில் மேடு பள்ளங்களைக் கடந்து வர வேண்டும். அதினால்தான் நாம் … Read entire article »

சமீபத்திய கட்டுரைகள்

ஸ்ரீ ஜயவந்த பக்தர்

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! இருண்ட சிறையிலே தன்னந்தனியாய் உட்கார்ந்திருந்தார் ஜயவந்தர். சிறையில் அசுத்தமும், நாற்றமும் கலந்த அந்த சூழ்நிலை அவருக்கு அருவருப்பு உண்டாக்கவில்லை. சிறையை கண்டவுடனேயே, நீதி நெறியற்ற இந்த செயல்கள் இன்று புதிதல்லவே. கம்சனின் கொடுமையினால் ஒரு பாவமும் அறியாத வசுதேவர் சிறையில் இருக்கவில்லையா? இன்று எப்படி நடைபெற வேண்டுமென்பது அவன் திருவுள்ளமோ? விடிந்ததும் நம்மை கட்டிப்போட நபர்கள் வந்துவிடுவார்கள். ஆகவே எஞ்சியுள்ள இந்த நேரத்திலே இறைவனுடைய திருநாமத்தை ஓதுவோம். இப்பிறவி போனால் மறுபடியும் எப்பிறவி வாய்க்குமோ? இந்த நிலையில்லாத சரீரத்தினால் எவ்வளவு நன்மைகள் செய்ய முடியுமோ செய்தாயிற்று. இனி அவருடைய திருவடிகளை அடைவது ஒன்றுதான் பாக்கி. ஆனால் இதற்கு ராஜ தண்டனை என்ற பழி வேண்டாம் என்று நினைத்தவராய், தியானத்தில் ஆழ்ந்தார். எவ்வளவு நேரம் தியானம் செய்தார் என்பதே அவருக்கு தெரியாது. சிறைச்சாலையில் பெரிய இரும்பு கதவுகள் திறக்கப்படும் ஓசையினால் அவரது தியானம் கலைந்தது. மிகப் பெரியதோர் குளம். அதிலேதான் இவரைப் போட வேண்டும் என்று உத்தரவு. விஷயம் தெரிந்த ஊரார் அரசனை தூற்றினர். இப்படிப்பட்ட மகானுக்கு தண்டனையா? என்று துடிதுடித்தனர். அருமையான … Read entire article »

அன்பையும் பக்தியையும் மட்டுமே ஏற்கும் இறைவன்

தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு சூட முழுக்கு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்கப்பட்டு விட்ட நேரத்தில், கோயில் எதிர்பார்த்தபடி நல்லபடியாய் கட்டி முடிக்கப்பட்ட சந்தோஷத்தில் ராஜ ராஜ சோழன் நிம்மதியாய் தூங்கும்போது, பரமசிவன் கனவில் அவன் முன்னே எழுந்தருளினார். உடனே ராஜ ராஜ சோழன் “இறைவா, என் பாக்கியம் என்னவென்று சொல்வது? தாங்கள் எனக்கு காட்சி தந்தது, நான் செய்த பாக்கியமல்லவா? தங்களுக்கு நான் கட்டிய கோயில் எப்படி இருக்கிறது? இந்த ஊரிலே எல்லோரும் வியந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய கோயிலாக கட்டியுள்ளேன். அதற்கு ‘தஞ்சை பெரிய கோயில்’ என்று பெயர் சூட்டப் போகிறேன்” என்று ஆனந்தமாக இறைவனிடம் கேட்டான். அதற்கு இறைவன் சிரித்துக்கொண்டே, “மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம். ஒரு இடைச்சி மூதாட்டியின் காலடி நிழலின்கீழ், யாம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்” என்று கூறி மறைந்தார். ராஜ ராஜ சோழனின் கனவும் கலைந்தது. விழித்தெழுந்த ராஜ ராஜன், தான் கண்ட கனவைப்பற்றி மறுநாள் அரசவையில் கூறி அந்த கனவுக்கு விளக்கம் கேட்டான். யாருக்கும் பதில் தெரியவில்லை. பின்னர் நேராக கட்டி முடிக்கப்பட்ட தஞ்சை பெரிய … Read entire article »

கீதாஞ்சலி

“நீ என்னிடம் பெருமகிழ்ச்சி கொண்டிருக்கிறாய். நான் உன்னை முற்றிலும் உணர்ந்திருக்கிறேன். நீ இறங்கி என்னிடம் வந்திருக்கிறாய். எல்லாம் வல்ல இறைவா நான் இல்லாவிட்டால் நீ யாரிடம் அன்பு செலுத்துவாய்? என் உள்ளத்தில் உன் இன்பம் எல்லையில்லா விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறது. என் வாழ்வில், உன் எண்ணம் எப்பொழுதும் ஈடேறிக் கொண்டிருக்கிறது. நான் இல்லையென்றால் நீ யார்மீது அன்பு செலுத்துவாய்? நான் எவ்வாறு உம்மை ஒரு மனிதனாக காணமுடியும்? நீர் என்னை சிருஷ்டித்தபடியால் உம் அன்பை நீ என்மேல் காண்பிக்கிறாய். நீ என் இதயத்தில் சதா நடனம் புரிகின்றாய் என்று கவிஞர் கூறுகிறார். இறைவனைப்பற்றி நன்கு கிரஹித்து உணர்ந்தவர்களில் இரவீந்திரநாத் தாகூரும் ஒருவர். அதினால்தான் என் உள்ளத்தில் உன் இன்பம் எல்லையிலா விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறது என்பது இவரின் கருத்து. இதைப்போன்றே மற்றவர்களும் கூறுகிறார்கள். “தான்ஒரு கூறு சதாசிவன் எம்இறை! வான்ஒரு கூறு மருவியும் அங்குஉளான்! கோன்ஒரு கூறுஉடல் உள்நின்று உயிர்க்கின்ற தான்ஒரு கூறு சலமயன் ஆமே.” – திருமந்திரம் 112 இறைவன் என்று பேசினால் அவனது இருப்பு எப்படி, அவனது வண்ணம் எவ்வண்ணம், யார் அவன் என்ற கேள்விகள் வரும். ‘இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் … Read entire article »

வள்ளாரின் திருவருட்பா

தெளிதேன் துளிகள் (தெரிந்தெடுக்கப்பட்டவை) உலகர்க்கு உய்வகை கூறல் கட்டோடே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர் கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர் பட்டோடே பணியோடே திரிகின்றீர் தெருவில் பசியோடே வந்தாரைப் பார்க்கவும் நோPர் கொட்டோடே முழக்கோடே கோலங் காண்கின்றீர் குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர் எட்டோடே இரண்டு சேர்த்தெண்ணவும் அறியீர் எத்துணை கொள்கின்றீர் பித்துலகீரே விளக்கவுரை (தொடர்ச்சி):  சென்ற இதழில், “கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர்” என்பது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. சிலர் “கண்ணும் கருத்துமாக மிகவும் பிரயாசப்பட்டு இறைவனை அறிய வேண்டுமா?” என்று மிகவும் விசனப்பட்டு கொள்கிறார்கள். அப்படிப்பட்ட மக்களுக்கு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஞானி ஜேம்ஸ் ஆலன் இயற்றிய அகம்மே புறம் என்ற புஸ்தகத்திலிருந்து ஒரு பகுதியை எடுத்துக்காட்டுவது உகந்ததாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்பது தெளிவாகும். அவர் தமது 24-ம் வயதில் ‘ஆசிய தீபம்’ என்ற புஸ்தகத்தை வாசித்தார். அந்த புஸ்தகத்தை வாசித்த பிறகு அவருக்கு மெய்யுணர்வு உண்டாயிற்று. அது முதற்கொண்டு நமது நாட்டு நூல்களுள் பெரு விருப்பம் கொண்டு மிகுதியாக படிக்க தொடங்கினார். “கீழ்நாட்டாரே மெய்ஞான கருவூலம் என்று அவர் அடிக்கடி கூறுவதுண்டு. அவருடைய நூல்களை நமது இந்திய சுதந்திர போராட்ட வீரரும், … Read entire article »

காலஞானம்

தீர்க்கதரிசிகள் நாரயணருடைய மகிமைகளையும், வல்லமைகளையும், அற்புதங்களையும் அவரால் தங்களுக்கு அருளப்பட்ட ஆவியின் மூலமாக அநேக அதிசயங்களைச் செய்திருக்கின்றனர். அதேபோல போத்தலூரி வீரப்பிரம்மம் அவர்களும் நிகழ்த்திய ஒரு அற்புத காரியத்தை இங்கே கூற விரும்புகின்றேன். ஒரு முறை வீரபிரம்மம் கர்நூல் நவாபை சந்திக்க சென்றிந்த சமயம் இவருடைய பூஜையின் நேரம் நெருங்கியது. அதற்கான ஏற்பாடுகளை செய்து தரும்படி நவாபிடம் கேட்டுக்கொண்டார் வீரபிரம்மம். ஏற்பாடுகளை செய்து தருமாறு சொன்ன நவாபும் தன்னுடைய மனதில் இவரை சோதித்துப் பார்க்க வேண்டும் என விரும்பினார். பூஜைக்கான ஏற்பாடுகளை செய்தார். அவர் விளக்கேற்றுவதற்கான எண்ணெய்க்கு பதிலாக தண்ணீரை வைத்தார். ஆனால் வீரப்பிரம்மனோ நவாபுக்கு இறைவனின் சக்தியை உணர்த்த வேண்டும் என எண்ணம் கொண்டார். தாங்கள் ஒரு இஸ்லாமியராக இருந்தபோதிலும் இந்து மதத்தின் பூஜை முறைகளை அறிந்து, அதனுடைய தேவைகளை பூர்த்தி செய்ததற்காக மகிழ்சியடைகிறேன். இந்த மகிழ்ச்சி மேலும் அதிகரிப்பதற்காக தாங்களே தீபம் ஏற்றுங்கள் என கேட்டுக்கொண்டார். இதைக் கேட்ட நவாப் அதிர்ச்சியடைந்து, எல்லா தீபங்களிலும் தண்ணீரையே ஊற்றி, அதில் திரியிட்டு தீபங்களை ஏற்றினார். என்ன ஆச்சரியம்! எண்ணெயில் சுடர்விட்டு எரியும் தீபங்களைப்போல பிரகாசமாக … Read entire article »

சிந்தை மாற்றம்

நம்முடைய சிந்தைதான் எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது! நம்முடைய சிந்தைதான் நமக்கு பிரச்சனைகளைத் தோற்றுவிக்கிறது. இறைவனின் மக்கள் இதிலிருந்து எவ்வாறு விடுதலை பெற வேண்டும் என்பதை ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா விளக்கிக் கூறுகிறார்: “ஒரு பெண் திடீரென்று ஒரு பல்லியை விழுங்கிவிட்டதாக நினைத்துக்கொண்டாள். ஆகவே அவள் தனது வயிற்றின் வெவ்வேறு பாகங்களைக் காட்டி “பல்லி இங்கு வந்துவிட்டது, இங்கு வந்துவிட்டது” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். “இல்லை சகோதரனே, நான் ஒரு பல்லியை விழுங்கிவிட்டேன். அது அங்குதான் இருக்கிறது” என்று மறுபடியும் மறுபடியுமாக கூறிக்கொண்டே இருந்தாள். இதை நினைத்தே அவள் மிகவும் சுகவீனமாகி விட்டாள். டாக்டர் அந்த பெண்ணை பரிசோதித்து விட்டு, “நான் ஒரு ஊசி போடுவேன், பல்லி வெளியே வந்துவிடும்” என அவர் கூறினார். அவளும் ‘சரி ஐயா’ என்றாள். அவர் அவளுக்கு ஒரு தூக்க மாத்திரையைக் கொடுத்தார். “நீ தூங்கி எழுந்த பிறகு, அந்த பல்லியானது வெளியே வந்து விடும்” என்று அவர் கூறினார். அவள் தூங்கிய பிறகு அவர் ஒரு பல்லியை அடித்து, தலையணைக்கு அருகே வைத்தார். அவள் தூங்கி எழுந்தபோது, “பல்லி … Read entire article »

வாசகர் கருத்து

மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு, எனது வேண்டுகோளை ஏற்று தங்கள் ஆசிரமத்தின் நூல்களை எனக்கு அனுப்பி ஸ்ரீமந் நராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களின் மகிமையை நான் அறிய உதவியதற்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தங்களுக்கு சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். மேலும் ஆன்மீகத்தில் திசை தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த எனக்கு உண்மையை உணர்த்தியதற்கு மீண்டும் என் நன்றியை காணிக்கையாக்குகிறேன். ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் கல்கி மகா அவதாரம் என்பதை பல சான்றுகளுடன் நிரூபிக்கிறது. அதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. நிறை மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன். கல்கி மகா அவதாரம் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அருளாசியை பெறவும், ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் என் உள்ளத்தில் எப்போதும் நிறைந்து அவரின் மகிமையை வெளிப்படுத்த வேண்டும். அவர்களின் அருளாசிக்காகவும் என்றும் பிரார்த்தனை செய்வேன். பொதுவாக உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளும் உண்பது, உறங்குவது மற்றும் தற்காத்துக்கொள்வது இவற்றிலேயே குறியாக இருக்கும்போது, இதற்கு மேலாக ஆன்மீகம் இருக்கிறது என்பதையும் ஒன்றே குலம், ஒருவனே தேவன்! என உணர்த்திய ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களின் அனுபவ உண்மைகள் மூலம் … Read entire article »