தமிழ் | తెలుగు

» சொர்க்கலோக விழாக்கள் » 47-வது கல்கி ஜெயந்தி விழா நிகழ்வுகள்

47-வது கல்கி ஜெயந்தி விழா நிகழ்வுகள்

மனுஜோதி ஆசிரமத்தில் 47-வது கல்கி ஜெயந்தி விழா மற்றும் அகில உலக ஆன்மீக கூடாரப் பண்டிகை சிறப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் விவிலியம், குர்-ஆன், பகவத்கீதை ஆகிய வேதங்களிலிருந்து ஆன்மீக உரை நிகழ்த்தப்பட்டது. இவ்விழாவில் அநேக சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஜூலை 1-ம் தேதி கொடியேற்றி, ஆசிரமத்தினர் கொடியை தங்கள் கைகளில் ஏந்தி, ஆசிரமத்தைச் சுற்றி ஊர்வலமாக வந்தனர்.
15.07.2016 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு மனுஜோதி ஆசிரமம் “சௌந்தர்ய லஹரி” இன்னிசைக் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியோடு விழா ஆரம்பமானது. மாலை 6.00 மணி முதல் பரிசுத்த ஓய்வுநாள் ஆரம்பமானது. அன்று முழு இரவு பிரார்த்தனை நடைபெற்றது. 16-ம் தேதி சனிக்கிழமை ஓய்வு நாள் அன்று பலத்த மழை பெய்தது. கூடாரப்பண்டிகையில் கலந்துகொண்ட எல்லா பக்தர்களும் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் மகிமையின் பிரசன்னத்தை மழையின் மூலமாகவும், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையின் மூலமாகவும் உணர்ந்துகொண்டனர். அனைத்து வேதங்களின் ஆராய்ச்சி மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகள் நடைபெற்றது.
17-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை தேசீய ஒருமைப்பாடு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு செய்யாறு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. J.A. கருணாநிதி, அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக இராமேஸ்வரம் – அகில இந்திய வானொலி கடல் ஓசை பண்பலையின் நிகழ்ச்சி தலைவர்,  திரு. மகா சோமாஸ்கந்தமூர்த்தி, I.B.S., மற்றும் கோயமுத்தூரைச் சேர்ந்த சிறைத்துறை துணை தலைவர், திரு. P. கோவிந்தராஜன் D.I.G அவர்களும் கலந்துகொண்டனர். பெங்களூருவிலிருந்து, ‘குறள் ஒலி’ பத்திரிக்கையின் ஆசிரியர் திரு. V. அரசு மற்றும் சென்னையிலிருந்து “ஆலோசனை” பத்திரிக்கையின் ஆசிரியர் டாக்டர் வே. மு. கலைநாயகம், கோவை அகில இந்திய வானொலியின் செய்தியாளர் திரு. குடந்தை R.வேங்கடபதி, இராமநாதபுரம் தாயுமானவர் தபோவனத்தைச் சேர்ந்த சுவாமி. ராம்குமார், சென்னை மாநில கல்லூரியின் தமிழ் பேராசிரியர் முனைவர் க. சேக் மீரான் அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினர். மேலும் “கண்ணோட்டம்” பத்திரிக்கையின் ஆசிரியர் கவிஞர் சிங்கல்பாடி R. சண்முகம், புலவர் ஆ.கு. விஸ்வநாதன், திருக்குறள் நடராசன் மற்றும்  சென்னையிலிருந்து வந்திருந்த கவிஞர்கள், முக்கிய அங்கத்தினர்களும் பங்கேற்றனர். சென்னையிலிருந்து வந்திருந்த கவிஞர் A. ஸ்ரீனிவாசன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மலேசிய பேரவையின் தலைவர் திரு. பச்சமுத்து செல்வராஜா நன்றியுரை வழங்கினார்.
17-ம் தேதி மாலை கலைமாமணி T.K.S கலைவாணன் அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பிறகு சர்வ சமய மாநாடு நடைபெற்றது. மனுஜோதி ஆசிரம சிறுவர் சிறுமியர் இறைவணக்கம் பாடினர். மனுஜோதி ஆசிரம தலைவர் திரு. D. பால் உப்பாஸ் N. லாறி  அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். I.A.R.F அமைப்பின் அகில இந்திய துணை தலைவர் B.T. சிதம்பரம் அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி கோட்டம் – வணிக வரித்துறை செயலாக்கத்தின் இணை ஆணையர் திரு. பா. தேவேந்திர பூபதி மற்றும் சென்னை வி.ஜி.பி. குழுமத்தின் தலைவர் திரு. வி.ஜி. சந்தோஷம், சென்னையிலிருந்து வந்திருந்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.T.N. வள்ளிநாயகம் மற்றும் சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் உதவி இயக்குநர் முனைவர். திரு. பால. இரமணி அவர்கள் மற்றும் அவரது துணைவியார் கோவை மற்றும் மதுரை பொதிகை தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தலைவர் கலைமாமணி திருமதி. ஆண்டாள் பிரியதர்சினி, திருநெல்வேலி மயன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. T.T. ரமேஷ் ராஜா, முக்கூடல் பூவிஜேஷ் மேனிலைப் பள்ளியின் தலைவர், கல்வி தந்தை முனைவர். G.S.R. பூமிபாலகன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். திருநெல்வேலி ஆக்ஸ்போ நர்சரி & பிரைமரி பள்ளியின் தாளாளர் திரு. R. மைக்கேல், மற்றும் சேரன்மகாதேவியின் காவல் துறையின் துணை கண்காணிப்பாளர் திரு. T. இராஜேந்திரன் மற்றும் திருநெல்வேலி ரெயில்வே நிலைய மேலாளர் திரு. கல்யாணி, அம்பாசமுத்திரத்திரத்தைச் சேர்ந்த திருமதி. பாலசரஸ்வதி, சென்னையிலுள்ள திரைப்பட நடிகர் திரு. M.V.S. இராஜேந்திரநாத் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் S. மீனாட்சி சுந்தரம் அவர்களின் புதல்வன் வழக்கறிஞர் திரு. செங்கு விஜய், ‘தங்கம்’ பத்திரிக்கையின் ஆசிரியர் திரு. தங்க மொஹைதீன் பிச்சை, கடலூரைச் சேர்ந்த தவத்திரு. அன்பிற்கரசு சுவாமிகள், திரு. கவிபாண்டியன் மற்றும் பலர் இதில் பங்கேற்றனர். பர்மா, அமெரிக்காவிலுள்ள ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த பர்னபாஸ் பச்சமுத்து, ஜோசுவா கன்னியப்பன், தாமஸ் ரெங்கசாமி, லோகநாதன், அருள்தாஸ், கந்தசாமி, தனபாக்கியம் ஆகியோரும் மலேசிய பேரவை அங்கத்தினர்கள் பலரும் பங்கேற்றனர். மலேசியாவிலிருந்து வந்திருந்த திரு. செங்கோடன் முத்துசாமி அனைவருக்கும் நன்றியுரை கூறினார். பெங்களூரைச் சேர்ந்த திரு. நிர்மல் குமார் அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.
18-ம் தேதி திங்கள் கிழமை காலை அனைத்து வேதங்களின் ஆராய்ச்சியும், ஆன்மீக சொற்பொழிவும் நடைபெற்றது. இரவு 7.00 மணிக்கு இந்தி மொழியில் தேசீய ஒருமைப்பாடு கூட்டம் மற்றும் சர்வ சமய மாநாடு நடைபெற்றது. மும்பையிலிருந்தும், ஜம்மு காஷ்மீரிலிருந்தும் வருகை தந்திருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் இதில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். வட இந்தியாவிலுள்ள ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.
19-ம் தேதி செவ்வாய் கிழமை காலை மகளீருக்கான கூட்டம் நடைபெற்றது. கல்கி ஜெயந்தி விழாவில் கலந்துகொண்ட அனைத்து பெண்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா தங்களது வாழ்க்கையில் நிகழ்த்திய நன்மைகளை சாட்சியாக கூறினர். மாலை ஆன்மீக சொற்பொழிவுகள் நடைபெற்றது. மேலும் கலைச்சுடர்மணி. சேரை M.P. முகமது முஸ்தபா குழுவினர் மற்றும் மனுஜோதி ஆசிரம சிறுவர்களின் சிலம்பாட்டம் மற்றும் வீர விளையாட்டுகளும் நடைபெற்றது.
20-ம் தேதி புதன் கிழமை காலை விளையாட்டுப் போட்டிகள், மண்டலம் மண்டலமாக உணவு சமைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல நாடுகளிலுமிருந்து வந்திருந்த ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் அவரவர் தங்களுடைய உணவை தாங்களே சமைத்து ஒரே பந்தலில் ஒவ்வொரு குழுவாக அமர்ந்து உணவருந்தினர். அன்று மாலை 6.00 மணிக்கு தெலுங்கு மொழியில் சர்வ சமய மாநாடு மற்றும் தேசீய ஒருமைப்பாடு கூட்டம் நடைபெற்றது. மனுஜோதி ஆசிரம தலைவர் திரு.D. பால் உப்பாஸ் N. லாறி அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். விஜயவாடாவிலுள்ள  புகழ்பெற்ற தொலைக்காட்சி வர்ணனையாளர் Dr. V. ராஜ கோபால சக்கரவர்த்தி அவர்கள் இந்த விழாவிற்கு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக, விசாகப்பட்டினத்திலுள்ள தெலுங்கு மொழி சங்கத்தின் ஓய்வு பெற்ற தலைவர் திரு. K. நரசிம்ம நாயுடு மற்றும் நெல்லூர் மாவட்டத்தின் ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் திரு. P. மதுசூதன ராவ், சென்னையிலுள்ள இசையமைப்பாளர் திரு. V.B. மதுசூதனன் (தபேலா மது), விஜயவாடாவிலுள்ள திரு. G.V.N.S.S. வரபிரசாத், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் மும்பையிலிருந்து வருகை தந்த திரு. வேமுலா சங்கர் பிரசாத் அவர்களும் இந்த விழாவிற்கு முக்கிய விருந்தினர்களாக வந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மேலும்  ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் “நித்திய ஜீவ வார்த்தைகள்” என்ற புத்தகம் பர்மா மொழியில் வெளியிடப்பட்டது. முதல் பிரதியை நெல்லூர் மாவட்டத்தின் ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் திரு. P. மதுசூதன ராவ் அவர்கள் வெளியிட பர்மாவிலிருந்து வருகை தந்த திரு. ரொனால்ட் டெய்லர் அவர்கள் அதை பெற்றுக்கொண்டார். மனுஜோதி ஆசிரமத்தின் செயலாளர் திரு. ராகவ ரெட்டி அவர்கள் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.
21-ம் தேதி வியாழக்கிழமை பக்தர்கள் அனைவரும் கல்கி ஜெயந்தி தினத்தை சந்தோஷமாக கொண்டாடினர். மதியம் சமபந்தி உணவு உண்டனர். திருச்சியைச் சேர்ந்த டாக்டர். ஷியாம் சுந்தர் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த புனிதா N. கவுடா அவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் சிறுவர் சிறுமியரின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. சிறுவர் சிறுமியர்கள் அநேகர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வேதங்களை மனப்பாடம் செய்து ஒப்பித்தல் மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. மனுஜோதி ஆசிரம சிறுவர் சிறுமியரின் “வாமன அவதாரம்” நாடகம் நடைபெற்றது.
22-ம் தேதி வெள்ளிக்கிழமை அனைத்து வேதங்களின் ஆராய்ச்சி மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகள் நடைபெற்றது. மாலை 6.00 மணி முதல் பரிசுத்த ஓய்வுநாள் ஆரம்பமானது. அன்று முழு இரவு பிரார்த்தனை நடைபெற்றது.
23-ம் தேதி சனிக்கிழமை அனைத்து வேதங்களின் ஆராய்ச்சி மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகள் நடைபெற்றது. எட்டு நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் கூடாரங்களில் தங்கி கூடாரங்களின் பண்டிகையை மன மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இந்த கல்கி ஜெயந்தி விழாவில் கார்மேகம் குடைபோல் சூழ்ந்திருக்க குளிர்ச்சியான சூழ்நிலையை உருவாக்கி, ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா தம்முடைய மகிமையின் பிரசன்னத்தை உணர்ந்தினார். விழா சிறப்பாக நிறைவு பெற்றது. விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற சிறுவர் சிறுமியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில் 10 ஜோடிகளுக்கு கலப்புத் திருமணங்கள் நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல், பெயரிடுதல், புதிதாக வந்தவர்கள் குருதீட்சை எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த கல்கி ஜெயந்தி விழாவின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் தேவாசீர் லாறியின் குடும்பத்தினரும், ஆசிரம நிர்வாகிகளுமாகிய திரு. D. பால் உப்பாஸ் N. லாறி, திரு. D. லியோ பால் C. லாறி ஆகியோர் முன்னின்று நடத்தினர். நமக்குள் சமத்துவம் வேண்டும் என்றும், ஜாதி, மதம், இனம், மொழி, தேச, சமயமற்ற ஒரு புதிய சமுதாயத்தினை உருவாக்கி, ஒரு குடைக்குள் ஒருங்கிணைத்து, ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற ஐக்கியத்தின் கீழாக ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா இன்று வரையிலும் நடைமுறையில் நடத்திக் காண்பித்துக் கொண்டிருக்கிறார்.

லஹரி ஓம் தத் சத்!
சிப்பிக்கு கடல் தந்த விளக்கம் முத்தோ!
கரிக்கு காலம் தந்த விளக்கம் வைரமோ!

– கலீல் ஜிப்ரான்

ஒரு புலி மனிதன்மீது பாய தயாராக இருப்பதுபோல், கிழத்தன்மை நம்மேல் பாய தயாராக உள்ளது. வியாதிகளும் எதிரிகளைப்போல் உடலை குத்தி கிழிக்கின்றன. ஆயுளோ, ஓட்டைக்குடத்திலிருந்து நீர் ஒழுகுவதைப்போல ஒழுகிக்கொண்டே உள்ளது. இருந்தாலும் மக்கள் இந்த உடலை நிலையானது என்கின்றனர். என்னே விசித்திரம் இது!

Filed under: சொர்க்கலோக விழாக்கள்