தமிழ் | తెలుగు

» சொர்க்கலோக விழாக்கள் » 46-வது கல்கி ஜெயந்தி விழா

46-வது கல்கி ஜெயந்தி விழா

மனுஜோதி ஆசிரமத்தில் 46-வது கல்கி ஜெயந்தி விழா மற்றும் அகில உலக ஆன்மீக கூடாரப் பண்டிகை சிறப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் பைபிள், குர்-ஆன், பகவத்கீதை ஆகிய வேதங்களிலிருந்து ஆன்மீக உரை நிகழ்த்தப்பட்டது. இவ்விழாவில் அநேக சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கல்கி ஜெயந்தி விழா துவக்கமாக ஜூலை 1-ம் தேதி கொடியேற்றி, ஆசிரமத்தினர் அன்புக் கொடியை தங்கள் கைகளில் ஏந்தி, ஆசிரமத்தைச் சுற்றி ஊர்வலமாக வந்தனர். 10-ம் தேதி வெள்ளிக்கிழமை “பாவநிவாரண நாள்” விரத நாளாக கடைபிடிக்கப்பட்டது.

15.07.2015 புதன் கிழமை மாலை 5.00 மணிக்கு மனுஜோதி ஆசிரமம் “சௌந்தர்ய லஹரி” இன்னிசைக் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியோடு விழா இனிதே ஆரம்பமானது.

16-ம் தேதி வியாழக்கிழமை அனைத்து வேதங்களின் ஆராய்ச்சி மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகள் நடைபெற்றது.

17-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை பெண்கள் கூட்டமும், மாலை ஆன்மீக சொற்பொழிவுகளும் நடைபெற்றது. வெள்ளி மாலை 6 மணி முதல் சனி மாலை 6 மணி வரை பரிசுத்த ஓய்வு நாள் அனுசரிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை முழு இரவு பிரார்த்தனையும் நடைபெற்றது.

18-ம் தேதி சனிக்கிழமை இரவு 7.00 மணிக்கு இந்தி மொழியில் தேசீய ஒருமைப்பாடு கூட்டம் மற்றும் சர்வ சமய மாநாடு நடைபெற்றது. இந்தியில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கலைமாமணி T.K.S. கலைவாணன் வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. 10 மணிக்கு தேசிய ஒருமைப்பாடு கூட்டம் நடைபெற்றது. அதில் மலேசியாவிலிருந்து வந்திருந்த பக்தர்களின் சிறுவர் சிறுமியர் இறைவணக்கம் பாடினர். திரு. D. லியோ பால் C. லாறி அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இவ்விழாவிற்கு செய்யாறு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் உயர்திரு. J. A. கருணாநிதி, அவர்கள் தலைமை தாங்கினார். சென்னையிலிருந்து வந்திருந்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. K. ஞானபிரகாசம் அவர்கள், AIR பண்பலை மதுரை மேனாள் உதவி இயக்குனர் திரு. மகா சோமாஸ்கந்தமூர்த்தி அவர்களும், காரைக்கால் மாவட்ட நீதிபதி, திரு. N. வைத்தியநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். பெங்களூரு “குறள் ஒலி” பத்திரிக்கையின் ஆசிரியர் திரு. V. அரசு, மற்றும் சென்னையிலிருந்து “ஆலோசனை” பத்திரிக்கையின் ஆசிரியர் டாக்டர் வே. மு. கலைநாயகம், சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ் பேராசிரியர் முனைவர் க. சேக் மீரான் அவர்கள், கோவையிலிருந்து வந்த மூத்த செய்தியாளர் திரு. குடந்தை R. வேங்கடபதி அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினர். மேலும் “கண்ணோட்டம்” பத்திரிக்கையின் ஆசிரியர் கவிஞர் சிங்கல்பாடி R. சண்முகம், புலவர் ஆ.கு விஸ்வநாதன், திருக்குறள் நடராசன், சென்னையிலிருந்து வந்த கவிஞர்கள் மேலும் முக்கிய அங்கத்தினர்கள் பலரும் பங்கேற்றனர்.

அன்று மாலை சர்வ சமய மாநாடு நடைபெற்றது. அதில் மனுஜோதி ஆசிரம சிறுவர் சிறுமியர் இறைவணக்கம் பாடினர். மனுஜோதி ஆசிரம தலைவர் திரு. D. பால் உப்பாஸ் N. லாறி அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். சென்னையிலிருந்து திரு. T.N. வள்ளிநாயகம் அவர்கள், வி.ஜி.பி. குழும தலைவர் திரு. வி.ஜி. சந்தோசம், சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் உதவி இயக்குனர் முனைவர் பால இரமணி, கலைமாமணி திருமதி ஆண்டாள் பிரியதர்சினி, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக தங்கம் பத்திரிக்கையின் ஆசிரியர், திரு. தங்க மொகைதீன் பிச்சை, கடலூரைச் சேர்ந்த தவத்திரு. அன்பிற்கரசு சுவாமிகள் மற்றும் நாகர்கோவிலில் இருந்து ஆய்வியல் அறிஞர் திரு. S. பத்மநாபன், ஓய்வு பெற்ற கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி திரு. M. சேகர், மற்றும் பலர் பங்கேற்றனர். நெல்லை அகில இந்திய வானொலியிலிருந்து, சிறப்பு அழைப்பாளர்களாக திரு. கவிபாண்டியன், மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீபன் ஹேவுட், டெட் கிளார்க், ஜெர்மனியைச் சேர்ந்த ஜோசியா மலேசியாவை சேர்ந்த பர்னபாஸ் பச்சமுத்து, தாமஸ் ரெங்கசாமி, செங்கோடன், தனபாக்கியம் மற்றும் பல மலேசிய பேரவை அங்கத்தினர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றனர். கோவையிலிருந்து ராசைய்யா சைலஸ் டேவிட் மற்றும் பலர் கலந்துகொண்டனர். மலேசியாவிலிருந்து வந்திருந்த செங்கோடன் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

20-ம் தேதி திங்கட்கிழமை காலை சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. மேலும் மண்டலம் மண்டலமாக உணவு சமைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அன்று மாலை 6.00 மணிக்கு தெலுங்கு மொழியில் சர்வ சமய மாநாடு மற்றும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா துதிபாடல்கள் தெலுங்கு ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. மனுஜோதி ஆசிரம தலைவர் திரு. D. பால் உப்பாஸ் N. லாறி அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். விஜயவாடாவிலிருந்து வந்திருந்த திரு. நோரி நாராயண மூர்த்தி, அவர்கள் இந்த விழாவிற்கு தலைமை தாங்கினார். திரைப்பட இசையமைப்பாளர் திரு. மதுசூதனன் (தபேலா மது) அவர்கள் பாடல் CD-யினை வெளியிட, மும்பையிலிருந்து வந்திருந்த சங்கர் பிரசாத் வேமுலா அவர்கள் பெற்றுக்கொண்டார். விஜயவாடாவிலிருந்து வந்திருந்த திரு. பனகு சேஷகிரிராவ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மனுஜோதி ஆசிரமத்தின் செயலாளர் திரு. ராகவ ரெட்டி அவர்கள் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.

21-ம் தேதி செவ்வாய் கிழமை ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் அனைவரும் கல்கி ஜெயந்தி தினத்தை சந்தோஷமாகக் கொண்டாடினர். மதியம் சமபந்தி உணவும், மாலையில் சிறுவர் சிறுமியரின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. மனுஜோதி ஆசிரம சிறுவர்கள் பங்கேற்ற சிலம்பாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது. 22-ம் தேதி புதன் கிழமை அன்று இரவோடு விழா இனிதே நிறைவுற்றது.

46-வது கல்கி ஜெயந்தி விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் இறை ஆசியை பெற்றனர். இவ்விழாவில் கார்மேகம் குடைபோல் சூழ்ந்திருக்க குளிர்ச்சியான சூழலால், ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் மகிமையின் பிரசன்னத்தை சிறியோர் முதல் பெரியோர் வரை உணர்ந்தனர். விழா இனிதே நிறைவு பெற்றது. 23-ம் தேதி வியாழக்கிழமை காலையில் 12 ஜோடிகளுக்கு கலப்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஆசிரம நிர்வாகிகள் திரு. தேவாசீர் லாறியின் புதல்வர்கள் திரு. D. பால் உப்பாஸ் N. லாறி மற்றும் திரு. D. லியோ பால் C. லாறி அவர்களும் முன்னின்று நடத்தினர்.

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற ஐக்கியத்தின் கீழாக ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அனைத்து தரப்பினரையும் ஒரே பந்தலின் கீழ் கூட்டிச் சேர்த்தார். ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் அனைவரும் மன நிறைவோடு, இந்த ஏழு நாட்களும் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் ஆசியைப் பெற்று தம்தம் இல்லம் ஏகினர்.

லஹரி ஓம் தத் சத்!

தொகுப்பு: – J. பாலசந்தர்

*******

Filed under: சொர்க்கலோக விழாக்கள்