தமிழ் | తెలుగు

» Archive

வாசகர் கருத்து

மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு, எனது வேண்டுகோளை ஏற்று தங்கள் ஆசிரமத்தின் நூல்களை எனக்கு அனுப்பி ஸ்ரீமந் நராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களின் மகிமையை நான் அறிய உதவியதற்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தங்களுக்கு சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். மேலும் ஆன்மீகத்தில் திசை தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த எனக்கு உண்மையை உணர்த்தியதற்கு மீண்டும் என் நன்றியை காணிக்கையாக்குகிறேன். ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் கல்கி மகா அவதாரம் என்பதை பல சான்றுகளுடன் நிரூபிக்கிறது. அதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. நிறை மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன். கல்கி மகா அவதாரம் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அருளாசியை பெறவும், ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் என் உள்ளத்தில் எப்போதும் நிறைந்து அவரின் மகிமையை வெளிப்படுத்த வேண்டும். அவர்களின் அருளாசிக்காகவும் என்றும் பிரார்த்தனை செய்வேன். பொதுவாக உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளும் உண்பது, உறங்குவது மற்றும் தற்காத்துக்கொள்வது இவற்றிலேயே குறியாக இருக்கும்போது, இதற்கு மேலாக ஆன்மீகம் இருக்கிறது என்பதையும் ஒன்றே குலம், ஒருவனே தேவன்! என உணர்த்திய ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களின் அனுபவ உண்மைகள் மூலம் அவரையே சரணடைந்து ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பாத மலர்களை பிரார்த்தித்து வெற்றியடைய விரும்பும் உண்மை விசுவாசி. ✍ – ச. காளியப்பன், … Read entire article »

Filed under: வாசகர் கருத்து

புத்திசாலித்தனம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ லஹரி கிருஷ்ணாய! இறையே அபயம்! யாவும் இறையின் உபயம்! பல்லாயிரம் கோடி கோடி அண்டங்கள். எல்லா பொருளிலும் ஓர் எல்லையில்லா வெளி வானிலே நில்லாது சுழன்றோட நியமம் செய்தருள் நாயகன் சொல்லாலும் மனத்தாலும் தொடரொணாப் பெருஞ்சோதி யான வல்ல பேரிறைவன் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கருணையால் இந்த உலகை படைத்து நம்மை வாழ வைக்கிறார். உலகைக் காத்தருளும் பேரருள் எல்லா நாடுகளிலும் தான் தோன்றி (ஸ்வயம்) வழிநடத்துகிறது. அப்படி ஜிம்பாப்வே நாட்டில் லோங்கோ எனும் பெயரில் மறை நாயகன் தோன்றினார். அந்த நாட்டின் காட்டின் நடுவே ஒரு சிறு கிராமம். காட்டிலிருந்து வந்த கொடூரமான சிங்கங்கள் பலரைக் கொன்று விட கிராமத்து மக்கள் பயந்து ஊரை விட்டே ஓடி விட்டனர். ஒருநாள் காலை ஊரை விட்டு ஓடும் அவசரத்தில் திமிதி என்ற பார்வையற்ற கிழவனும் பண்டா என்ற சோம்பேறி இளைஞனும் தனியே விடப்பட்டனர். திமிதி வெளிப்பார்வையற்றவனாயினும் உள்ளொளியாம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா (லோங்கோ)வை ஆராதித்து வருபவன். உமது சித்தப்படி நடக்கும் என்று எப்போதும் இறை நாமத்தை எண்ணி வாழ்பவன். காலையில் எழுந்து ஊர் காலியானதைத் தெரிந்துகொண்ட திமிதி மெதுவாக நடந்து செல்கையில் தூங்கியெழுந்து வந்த பண்டா, பெரியவரே என்ன நடந்தது எல்லோரும் எங்கு போய் விட்டார்கள் என்று தவிப்புடன் கேட்டான். நானும் தனியாக … Read entire article »

Filed under: ஆன்மீக கதைகள்