தமிழ் | తెలుగు

» Archive

அகில இந்திய ஆன்மீக சுற்றுப் பயணம் – 4

சென்ற இதழில் இரண்டாவது சுற்றுப்பயணத்தின் ஆரம்பத்தையும் நாங்கள் பயணித்த சில இடங்களைக் குறித்தும், எங்களைச் சந்தித்த நண்பர்களைப் பற்றியும் தெரிந்துகொண்டீர்கள். வாசகர்களாகிய நீங்கள் தொடர்ந்து தெரிந்துகொள்ள ஆவலுடன் இருப்பதை நீங்கள் எழுதிய கடிதங்கள் மூலமாக தெரிந்துகொண்டோம். நாங்கள் குஜராத் மாநிலத்தின் தலைநகரான அஹாமதாபாத்திலிருந்து ராஜ்கோட்டிற்கு சென்று இறைவனின் தொண்டை செய்து முடித்து மீண்டும் அஹாமதாபாத்திற்கு வரும்பொழுது பட்டேல் இனத்தைச் சேர்ந்த இலட்சக்கணக்கானவர்கள் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதன் விளைவாக ஊரடங்கு உத்தரவான 144 தடை உத்தரவும் அமுல்படுத்தப்பட்டிருந்தது. மேலும் எங்கள் பிரயாணத்தை தொடர முடியுமா என்று நினைக்கும் அளவிற்கு கலவரங்கள், பஸ்ஸை எரிப்பது போன்ற சம்பவங்கள் நிகழ ஆரம்பித்து விட்டது. அச்சமயத்தில் நள்ளிரவில் புறப்பட்டு உதய்பூருக்குச் சென்று விடலாம் என்று புறப்பட்டபோது வழியில் பாதைகளெல்லாம் அடைக்கப்பட்டு, காவலர்கள் காவல் காத்துக்கொண்டிருந்தனர். என்ன செய்வது என்று நாங்கள் திகைத்தபோது, கலவரங்கள் இல்லாத பகுதிகளின் வழியாக நீங்கள் உதய்பூரை சென்றடையலாம் என அந்த காவலர்களே மற்றொரு மாற்றுப்பாதையைக் காண்பித்து எங்களை வழியனுப்பி வைத்தார்கள். வேதங்களிலும், புராணங்களிலும் இறைவனுடைய பிள்ளைகளுக்கு இடையூறுகள் வரும்போது இறைவன் அவர்களை தப்புவித்ததை நாம் படித்திருக்கின்றோம். ஆனால் அன்று நாங்கள் எங்களுடைய வாழ்க்கையில் கண்ணாரக் கண்டோம். இதுபோன்ற அநேக சம்பவங்கள் இந்த பிரயாணத்தில் ஏற்பட்டாலும் எல்லாவற்றையும் எழுத … Read entire article »

Filed under: ஆன்மீகச் சுற்றுபயணம்

சிருஷ்டிப்பிலுள்ள அதிசயங்கள்

வண்ணத்து பூச்சிகளை பிடித்து விளையாட வேண்டும் என்று எல்லோருக்கும் ஆர்வம் ஏற்படலாம். அதன் கொள்ளை அழகுதான் இதற்கு காரணம். ஆனால் இந்த வண்ணத்துபூச்சிகள் எல்லாம் பார்த்தாலே அருவருப்பை ஏற்படுத்தும் கம்பளி பூச்சியிலிருந்து உருவானவை என்றால் நிச்சயம் ஆச்சரியமாகத்தான் இருக்கும். உலகம் முழுவதும் 24 ஆயிரம் வகை வண்ணத்து பூச்சிகள் இருப்பதாக இதுவரை கண்டறிந்து உள்ளனர். வண்ணத்துப்பூச்சி வெப்ப மண்டல உயிரினமாகும். ஆனாலும் இவை கடும் குளிர் வீசும் இமயமலை மற்றும் கனடாவின் வடபகுதி ஆகியவற்றிலும்கூட காணப்படுகின்றன. இந்தியா வெப்ப மண்டல பகுதி என்பதாலும், வண்ணத்து பூச்சிகள் வாழ ஏற்ற சூழ்நிலை இருப்பதாலும், இந்தியாவில் 1800 வகை வண்ணத்து பூச்சிகள் உள்ளன. இவை சராசரியாக மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்திலிருந்து 15 கிலோமீட்டர் வேகம்வரை செல்லும். சில வண்ணத்து பூச்சிகள் 50 கிலோமீட்டர் வேகத்தில்கூட பறக்கின்றன. இவை குளிர் இரத்தம் கொண்டவை. இதனால் அவற்றின் உடல் வெப்ப நிலை 86 டிகிரிக்கு மேல் இருந்தால் மட்டுமே பறக்க முடியும். இவற்றுக்கு 2 பெரிய கண்கள் உண்டு. அவற்றில் 6 ஆயிரம் லென்சுகள் உள்ளன. ஆனாலும் இவற்றால் நீண்ட தூரத்துக்கு பார்க்க முடியாது. 10 அடியிலிருந்து 12 அடி தூரம் வரை மட்டுமே தெளிவாக பார்க்க முடியும். ஆனால் … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்

புரந்தரதாஸர்

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! நாரத முனிவரை உலகிற்கு அனுப்பிய இறைவன்தான் திருவுள்ளம் கொண்டிருந்தால் முதலிலேயே நல்வாழ்வு வாழும்படி பணிந்திருக்க முடியாதா? முடியும். ஆனால் ஏன் அப்படி செய்யவில்லை? “மனிதன்” மனிதன் செய்யக்கூடிய தவறுகளையெல்லாம் செய்தாலும் பின்பு திருந்தி தெய்வ வாழ்க்கையைப் பெறமுடியும்”என்பதை உலகிற்கு காட்டவே இப்படிச் செய்த முயற்சிகள் பல. அர்ஜுனனுக்கும் உத்தவருக்கும் கீதோபதேசம் செய்ததுபோல ரகுநாதனுக்கும் போதிக்கின்ற முறையாலே நம் எல்லோர்க்கும் போதிக்கின்றான் இறைவன். ஒருநாள் காலை, வேமன்னபுரி வீதிகளில் ஒரு கிழவர், “ரகுநாதன் என்ற வட்டி வியாபாரியின் வீடு எது?” என்று கேட்டுக்கொண்டே வந்தார். தம்மை விசாரித்தவர்களிடம், “கொஞ்சம் பண உதவி வேண்டும்”என்றார். “ஐயோ பாவம்! அவன் கொடையாளி என்று உமக்கு யார் சொன்னார்கள்? வேறு யாரையாவது பார்த்தாலும் பயன் உண்டு” என்று சொன்னார் சிலர். “அவனிடமா?” என்று பரிகசித்தனர் சிலர். அதை ஏற்காமல் மெல்ல மெல்ல நடந்து ரகுநாதனின் வீட்டை அடைந்தார் முதியவர். அவரது பஞ்சைக் கோலம் கண்ட ரகுநாதன், “இந்த பிராமணனிடம் என்ன இருக்கப்போகிறது அடகு வைக்க?”என்று எண்ணி, “யாரைய்யா நீர், அசாத்ய வேலை இருக்கிறது, வந்த விஷயத்தை சுருக்கமாகச் சொல்லும்” என்றான். கிழவர், “ஏதேது ஆரம்பமே சுப சூசகமாகக் காணோமே” என்று நினைத்து, மூட்டையை அவிழ்த்து, எலுமிச்சம்பழம் ஒன்றைக் கையிலெடுத்து … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்

மகாத்மா காந்தி அகிம்சையை பின்பற்றுவதற்கு காரணமான சம்பவம்!

ஜோசப் டோக் என்ற ஆங்கிலேயர் காந்தியடிகளை சந்தித்து நீண்ட நேரம் உரையாடிக்கொண்டிருந்தார். அப்பொழுது அவர் காந்தியடிகளை நோக்கி சத்தியாகிரகம் என்ற தத்துவ உணர்வு உங்களுக்கு தோன்றுவதற்கு அடிப்படையாக இருந்தது என்ன? என்று ஒரு கேள்வியைக் கேட்டார். நான் சிறு வயதில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது பாடத்தில் வந்திருந்த ஒரு குஜராத்தி மொழி பாடல்தான் சத்தியாகிரக உணர்வு என் மனதில் குடிகொண்டதற்கு காரணம் என்று மகாத்மா காந்தியடிகள் கூறினார். அது என்ன பாடல், அதின் கருத்தைக் கூறுங்கள் என்று ஜோசப் டோக் கேட்டார். அதற்கு காந்திஜி: “ஒருவன் உனக்கு தண்ணீர் கொடுக்கிறான் என்றால் அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்தால் அது ஒன்றும் பெரிய விஷயமல்ல. அது ஒரு சாதாரண விஷயம். தீமை செய்தவனை தீமையால் எதிர்ப்பதும் சாதாரண விஷயமே. மிருகங்களில்கூட இந்த வழக்கம் உள்ளது. தீமை செய்தவனுக்கு நன்மை செய்வதன் மூலம், அவன் தான் செய்த தீமையை உணரச்செய்வதுதான் மிகவும் போற்றத்தக்க ஒன்றாகும். இவ்வாறு அந்த குஜராத்தி மொழி பாடல் அறிவுறுத்தியது. அந்த கருத்துதான் என் மனதில் ஆழப்பதிந்தது. பின்னர் இயேசு நாதரின் மலை சொற்பொழிவை ஆழ்ந்து படித்தபோது குஜராத்தி மொழிப்பாடலின் உண்மையான பொருள் என்ன என்று முழுமையாக விளங்கிக்கொள்ள முடிந்தது” என்றார். ✡✡✡✡✡✡ … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்

அன்புடையீர், “மனுஜோதி” ஆகஸ்டு-அக்டோபர் 2016 இதழ் படித்தேன். வனாந்தரத்திலிருந்து ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அழைக்கும் செய்தியை அட்டைப்படம் உணர்த்தியது. வானம், பூமி, சமுத்திரம் யாவையும் படைத்த பரமபுருஷராகிய ஸ்ரீமந் நாராயண மூர்த்தியாம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவுக்கே எங்கள் கனம், துதி, மகிமை யாவும் உரித்தாகட்டும் என்ற ஆசிரியர் ஜெபதுதியில் நானும் பங்கேற்று பிரார்த்திக்கிறேன். மகத்தான கலாச்சாரத்தை கொண்டிருக்கும் ஒப்பற்ற மதம் இந்து மதம் என்பதில் இருவேறு கூற்றுக்கு இடமேயில்லை. ஸ்ரீமந் நாராயணரை கிரஹித்து உணர்ந்து கொண்டவன் தன்னுடைய பூலோக சரீரத்தை விட்டு செல்கிறபோது, மகிமையின் சரீரத்தை பெறுவது நிச்சயம் என்பதனை நான் நம்புகிறேன். வணிக வரித்துறை இணை ஆணையர் தேவேந்திர பூபதி அவர்கள் கூறியபடி, எப்போதெல்லாம் இந்த உலகிலே தீமை தலை தூக்குகிறதோ, எப்போது தர்மம் தன்னுடைய சக்தியை இழக்கிறதோ, அப்போதெல்லாம் அந்த தர்மத்தை காத்து நிலைநாட்டுவதற்காக நான் அவதாரம் எடுத்து வருவேன் என்ற உண்மையான மகா அவதாரத்தையே கல்கி ஜெயந்தி நினைவுறுத்துகிறது என்ற அவரது உள்ளக்கிடக்கையை நான் அப்படியே வழிமொழிந்து பதிவு செய்கிறேன். தொலைக்காட்சி பார்ப்பதற்கும், சினிமா பார்ப்பதற்கும் அல்லது வேறு எதற்காவது முக்கியத்துவம் கொடுத்தால் அது இறைவனின் பார்வையில் அசுத்தமான காரியங்களாகும் என்பது நூற்றுக்கு நூறு உண்மையே. சிவனும், … Read entire article »

Filed under: வாசகர் கருத்து

கவிதைகள்

அனுக்ரகித்தாய் மனுஜோதி ஆஸ்ரமத்தை நீ படைத்தாய் மனுகுலம் ஒன்றினையும் நீ படைத்தாய் அறியாமை சாகரத்தில் வீழ்ந்தவர்கள் ஆறுதல் நீ கொடுத்து ஆதரித்தாய் ஆநிரை கன்றுகளை மேய்த்தவன் நீ ஆயிரம் வேதமொழி கற்றவன் நீ கற்பக மலர்களிலே நீயிருப்பாய் குலம்வாழ அற்புதங்கள் நீ புரிவாய் வன்மம் மனதைவிட்டு போக்கிடுவாய் வறுமை இல்லையென்று ஆக்கிடுவாய் முந்தையர் செய்த நல்ல தவத்தினாலே முரளி கிருஷ்ணா நீ அனுக்ரகித்தாய் – கே. வி. ஜெனார்த்தனன், காஞ்சிபுரம் —- வழிகாட்டுமே ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நற் கொள்கை தனையே இன்றே நாமெல்லாரும் ஏற்றுக்கொள்வோம் கூடி வாரீர்……..! ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அரும்பெரும் போதனைகள் பின்பற்றியே எல்லோரும் ஓர் குலம் என்ற கொள்கை தன்னை யேற்றே இம்மண்ணில் மாந்தரெல்லாம் இணைந்தொன்றாய் வாழ்ந்துயர்வோம் வாரீர்…..! வாரீர்……! – நல்லாசிரியர் கவிஞர் பி. வேலுசாமி, எடப்பாடி —— விண்ணும் . . . மண்ணும் . . . விண்ணை மறந்தவர் கோடி! மண்ணை இழந்தவர் கோடி! விண்ணையும் மண்ணையும் அளந்தவன் ஒருவனே! விண்ணின்று மண்ணுக்கு வந்தவன் அவனே! வந்தவர் தன்னைக் கண்டவர் யாரோ? கண்டவர் செல்வார் கைலாசந்தானே! கைலாசம் என்பது இமயமில்லையே! கயிலை நாதன் இருக்குமிடந்தானே! கடைகோடி தன்னில் இருப்பவன் அவனே! விரைந்திடுவோம் அங்கு! வீழ்ந்திடுவோம் அவர் திருப்பாதம். வினை தீர்க்கும் மன்னன் அவன் – நம்மை விண்ணுக்கு கொண்டு செல்வான்! விந்தையவன் கல்கி தானே! விண்ணையும் மண்ணையும் ஒன்றாக்கி விண்ணவர் கொடி தானேற்றி, வீரத்திலகம் தனதாக்கி வீரமாய் வீற்றிருக்கும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவே! – இறைத்தொண்டர் K. ரவிக்குமார், கோவை —– அன்பின் மறு அவதாரம் ஸ்ரீ லஹரி அய்யா பிரார்த்தனையில் உன் அன்பு தரிசனம் கண்டேன் வந்தவர்கள் அனைவரின் பசி … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து, கவிதைகள்

கிழக்கே தோன்றிய மின்னல் – 9

ஒரு விதை முளைக்கும் வரை பூமிக்கு அடியில் காத்திருப்பதுபோல பாலாசீரின் மனத்தின் ஆழத்தில் ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற சத்திய விதை இது நாள் வரைக்கும் முளைப்பிற்காக காத்துக்கொண்டிருந்தது. மனுஜோதி ஆசிரமத்தின் சத்திய நகரத்தில் முளைத்தெழுந்த ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற ஜீவ விருட்சம் தனது கிளைகளை உலகம் முழுவதிலும் பரப்பி ஆலமரம்போல் தனது விழுதுகளை ஆழமாக இறக்கியுள்ளது. இதனை தொடர்ந்துதான் 1986-ம் ஆண்டு இதை மனுஜோதி ஆசிரமத்தின் பிரதான கொள்கையாக்கினார் பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா. இன்று உலகின் எல்லா திசைகளிலும் ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற தேவனின் தாரக மந்திரம் பலமதங்களின் வேர்களில் வெந்நீர் ஊற்றிக் கொண்டிருக்கிறது. இனி வருங்காலத்தில் என்ன நடக்கும் என்பது பற்றியும் பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா தீர்க்கதரிசனமாக பல செய்திகளை நமக்குத் தந்துள்ளார். சீக்கிரத்தில் தாவீதின் வழித் தோன்றலான கிறிஸ்துவுக்கும் அந்திக்கிறிஸ்துவுக்கும் நேரடி யுத்தம் நடைபெறும். அந்திக்கிறிஸ்துவும் அவனைச் சார்ந்தவர்களும் தோல்வியடைந்து 1000 ஆண்டுகள் சிறைபிடிக்கப்படுவார்கள். இந்த யுத்தத்தில் உலகமெங்கும் 150 கோடி அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுவார்கள். இராட்சத பேரலைகள் வரும். சென்னை மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் தண்ணீரில் மூழ்கும். தேவனுடைய மக்கள் மட்டுமே இந்த அழிவில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள். பூகோள எல்லைகள் மாறுபடும். … Read entire article »

Filed under: பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை

மனிதன் மனிதனாக!!

ஓரறிவு படைத்த பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் சிருஷ்டி நாயகர் யாரென்று தெரியும். ஆனால் ஐம்புலன்கள் மற்றும் ஆறாம் அறிவாகிய சிந்திக்கும் ஆற்றல் படைத்த மனிதனுக்கு சுயாதீனம் அதாவது தெரிந்துகொள்ளும் சக்தி அவனுக்கு கொடுக்கப்பட்டதால் சிருஷ்டி நாயகரை அவனால் அறிய முடியவில்லை. இந்த உலகில் மனிதனுக்கு ஏற்படும் போராட்டம் என்ன? அரசாங்கம், குடும்பம், மனைவி, பிள்ளைகள், சமுதாயம், தொழில் என்பவைகளுக்கு அடிமையாய் இருப்பதா? அல்லது தன்னுடைய சிருஷ்டி நாயகருக்கு அடிபணிவதா? என்பதுதான் இக்கலியுகத்தில் வாழும் மனிதனுக்கு ஏற்படும் போராட்டமாகும். இந்திய இஸ்லாமியர்களாக இருக்கலாம்; இந்திய கிறிஸ்தவர்களாக இருக்கலாம்; இந்திய இந்துக்களாக இருக்கலாம்; ஆனால் நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற தேசீய ஒருமைப்பாடு நமக்குள் இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். உங்களுடைய கெட்ட குணாதிசயங்கள், பழக்க வழக்கங்கள்தான் உங்களை தாழ்ந்த ஜாதியாக்குகிறது. உங்களுடைய நல்ல குணாதிசயங்கள் உங்களை ராஜரீக வம்சமாக்குகிறது. … Read entire article »

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்