தமிழ் | తెలుగు

» Archive

பரந்த மனப்பான்மை

ஒரு ஞானியிடம் ஒரு மனிதர் வாழ்வில் நிறைய கஷ்டங்களை சந்திப்பதாகவும் தொடர்ந்து ஏற்படும் வலிகளை தன்னால் தாங்க முடியவில்லை என்றும் புலம்பினார். ஞானி ஒரு தம்ளரில் ஒரு கைப்பிடி உப்பை போட்டு கலக்கினார். அதை அந்த மனிதரிடம் கொடுத்து குடிக்க கூறினார். அதை குடிக்க முடியாமல் அவர் திணறினார். உப்பு கரிக்கின்றது என்று ஞானியிடம் கூறினார். இப்பொழுது ஒரு ஜாடி தண்ணீரில் ஒரு கைப்பிடி உப்பை போட்டு கலந்தார். அதை அந்த மனிதனிடம் கொடுத்து குடிக்க கூறினார். அவர் அதை குடித்துவிட்டு இதை குடிக்க முடிகிறது. உப்பு லேசாகத்தான் தெரிகிறது என்றார். ஞானி அந்த மனிதனை அருகேயுள்ள ஏரிக்கு அழைத்துச்சென்று அதில் ஒரு ஒரு கைப்பிடி உப்பை போட்டார். பின்னர் அந்த ஏரியின் தண்ணீரை குடிக்கும்படி கூறினார். இந்த தண்ணீர் நன்றாக உள்ளது. உப்பின் சுவை சிறிதளவுகூட தெரியவில்லை என்று அந்த மனிதர் கூறினார். நான் எல்லா தண்ணீரிலுமே ஒரே அளவு உப்பைத்தான் போட்டேன். அதின் தாக்கம் சிறிதளவு தண்ணீரில் அதிகமாகவும், அதிகமான தண்ணீரில் சிறிதாகவும் தெரிந்தது. வாழ்க்கையிலும் நமது வலிகளும், பிரச்சினைகளும் உப்பைப் போன்றது. மனதை விசாலமாக்கி, பரந்த மனப்பான்மை ஏற்படும்போது வலியின் தாக்கம் குறைந்துகொண்டே வரும். ஏரி போன்று மனம் விசாலமானபின் … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

பல்சுவை

தற்காலிக நாகரீகமானது மனிதனின் அன்றாட தேவைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. எடுத்துக்காட்டாக, பறவைகளும், விலங்குகளும் விடியற்காலையில் எழுகின்றன. பிறகு தன்னுடைய அன்றாட உணவைத் தேடுவதில் சுறுசுறுப்பாக ஈடுபடுகின்றன. இரவு வந்தவுடன் மீண்டும் தனது இருப்பிடம் தேடி செல்கின்றன. இதைப்போன்றே நகரத்திலுள்ள மக்கள், தங்களது உணவிற்காக, பெருங்கூட்டமாக ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு பணிபுரியச் செல்கிறார்கள். உண்மையான நாகரிகமானது மனிதனின் அடிப்படை தேவைகளுடன் மட்டும் தொடர்புடையதல்ல. அது மனிதனுக்கும், இறைவனாகிய அந்த மிகவும் உயர்ந்த தந்தைக்குமிடையே உள்ள உறவை அறிந்துகொள்வதற்கானது. அந்த உறவினை ஒருவன் எந்த முறையில் வேண்டுமானாலும் அறியலாம். கிறிஸ்துவம், வேத இலக்கியங்கள் அல்லது குர்-ஆன் என ஏதேனும் ஒரு முறையிலிருந்து அது கற்கப்பட வேண்டும். மனித இனத்தின் கடமை இறைவனுடனான உறவை புரிந்துகொள்வதற்கானது என்பதை தெரிவிப்பதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். இறைவனுடனான உறவை அறிந்துகொள்ளுதல் ஒவ்வொருவருக்கும் அவசியமாகும். இல்லையெனில், ஒருவன் மிருகத்தனமான குணங்களில் ஈடுபட்டு நேரத்தை வீணடித்து விடுகிறான். நாம் அனைவரும் இறைவன்மீது அன்பு செலுத்த முயற்சிக்க வேண்டும். அதற்கு நாம் வேதங்களை படிக்க வேண்டும். சரியான விஷயத்தை எங்கிருந்து வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்று சாணக்கிய பண்டிதர் கூறுகிறார். உதாரணமாக, ஒரு கோப்பையில் நஞ்சும் அமுதமும் சேர்ந்திருந்தால், நஞ்சை விட்டுவிட்டு அமுதை மட்டும் எடுத்துக்கொள்ளுமாறு அவர் கூறுகிறார். … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

தர்மத்தின் நோக்கம்

மனிதப்பிறவி எடுத்து மனித உரு தாங்கி, நடமாடிக்கொண்டிருக்கிறவர்கள் எல்லாரும் மனிதர்கள் அல்ல. இதனை விளக்க ஒரு சம்பவம் குறிப்பிடப்படுகிறது. திருவொற்றியூரில் வசித்த யோகி ஒருவர் ஒரு வீட்டுத்திண்ணையில் அமர்ந்தவாறே தெருவில் நடந்துபோகிற மனிதர்களை இதோ ஒரு பாம்பு செல்கிறது, இதோ ஒரு தேள் போகிறது, இதோ ஒரு நரி செல்கிறது என்று வர்ணித்துக்கொண்டே இருந்தார். இதை தினந்தோறும் கவனித்துக்கொண்டே இருந்த ஒருவன் இவருக்கென்ன மூளை கோளாறோ என்று எண்ணினான். ஒருநாள் அந்த தெருவிலே வள்ளல் பெருமான் நடந்து சென்றார். அப்போது இதோ ஒரு மனிதர் செல்கிறார் என்று அந்த யோகி கூறினார். எப்போதும் யார் சென்றாலும் ஏதேனும் விலங்கு அல்லது ஊர்வனவற்றின் பெயர்களை சொல்லி வர்ணிக்கும் அவர் அன்றைக்கு ஒரு மனிதர் செல்கிறார் என்று கூறியது, அந்த மனிதனுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. உடனே அவன் அந்த யோகியிடம் சென்று அவருடைய செய்கைக்கான காரணத்தை அறிய ஆர்வமாக அவரிடம் கேட்டான். அதற்கு அவர்: “நான் மனிதர்களின் புறத்தோற்றத்தை வைத்து அவர்களை எடைபோடுவதில்லை. எனது ஞான கண் கொண்டு அவரவர் மனதினை அறிந்து, அவர் எந்த தன்மை கொண்டவராக இருக்கிறாரோ அதை வைத்துதான் வர்ணித்தேன். இன்றுதான் மனிதத்தன்மை கொண்ட மனிதர் ஒருவர் நடந்து செல்வதைக் கண்டேன். அதனால்தான் ஒரு … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

புத்தர் காப்பாற்றிய அன்னப்பறவை

புத்தர் என்று அழைக்கப்பட்ட சித்தார்த்தனின் அத்தை மகன் தேவதத்தன் அவரது வயதை ஒத்தவன். அரண்மனை தோட்டத்தில் இருவரும் இணைந்து விளையாடுவார்கள். ஒருநாள் சித்தார்த்தன் அரண்மனை தோட்டத்தில் இருந்தபோது, அவரது மடியில் ஒரு அன்னப்பறவை வந்து விழுந்தது. அதன்மீது அம்பு தைத்து இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. இளகிய மனம் கொண்ட சித்தார்த்தனின் மனம் துடித்தது. அதின் உடலிலிருந்த அம்பை மெதுவாக வெளியே எடுத்து, தனது உடலின்மேல் போர்த்தியிருந்த பட்டுத்துணியை எடுத்து அதில் அன்னத்தை பொதிந்தான். பின் காயத்திற்கு மருந்து தடவி அரண்மனைக்கு அதை எடுத்துச்சென்றான். அப்போது அத்தை மகன் தேவதத்தன் ஓடி வந்தான். அவன் சித்தார்த்தனிடம்: “இது நான் வேட்டையாடிய பறவை, அதை என்னிடம் கொடு” என்று கேட்டான். சித்தார்த்தனுக்கு கோபம் வந்தது. பறவை வலியால் துடிக்கிறது என்று கூறிவிட்டு நடந்தான். தேவதத்தனோ அதை தன்னிடம் தருமாறு அடம்பிடித்தான். ஆனால் சித்தார்த்தனோ அதை தான் குணமாக்கப்போவதாக கூறினான். இருவருக்கும் இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் அவன் தேவதத்தனிடம்: உயிர்களை காயப்படுத்துவது நியாயமல்ல, ஒன்று செய்வோம். இந்த பறவையை நான் கீழே விடுகிறேன். இருவருமே இந்த பறவையை அழைப்போம். அது யாரிடம் செல்லுகிறதோ அவருக்கு பறவை சொந்தம் என்று கூறினான். தேவதத்தனும் அதற்கு ஒப்புக்கொண்டான். சித்தார்த்தன் அன்னப்பறவையை கீழே விட்டான். பிறகு தேவதத்தன் … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

காலதாமதம் எனும் மெதுவாக செயல்படும் விஷம்!

ஒருமுறை இப்படி நடந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பல ஆண்டுகளாக சாத்தான் காத்திருந்தும் நரகத்திற்கு ஒருவர்கூட வரவில்லை. அவர் நரகத்திற்கு வருபவர்களை வரவேற்க காத்துக்கொண்டிருந்தபோதிலும், உலகம் நல்லபடியாக இயங்கிக்கொண்டிருந்ததாலும், மக்கள் நல்லவர்களாக வாழ்ந்து வந்ததாலும் யாருமே நரகத்திற்கு வரவேண்டிய சூழ்நிலையே ஏற்படவில்லை. சாத்தானிற்கு இது மிகவும் கவலையளித்தது. இப்படியே நிலைமை நீடித்தால் நரகத்தை இழுத்து மூடிவிட்டு போய்விட வேண்டியதுதான். எத்தனை நாட்கள்தான் ஒருவருமே இல்லாமல் நரகம் வெறிச்சோடி கிடப்பது? சாத்தானிற்கு இது மிகவும் ‘நரக வேதனையாக’ இருந்தது. வேறு வழியில்லாமல் ‘நரக சபையின்’ அவசரகால கூட்டத்தை உடனே கூட்டினான். கூடியிருந்தவர்களிடம் நிலைமையை சமாளிக்க ஆலோசனைகள் வழங்குமாறு கேட்டுக்கொண்டான். ஒவ்வொருவரும் பல கருத்துக்களை கூறினார்கள். எதுவும் சாத்தானை கவரவில்லை. அப்போது ஒருவன் “சாத்தான் மகா பிரபு! நாம் பூவுலகத்திற்கு சென்று மனிதனிடம் கடவுள் இல்லை என்றும், மதங்கள் எல்லாம் பொய்யானவை என்றும் அவனுக்கு புரியும்படி எடுத்துக்கூறினால் அவன் அதை நம்பி தவறுகள் செய்வான். பிறகு நரகம் நிரம்பி வழிய ஆரம்பித்துவிடும்”என்றான். இதைக்கேட்ட சாத்தான் இது சாத்தியப்படாது என்று நிராகரித்துவிட்டான். இன்னொருவன் எழுந்து சாத்தானை வணங்கிவிட்டு, “அரசே! பூலோகத்திற்கு சென்று மனிதனிடம் வேதங்கள் எல்லாம் உண்மையையே கூறுகின்றன. கடவுள் இருக்கிறார், சொர்க்கமும் இருக்கிறது. ஆனால் சாத்தான் இல்லை, நரகம் என்பதும் … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

பொறாமை

எல்லாவற்றின் மூலமும் இறைவனை பூரணமாக உணர்ந்தவர்கள் மிகச்சிலரே. பெரிய மீசையையும், தாடியையும் வளர்த்துக்கொண்டு மக்களிடம், “நீங்கள் இறைவனுக்கு சமமானவர்கள். இறந்தவுடன் விழித்தெழுந்து இறைவனாகிவிடுவீர்கள்” என்று கூறும் போலி மஹாத்மாக்களை நாம் காண்கிறோம். அவர்களெல்லாம் மஹாத்மாக்களல்ல. உண்மையாக சொல்லப்போனால் துராத்மாக்கள். அவர்கள் கிருஷ்ணரின் நிலையினை ஆக்கிரமித்து, அவருடன் ஐக்கியமாக நினைக்கும் அளவிற்கு, கடுமையான இதயம் படைத்தவர்கள். அலுவலகத்திலுள்ள பணியாளன் தனது எஜமானரின் பதவியை பிடிக்க நினைத்தால், அதை எஜமானர் விரும்புவாரா? அதைப்போலவே இறைவனாக மாற நினைக்கும் உயிர்வாழிகள் அவரால் விரும்பப்படுவதில்லை. இருப்பினும் இறைவனாக மாறுவதற்கான சிலரது வீண் முயற்சிகளை அவர் விரும்புவதில்லை. இதுபோன்று முயற்சி செய்பவர்கள் பகவத்கீதையில் த்வேஷ்ட அதாவது பொறாமையுள்ளவர்கள் என்று விவரிக்கப்படுகிறார்கள்.        தான் அஹம் த்விஷத: க்ரூரான் ஸம்ஸாரேஷு நராதமான்        க்ஷிபாம்யஜஸ்ரம் அஷுபான் ஆஸுரீஷ்வ் ஏவ யோனிஷு பொறாமையுடன் கருணையின்றி இருக்கும் இத்தகைய கடைநிலை மனிதர்களை ஜடவாழ்வு என்னும் கடலில் பல்வேறு அசுர இனங்களுக்குள் நான் நிரந்தரமாக தள்ளுகிறேன். இறைவனின் நிலைமீது பொறாமை கொண்டவர்கள் நரகத்தனமான சூழ்நிலைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதற்கு சான்றாக ஒருவன் வாழ்ந்ததாக விவிலியத்தில் கூறப்பட்டுள்ளது. லூசிபர் என்பவன் இறைவனின் மெய்க்காப்பாளன். அத்துடன் இறைவனின் சிங்காசனத்தை பாதுகாக்கும் பொறுப்பும், பூமியை பார்த்துக்கொள்ளும் பொறுப்பும் அவனுக்கு கொடுக்கப்பட்டது. அவன் மெய்க்காப்பாளனாக இருந்ததினால் அவன் எல்லா … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

பஞ்சதீர்த்தம்

முற்காலங்களில் இறைவனைக் கண்டுகொள்வதற்கும் அவருடைய ஆசிகளைப் பெறுவதற்கும் சில மஹான்கள் வனங்களுக்குச் சென்று தவமிருந்து இறைவனுடைய தரிசனத்தைக் கண்டும், அவரிடம் அநேகமான வரங்களைப் பெற்றும் இருக்கிறார்கள். அவர்களில் அத்ரி முனிவரும் அவருடைய துணைவியாராகிய அனுசுயாவும் இறைவனின் அருளைப் பெற்று, தவ வலிமை வாய்ந்தவர்களாக திகழ்ந்து வந்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மும் மூர்த்திகளின் அம்சமாக உள்ள ஒரு ஆண் குழந்தையை இறைவன் அவர்களுக்கு கொடுத்தார். அக்குழந்தைக்கு அவர்கள் தத்தா என பெயரிட்டனர். பிற்காலத்தில் அவரின் மகிமைகளைக் கண்ட மக்கள் அவரை குருதத்தா என அழைத்தனர். அக்காலத்தில் ஜமதக்னி என்ற முனிவர் தன் மனைவி மக்களுடன் வனத்தில் வாழ்ந்து வந்தார். அவரிடம் கேட்டவற்றை எல்லாம் அருளும் காமதேனு என்ற பசுவும் இருந்தது. ஒருமுறை குருதத்தாவின் அருளைப் பெற்ற காத்தவீரியன் என்ற சக்கரவர்த்தி வேட்டையாட தன் படைபரிவாரத்துடன் காட்டிற்கு வந்த சமயம் ஜமதக்னி முனிவரைச் சந்தித்தார். அப்பொழுது ஜமதக்னி, காமதேனு என்ற பசுவின் உதவியால், காத்தவீரியனுக்கும் அவனது படைபரிவாரத்திற்கும் ராஜமரியாதையுடன் கூடிய பெரிய விருந்தளித்தார். அதனைக் கண்ட சக்கரவர்த்தியும் அந்த பசுவைத் தனதுடைமையாக்கிக் கொள்ள வேண்டுமென்ற தீய எண்ணத்துடன் அவர்களுடைய தவ வலிமையையும் சிந்தித்துப் பார்க்காமல், குருதத்தாவின் ஆசியைப் பெற்றவன் என்ற கர்வத்தினால் அந்தப் பசுவை பலவந்தமாக தன் அரண்மனைக்கு … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

வாசகர் கடிதம்

பேரன்புடையீர், என்மேல் அன்புகூர்ந்து தவறாது மனுஜோதி இதழை அனுப்பி வைப்பதற்கு தங்களுக்கு முதற்கண் என் இதய பூர்வ நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆகஸ்ட்-செப்டம்பர்-அக்டோபர் 2016 “மனுஜோதி” இதழில் இடம்பெற்ற கட்டுரைகள் ஒவ்வொன்றும் சமயம், பக்தி, வழிபாடு சம்பந்தப்பட்ட பல்வேறு உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளன. இது வெறும் முகஸ்துதி அல்ல, அதிலும் “நம்பினால் நம்புங்கள்! எது நிலையானது, சிற்றின்பமா? பேரின்பமா?”கட்டுரை அற்புதம், அதி அற்புதம், மகா அற்புதம்! நிகழ்கால மக்களின் அவலங்களை (என்னையும் சேர்த்துதான்) அப்படியே படம் பிடித்து காட்டுகிறது. தங்களுக்கு நன்றி. – ராம முத்தையா, மலேசியா ✡✡✡ ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். மனுஜோதி இதழ் கிடைத்தது. நானும் படித்து அதை எல்லோருக்கும் விநியோகமும் செய்துகொண்டிருக்கிறேன். எல்லா மதத்தின் கருத்துக்களையும் சிறப்பாக எழுதி உள்ளீர்கள். ஒன்றே குலம் என்பது மனித குலம் வாழ சிறந்த கொள்கை. அது மாறினாலே மனிதன் மனிதனாக மாறிவிடுவான். தங்களின் பணி என்றும் சிறப்பாக தொடரட்டும். மனிதனை மனிதனாக உருவாக்குங்கள். அதில் சொர்வடையாதீர்கள். நான் லஹரி அய்யாவை நேசிக்கிறேன். அதினால் சிறப்பாக இருக்கிறேன் என்பதே உண்மை. அதை மறுக்க முடியாது. – இரா. சண்முகவேல், திருநெல்வேலி ✡✡✡ தாங்கள் அனுப்பி வரும் மனுஜோதி இதழை பெற்று, அதில் வரும் நீதிக்கதைகளையும் மற்றும் தேவனாகிய கர்த்தர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகளையும் படித்து … Read entire article »

Filed under: வாசகர் கருத்து