தமிழ் | తెలుగు

» Archive

உண்மைக்கு திரையிட்டால்…

உண்மை என்பது வெளிச்சம் நிறைந்தது. அது எல்லாவற்றையும் காண்பித்துவிடும். உண்மை தன்னை வெளிக்காட்டாது, அதை மூடி மூடி வைக்க பெரும் வலிமை பொருந்தியதாக உருமாறி, அதை மூடிய திரையினையே கிழித்தெறிந்து வெளிவரும். மக்கள் தம்மால் உண்மைக்கு சற்றும் மாறாமல் தலைசாய்க்க முடியாத பட்சத்தில்தான், அவரவர் தன் மனம் ஒப்பும் செயல்களை வழிமுறைகளாக்கி விடுகின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செய்தி ஏடுகளில் நிறைய மதத்தை நேசித்து போற்றும் பெரிய மனிதர்களும், பண்டிதர்களும் உண்மைகளை உரைக்காமல் அதை மறைத்து யாருக்கும் புரியாதபடி பேசுகின்றனர். அழகிய நடையில் கோர்க்கப்படும் செய்திகளில் மயங்கி, சிந்திக்கும் திறனற்று போகின்றனர் மக்கள். இறைவன் பற்றின மெய்யான செய்திகளுக்கு திரையிட்டு மாய பிரதிபலிப்பை கொடுக்கின்றனர். அந்த மாயை எவ்வளவு விசித்திரமானதோ, அதைவிட விசித்திரத்தை திரையை கிழித்தால் உண்மையை வெளிக்காட்டும். அந்த மாயையில் மயங்கிய மக்கள் எதைப்பற்றியும் சிந்தியாது போகின்றனர். இறைவன் பற்றிய ரகசியங்களை வெளிப்படுத்தாமலும், உண்மைதனை பொய்யான ஒரு திரையால் மறைத்துவைத்து, பின் அதை கண்டாலும் அந்த மெய்மை தனக்குரிய பொலிவை இழக்காது. எந்த காலத்தாலும் அதை கலங்க செய்ய முடியாது. கலங்க செய்ய கருதியவரே முகத்தில் கரியிட்டு திரிவர். உண்மைகள் எப்போதுமே அடக்கத்தோடு பொறுமையாக வெளிவரும். வதந்திகள்தான் அழகு மிளிர பவனி வரும். – D. கிருத்திகா, T. … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

கடிதம்

பேரன்புடையீர், மனுஜோதி மே–ஜுன்–ஜூலை 2016 இதழ் கிடைத்தது. ஆன்மீக வழியை அறிந்து, உணர்ந்து வளமுடன், நலமுடன், மகிழ்வுடன் வாழ ஆர்வத்துடன் முயற்சிக்கும் அனைத்து மதத்தினரும் அன்புடன், சமபாவத்துடன் விருப்பு வெறுப்பின்றி ஒரு வரி விடாமல் தொடர்ந்து படிக்கும் மற்றும் படிக்க வேண்டிய ஆன்மீக இதழ் மனுஜோதியாகும். பயனுள்ள பல புதிய தகவல்கள், பரந்த மனம் விழிப்பு தரும் கட்டுரைகள், குறிப்புகள் கொண்டதாகும். உங்களது உயர்ந்த சேவைக்கு நன்றி. ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் திருவடிக்கு நமஸ்காரங்கள். தொடரட்டும் தொண்டு மேலும் சிறப்பாக!  – கு. துரைசாமி ஐயர், திருவள்ளூர்  வணக்கம். தங்கள் சேவைக்கு இறைவன் துணை இருப்பான், தைரியத்துடன் மேலும் தாங்கள் சேவை செய்ய தங்களுக்கு பூரண ஆரோக்கியம் அளிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். மிக்க நன்றி! வாழ்க வளமுடன்!  – Dr. S.N. முரளீதர், ஈரோடு  “மனுஜோதி” பத்திரிக்கையில் ஆன்மீக செய்திகளோடுகூட “பனைமரத்தின் சிறப்பு”மற்றும் நமது தாமிரபரணி நதியின் சிறப்பை பற்றி “வற்றாத ஜீவநதி”, “சிருஷ்டிப்பிலுள்ள அதிசயங்கள்”, “நிகழாண்டில் 5 சூரிய சந்திர கிரகணங்கள்” பற்றிய அரிய ஆக்கப்பூர்வமான தகவல்களையும் மனுஜோதி மே–ஜுன்–ஜூலை-2016 இதழில் வெளியிட்டு, பலரும் அறியும் வண்ணம் பெருமை சேர்த்து விட்டீர்கள். பாராட்டுக்கள், நன்றி!  – இரா. நல்லகண்ணு, பாளையங்கோட்டை  இந்த … Read entire article »

Filed under: வாசகர் கருத்து

அகில இந்திய ஆன்மீக சுற்றுப் பயணம் – 3

சென்ற இதழில் கடந்த வருடம் நாங்கள் சென்ற முதலாவது ஆன்மீக சுற்றுப்பயணத்தின் விவரங்களை முழுமையாகவும், சுருக்கமாகவும் தெரிந்து கொண்டோம். வாசகர்களாகிய நீங்கள் அடுத்த பயணத்தைக் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள ஆவலுடன் இருப்பதை நீங்கள் எழுதிய கடிதங்கள் மூலமாக தெரிந்துகொண்டோம். எல்லா எழுத்தாளர்களையும் போல இயற்கையையும் மற்றும் நாங்கள் கண்ட காட்சிகளை வர்ணித்து கூறாததற்கு காரணம் இது ஒரு ஆன்மீக இதழாகவும், எல்லாவற்றையும் படைத்த அந்த ஒரே இறைவனின் தொண்டாகவும் இருப்பதால் அவருடன் இணைத்து எதையும் வர்ணிக்க முடியாது. உதாரணமாக ஒரு கதையைப் பார்ப்போம். ஒரு ஊரில் மூன்று பக்தர்கள் இருந்தார்கள். அவர்களுக்குள் ஒரு சிறு வாக்குவாதம் வந்தது. அதில் ஒருவன் மது மிகவும் அருமையானது என்றான். மற்றொருவனோ, மதுவை விட மாதுவே அழகானது என்றான். அந்த மூன்றாம் பக்தனோ நீங்கள் இருவரும் சொல்வது சரியல்ல. இவையெல்லாவற்றையும் விட இதை எல்லாவற்றையும் படைத்த இறைவனே அழகானவன், அவருக்கு நிகர் வேறொன்றும் இல்லை என்றான். இந்த இரண்டாவது ஆன்மீக சுற்றுப்பயணம் 2015, ஆகஸ்டு 15-ம் தேதி தொடங்கலாம் என முடிவெடுத்தோம். ஆகஸ்டு 15-ம் தேதி என்று சொல்லும்போது அது பாரத நாட்டின் சுதந்திர தின நாளாகும். அதுமட்டுமல்லாமல் மனிதனாக அவதரித்த ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் உலகப்பிரகாரமாக, … Read entire article »

Filed under: ஆன்மீகச் சுற்றுபயணம்

சிருஷ்டிப்பிலுள்ள அதிசயங்கள் – 8

மரங்களில் ஓர் அதிசயம்! ஆப்பிரிக்காவை அடையாளப்படுத்திக் காண்பிக்க வேண்டும் என்றால் பாவோபாப் மரங்களைக் காட்டினால் போதும். அந்த அளவுக்கு உலகப் புகழ்பெற்றது பாவோபாப் மரம். இவை பருமனாகவும், கிளைகள் வளர்ந்தும் வளராதது போல காணப்படும் வித்தியாசமான உருவ அமைப்பைக் கொண்டவை. அமெரிக்காவின் மடகாஸ்கரில் 6 இனங்கள், ஆப்பிரிக்காவில் 2 இனங்கள், ஆஸ்திரேலியாவில் ஓர் இனம் என 9 இனங்கள் இருக்கின்றன. இந்தியாவிலும், இலங்கையிலும் ஓரிரு இடங்களில் இந்த மரங்களைப் பார்க்க முடியும். 5 மீட்டர் முதல் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. இதனுடைய சுற்றளவு 10 மீட்டர் முதல் 20 மீட்டர் வரை இருக்கும். இவை ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் வாழக்கூடியவை. பழங்காலத்தில் மிகப்பெரிய மரங்களாக இருந்திருக்கின்றன. ஜிம்பாவேயில் ஒரு மரத்தைக் குடைந்து, 40 மனிதர்கள் அதில் வசித்திருக்கிறார்களென்றால் மரத்தின் அளவை கற்பனை செய்துகொள்ளுங்கள். வருடத்தில் 9 மாதங்கள் பாவோபாப் மரங்களில் இலைகளே இருக்காது. அதனால் மரத்தை தலைகீழாக நட்டு வைத்தது போல தோற்றத்தில் இருக்கும். மரத்தின் உட்பகுதி 15 மீட்டர் வரை மென்மையான நார்களால் நிரம்பியிருக்கும். அதில் சுமார் 1,20,000 லிட்டர் தண்ணீர் வரை சேமித்து வைத்திருக்கும். தண்ணீர் சரிவர கிடைக்காத காலத்தில் உயிர் வாழ இந்த சிறப்பைப் பெற்றிருக்கின்றன. ஆப்பிரிக்க மக்கள், பாவோபாப் … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்

புரந்தரதாஸர்

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! இறைவன் இசை வடிவானவன், நாதப்பிரம்மம் என்று சொல்லுகிறோம். “ஏழிசையாய் இசைப்பயனாய்”விளங்குகிறான் சிவ பெருமான் என்று பேசுகிறது திருமுறை. இறைவன் ஸ்ரீமந் நாராயணன் நாத முனிவரிடம், “நாஹம் வஸாமி வைகுண்டே நயோகி ஹ்ருதயே ரவெள மத் பக்தா: யத்ர காயந்தி தத்ரதிஷ்டாமி நாரத” என்றாராம். அதாவது, “நான் வைகுண்டத்திலும் இல்லை. ‘யோகிஹ்ருத்யான கம்யம்’ என்று சொல்லுகிறார்களே அந்த யோகிகளின் இதயத்திலும் இல்லை. என் மெய்யடியார்கள் எங்கெங்கெல்லாம் பாடுகிறார்களோ அங்கெல்லாம் நான் உறைகின்றேன்” என்றவுடன் நாரதர் மெய்சிலிர்த்தார். கலியுகத்திலே கானத்தின் மூலம் முக்தி அடையலாம் என்பதை மக்களிடையே வற்புறுத்த வேண்டும் என்று நினைத்தார். ‘பிறந்து பிறந்து உன் புகழ் பாட வேண்டும். ஆதலால் பிறவி வேண்டேன் என்பானேன்? உன் புகழைப் பாடிப் பயன் பெறுவதினால் மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே’ என்று நினைத்தார். நம்முடைய வீடுகளில் சின்னஞ்சிறு குழந்தைகள் சங்கீதம் பயிலுகிறார்கள். சுருதியுடன் சேர்ந்து மாயாமாளவகௌள ராகத்திலே குழந்தை தன் மெல்லிய குரலால் “ச ரி க ம ப த நி ச” என்று ஸ்வராவளியைப் பாடுகிறாள். அந்த ஸ்வரங்கள் ஒன்றுடன் ஒன்று அடுத்து அமைந்திருப்பதனால் குழந்தை சுலபமாக ஸ்வர ஸ்தானங்களைப் பயில முடிகிறது. “72 மேள கர்த்தாக்களிருக்க இந்த அருமையான ராகத்தில் ஸ்வராவளிகளை அமைத்துக் கொடுத்தது யார்?” … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்

எது நிலையானது சிற்றின்பமா? பேரின்பமா?

நம்பினால் நம்புங்கள்! வரிசை எண்: 18 ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! இந்த உலகம் பாதுகாப்பானது, நித்திய இன்பம் இங்கே இருக்கிறது, நிரந்தரமாக இங்கே சந்தோஷமாக வாழலாம் என மனிதன் நினைக்கிறான். மனித வாழ்க்கை என்பது உண்ணுதல், உறங்குதல், இனப்பெருக்கம், தற்காப்பு என்று ஒரு மிருகத்தின் வாழ்க்கையை ஒத்ததல்ல. மனிதர்கள் இத்தகைய நிரந்தரமற்ற நிலையை விட்டு மேலான நிலைக்கு செல்ல வேண்டும். இப்பொழுது விஞ்ஞான முன்னேற்றத்தினால் எல்லோருடைய கைகளிலும் செல்போன் மற்றும் எல்லோருடைய வீடுகளிலும் தொலைக்காட்சிப்பெட்டி, லேப்டாப், வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர் மற்றும் பல ஆடம்பரமான பொருட்களும் இருக்கின்றன. இன்றைய மக்கள் அவற்றை வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்கள் என எண்ணி, அவை இருந்தால்தான் நாம் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழ முடியும் என்ற தவறான எண்ணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். பொதுவாக ஒவ்வொருவரும் தங்களது பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக அரும்பாடு பட்டு உழைக்கிறார்கள். வாழ்வின் உண்மையான குறிக்கோள் இறைவனின் திருநாட்டிற்கு திரும்பி செல்வதில்தான் உள்ளது என்பதை அறியாமல் இருக்கிறார்கள். புலன்களை திருப்தி செய்வதற்கு மக்கள் பெருமளவில் முயற்சி செய்தபோதிலும் அதில் அவர்களுக்கு என்றுமே திருப்தி கிடைக்காது. ஸ்ரீ கிருஷ்ணர் பகவத்கீதையில் இந்த உலகத்தை துக்காலயம் அஷாஸ்வதம் அதாவது துன்பம் நிறைந்த தற்காலிகமான இடம் என்று வர்ணித்துள்ளார். இன்றைய உலக நிலவரத்தின்படி … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

கருத்து

அன்புடையீர், வணக்கம். ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அருள் மழை பொழியும் மனுஜோதி மே–ஜூன்–ஜூலை 2016 இதழ் படித்தேன். மனுஜோதி ஆசிரம நிகழ்வு மற்றும் ஆன்மீக சுற்றுலா படங்கள் மிகவும் அருமையாக இருந்தன. அறன் வலியுறுத்தலை வலியுறுத்தும் “தலையங்கம்”மிக அற்புதம். வர்த்தமான மகாவீரரின் ஜைன மதத்தை சார்ந்தவன் நான் என்பதனால் அவரைப்பற்றி “பொறுமையின் உருவம்”என்ற கட்டுரையில் பகவான் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா சுட்டியபாங்கு நெஞ்சில் நின்றது. “ஆன்மீக புலன்கள்” அற்புதமான கட்டுரை. ஸ்ரீமத் பகவத்கீதையின் பரமாத்மாவே நம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா என்பது வெள்ளிடைமலை. மனுஷகுமாரன் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாதான் என்பதனை நான் முழுமையாக நம்புகிறேன். 1969-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் விஸ்வரூபத்தை என் மனக் கண்முன் கொண்டு வந்து ஆராதித்து மெய் சிலிர்க்கிறேன். “சாந்தியளிக்கும் ஆன்மீகம்” மனதில் தெளிவை தருகிறது. எல்லா புகழும் இறைவனுக்கே என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். பரம்பொருள் வாழும் இப்பூமியில் ஆத்மாவை தேடும் காலத்தில் “அகில இந்திய சுற்றுப்பயணம்” ஓர் வரப்பிரசாதம். “தக்ஷிணாமூர்த்தி” என்ற கட்டுரையில் சிவபெருமானுக்கு ருத்ரன் என்ற பெயருள்ளது என்ற உண்மையை உணர்ந்தேன். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதே பகவான் ஸ்ரீ லஹரியின் உன்னத … Read entire article »

Filed under: வாசகர் கருத்து

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அய்யா

ஒன்றே குலமும் ஒருவனே தேவன் என உணர்ந்திட நன்றாக அழைக்கின்றார் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அய்யா மத வெறியும் இன வெறியும் இல்லாமல் மக்கள் வாழ்ந்திட மனுஜோதிக்கு அழைக்கின்றார் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அய்யா உத்தம மார்க்கத்தில் வாழவேண்டும் என்றால் சத்திய நகருக்கு அழைக்கின்றார் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அய்யா கொலை, களவு, கள், காமம், கோபத்தை மறந்திட தலையாய நகருக்கு அழைக்கின்றார் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அய்யா எல்லோரும் வாழ்ந்து பேரின்பம் பெற்றிட நல்லோர்கள் வாழ்ந்திட அழைக்கின்றார் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அய்யா – புலவர் திருக்குறள் இரா. நடராசன், தென்காசி ✡✡✡✡✡✡✡ … Read entire article »

Filed under: கவிதைகள்