தமிழ் | తెలుగు

» Archive

கடவுளின் வருகைபற்றி வள்ளலார் கூறுவது என்ன? – 6

கர்மயோகி அல்லது கடவுளை கிரஹித்து உணர்ந்த ஓர் பக்தனின் குணங்களாக வள்ளலார் கூறுவது என்ன? சென்ற இதழின் தொடர்ச்சி….. பாங்கி தலைவி பெற்றி உரைத்தல்: திருவருட்பா 6-ம் திருமறை (வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்ள வசதியாக இப்பாடல் பதம் பிரித்து எழுதப்பட்டுள்ளது). பாடல் எண் 1064: ஊராசை உடலாசை உயிர் பொருளின் ஆசை                   உற்றவர் பெற்றவராசை ஒன்றுமிலாள்……. ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் 29-வது சுலோகத்தின் கருத்திற்கு கவிஞர் கண்ணதாசன் கவிதை நடையில் கூறும் விளக்கம்: காசு சேர்த்த மனிதர் என்றும்             கள்வருக்கு அஞ்ச வேண்டும்             கண்ணை மூட முடிவதில்லையே!             கட்டி வந்த மனைவி அஞ்சி,             பெற்றெடுத்த பிள்ளை அஞ்சி             கண்டவர்க்கும் அஞ்சல் தொல்லையே!             காசு என்ற வார்த்தை என்றும்             குற்றமென்ற அர்த்தம் சொல்லும்             காண வேண்டும் உனது நெஞ்சமே             காசினிக்கச் சேர்த்த பின்பு             காசினிக்கு நீ பகைவன்             கால முற்றும் தோன்றும் வஞ்சமே!             மாசிலாத செல்வம் அந்த             மாயவனின் குழலிருக்க             வரவு தேடி என்ன இன்பமே             வாள் முனைக்குளே இருந்து             நூல் முனைக்கு வித்தெடுத்த             மன்னன் தனைப் பாடு மனமே திருக்குறள்: பாடல் எண் 755: “அருளொடும் அன்பொடும் வாராப் பொருள் ஆக்கம் புல்லார் புரளவிடல்” அருளோடும் அன்போடும் பொருந்தி வராத செல்வத்தைப் பெற்று மகிழாமல், அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும். பாடல் … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

வாசகர் கடிதம்

பேரன்புடையீர், மனுஜோதி பிப்ரவரி-மார்ச்-ஏப்ரல் 2016-ன் காலாண்டிதழை கண்ணுற்றேன். முதல் பக்கத்திலுள்ள “ஆசிரியரின் அன்புக் கடிதத்திலிருந்து”, இறுதி பக்கத்திலுள்ள “சிருஷ்டிப்பிலுள்ள அதிசயங்கள்” வரை 34 பக்கங்களும் முத்துக்கள் கோர்த்த மிக உயர்ந்த மாலையெனத் திகழ்கின்றது. “ஐம்புலன்களுடைய ஜீவராசிகளிடமிருந்து ஆறறிவு படைத்த மனிதன் கற்க வேண்டிய பாடங்கள்” மிகவும் அருமையாக இருந்தது. “கிழக்கே தோன்றிய மின்னல்” தொடர் பெருமை மிக்க பகுதியாகும். “கீதாஞ்சலி” தொடர், “ஷோஃபார்” தொகுப்பு இரண்டுமே எழிலோவியங்கள் ஆகும். ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களின் “முட்களும் ரோஜாவும்” விளக்கம், “ஸ்ரீ ஜனாபாய்” “ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!” தொடர், “மதங்களை இணைத்த மகாகவி”, “நான்கு திறமைகள்” பற்றி கூறும் புதுச்சேரி K. நாகராஜ் சம்பவ நிகழ்வுகள் என மனுஜோதி விண் சுடரென ஒளி வீசுகின்றது. ஆறு “கவிதைகள்” அறுசுவை அமிழ்தங்கள். தொடர்க நும்பணிகள்! – இலக்கியச்சுடர் இறைமறைதாசன் Dr. M.A.M. தாஜுதீன், சென்னை Y Y Y அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். வாசகர் குரலில் இடம் பெற்ற பண்ருட்டி தி. மேகநாதன், தஞ்சாவூர் ஆர். செந்தமிழ் செல்வி, கன்னியாகுமரி எஸ். பிச்சைப்பிள்ளை, விழுப்புரம் ஜி. சுகாசினி. நெல்லை சு. பொருநை பாலு அவர்களின் “கடிதங்கள்” மிகவும் அருமையாக இருந்தது. திருவாரூர் வீ. உதயகுமாரன், சென்னை பொதிகை. … Read entire article »

Filed under: வாசகர் கருத்து

அகில இந்திய சுற்றுப் பயணம்

சென்ற இதழில் தொடர்ந்து நடைபெற்ற பயணத்தின் சில நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டோம். இது தொடர்ந்து வர காரணம் என்னவென்றால் உலகெங்கிலும் இல்லாத அளவுக்கு இறை பக்தியானது இந்தியாவில்தான் அதிகமாக இருப்பதைப் பார்க்கலாம். இருந்தபோதிலும் இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், மற்ற மதத்தினரும் இறை பக்தியை உடையவர்களாக இருந்த போதிலும் அந்த ஒரே இறைவன் யார் என்று தெரியாமலேயே வணங்கி வருகின்றனர். அது போன்று நம் நாட்டினருக்கு அனைத்து வேதங்களின் வாயிலாக சொல்லப்படும் ஒரே இறைவன் யார்? என்ற இறை ஞானத்தை பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், அனைத்து வேதங்களையும் நம் நாட்டினர் வாசித்து அந்த ஒரே இறைவனின் கீழ் ஒன்றுபடுவார்கள் என்ற உயரிய நோக்கத்துடன் இந்த பயணக் கட்டுரையும், பயணமும் ஆகும். தொடர்ந்து பயண நிகழ்வுகளை பார்க்கலாம். சீக்கீமை (கேங்டாக்) தொடர்ந்து நாங்கள் பீகார் மாநிலத்தை நோக்கி எங்களுடைய காரில் பயணமானோம். அதிக மலைப் பகுதிகளிலும் அதிக குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவிய அந்த பகுதிகளைக் கடந்து ஒரு நிலப்பரப்பான பகுதிக்கு வந்ததும் கடினமான பாதைகளைக் கடந்து வந்துவிட்டோம் என்ற உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது. இவ்விதமாக பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னா வந்து சேர்ந்தோம். அதே நேரத்தில் ஆந்திராவில் இருந்து மற்றொரு காரில் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் … Read entire article »

Filed under: ஆன்மீகச் சுற்றுபயணம்

பொறுமையின் உருவம்

சமணமத தீர்த்தங்கரரான மகாவீரர் அஹிம்சையின் உறைவிடமாக திகழ்ந்தார். கொல்லாமையே அவர்கள் முக்கிய உபதேசமாகும். அவர் ஒருமுறை நடந்து சென்றபோது, திடீரென சில முரடர்கள் அவரை சூழ்ந்துகொண்டு தாக்க ஆரம்பித்தனர். தூய்மையே வடிவான துறவி ஒருவரை சிலர் அடித்து உதைப்பதைப் பார்த்தார் ஒருவர். அவருக்கு மனம் பொறுக்கவில்லை. உடனே ஓடிச்சென்று அந்த முரடர்களை தடுத்தார். பிறகு மகாவீரரை நோக்கி: சுவாமி இவர்கள் இவ்வளவு அடித்தும் தாங்கள் இப்படி பேசாமல் நிற்கிறீர்களே! அவர்கள் அடிப்பதை தடுக்கக்கூடாதா? என்று கேட்டார். மகாவீரர் அமைதியாக அவர்கள் அடித்ததற்கு ஏதேனும் காரணம் இருக்கும். என்மீது அவர்களுக்கு கோபமோ, துவேஷமோ ஏற்பட வாய்ப்பில்லை. ஒருவேளை அவர்களுக்குள்ளே இருக்கும் கோபத்தை எவரிடமாவது காண்பிக்க வேண்டிய நிலையில் அவர்கள் இருந்திருக்கலாம். நான் தடுத்திருந்தால், வேறு யாரையாவது தேடிச்சென்று அடித்திருப்பார்கள். மொத்தத்தில் அவர்களின் கோபம் தணிய நான் உதவியாக இருந்திருக்கிறேன். அதுபோதும் எனக்கு என்றார். பொறுமையின் உருவம் மகாவீரர் என்பதை இச்சம்பவம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறதல்லவா? பொறுமையைப் பற்றி ஸ்ரீ லஹரி கிருஷ்ணா இவ்வாறு கூறுகிறார்: “உங்களிடம் இறைவன் இருக்கிறார் என்று கூறுகிறீர்கள். உங்களிடம் பொறுமை இல்லையென்றால், நீங்கள் எப்படிப்பட்ட மனிதன்? நீங்கள் ஒரு மிருகம் என்று அர்த்தமாகும். வெறுமனே மன்னிப்பு கேட்டால் அது உங்களுக்கு மன்னிக்கப்படாது. நீங்கள் மனம் … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

பனைமரத்தின் சிறப்பு

ஒரு பனைமரத்திலிருந்து ஒரு வருடத்திற்கு பதநீர் 180 லிட்டர், பனை வெல்லம் 25 கிலோ, பனஞ்சீனி 16 கிலோ, தும்பு (மிதியடி பிரஸ் தயாரிக்கப் பயன்படுகிறது) 114 கிலோ, ஈக்கு 2.25 கிலோ, விறகு 10 கிலோ, நார் 20 கிலோ அளவுக்கு கிடைக்கிறதென்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். தென்னை மரத்தையும், பனைமரத்தையும் ஒப்பிட்டால் பனைமரத்தில்தான் நிறைய பலன் உண்டு. பனங்கருப்பட்டி தான் கிராம மக்களுக்கு ஏற்றது என்று பொருளாதார மேதை தெரிவிக்கிறார். இத்தனை சிறப்புகளை கொண்டதாக பனைமரம் விளங்குவதால் நீதிமான் அல்லது இறைவனின் நீதியைப் பின்பற்றுபவன் பனையைப்போல செழித்திருப்பான் என்று விவிலியத்தில் கூறப்பட்டுள்ளது. பனங்காட்டில் பனைமரத்திற்கு யாராவது தண்ணீர் ஊற்றுகிறார்களா? யாராவது அதற்கு பாத்தி எடுக்கிறார்களா? இல்லை. இறைவனே அதை செழிக்கும்படி செய்கிறார். இறைவன்மேல் சார்ந்து வாழ்பவர்களுக்கும் இறைவனே எல்லாவற்றையும் அருளுகிறார் என்ற கருத்தை “பனைமரம்” மனித குலத்திற்கு ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறியுள்ளார்கள். தமிழ்நாட்டில்தான் பெரும்பாலும் அநேக பனைமரங்கள் தென்படுகின்றன. ✡✡✡✡✡✡✡ … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

சிந்தனை செய் மனமே!

மனம் ஒரு அழகிய தெளிந்த நீரோடைபோல அதன் அடியில் படிந்துள்ள எந்த சிந்தனையையுமே நம்மால் மட்டுமே உணர முடியும். பல நேரங்கள் மனதின் எண்ணங்களுக்கு கீழ்ப்படிய மறுத்து தவறு செய்கிறோம். பல நேரங்களில் மனம் செல்லும் பாதையில் அதை விட்டுவிட்டு தவறு செய்கிறோம். அதன் நன்மை, தீமைகளை ஆராய்ந்து செயல்காண துணிவின்றி அதை நாம் குழம்ப செய்து விடுகிறோம். உலக துன்பங்களிலிருந்து நம்மை விடுவிக்கும் அருமருந்து கடவுள்தான். ஆனால் கடவுளை கண்டுகொள்ள மனம் அஞ்சுகிறது. ஏன்? அந்த மனதில் வேறு ஏதோ கோளாறு இருக்கிறது. அதனால் கடவுளை ஏற்க முடியாது மனம் தடுமாற்றம் கொள்ளுகிறது. அந்த தவறு என்னவென்று சிந்தித்து விரட்ட மனம் தெளிய வேண்டும். நம்மை சுற்றி நிகழ்ந்து கொண்டிருப்பவை நமக்கு உலகை புரிய வைக்கிறது. மனமே உனக்கு அதில் அமைதி உள்ளதா? தெளிவான மனம்தான் எல்லோருக்கும் நம்மை சுற்றி நடப்பவைதான் அதை குழப்பி அசுத்தமாக்குகிறது. அப்போது அந்த அசுத்தத்தை விட்டு வெளியே வருவதுதான் அறிவுடைய செயல் அல்லவா? செல்லும் பாதை தவறானதாயும் இக்காலத்தில் அதற்குதான் ஆதரவு உண்டு. பாதை நன்று எனில் அதை கண்டெடுத்து பாரார். அதற்கு எவருமிலர். நாம் பயணிக்கும் பாதையில் தடைகள் குவிகிறதாயினும் நீ போகும் பாதை சரியென அங்ஙனமே கண்டுகொள்! நம் … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

ஆன்மீக ஜோதி மனுஜோதி

இறைவன் ஜோதிமயமானவன் என்று எல்லா மதங்களும் கூறுகின்றன. ஜோதி என்றால் ஒளி என்றுதான் பொருளாகும். சூரிய ஒளி பூமிக்கு கிடைப்பதால்தான் பூமியில் இரவு, பகல் என்ற வேறுபாடு ஏற்படுகிறது. ‘வெளிச்சம் உண்டாகக்கடவது’ என்று இறைவன் கூறியபோது இறைவன் ஒரு உருவமாக தோன்றினார். எனவே ஒளி என்ற சொல் இறைவனைக் குறிக்கும். நம் மனதிலுள்ள இருளை விலக்குபவனும் இறைவனாவார். இறைவன் ஜோதிமயமானவன் என்பதால்தான் இந்துக்கள் சபரி மலைக்குச் சென்று மகரஜோதியை காணச் செல்லுகிறார்கள். வள்ளலாரும் இறைவன் ஜோதிமயமானவன் என்கிறார். அதனால்தான் அவர் இறைவனை “அருட்பெருஞ்ஜோதி” என்கிறார். வேதங்கள், புராணங்கள், புனித நூல்கள் அனைத்தும் இறைவனை ஜோதி வடிவமாகத்தான் பார்க்கிறது. இந்துக்கள் தீபங்கள் ஏற்றி ஜோதியைக் காண்கிறார்கள். கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி ஜோதியைக் காண்கிறார்கள். அதனால்தான் பகவான் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவும் தனது ஆன்மீகம் வளர்க்கும் ஆசிரமத்திற்கு “மனுஜோதி” என்று பெயரிட்டார். அவர் அமைத்த மனுஜோதி ஆன்மீக ஜோதியாக இன்று உலகெங்கும் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. அந்த ஒளியில் நாம் இறைவனைக் காண்போம். – தூத்துக்குடி பாலு ✡✡✡✡✡✡✡ … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

பிரசாதம்

கோவில்களில் இறைவனுக்கு உணவை நைவேத்தியம் செய்த பின்னர் அதை பக்தர்களுக்கு வழங்குகின்றனர். அதை நாம் ‘பிரசாதம்’ என்று கூறுகிறோம். பிரசாதம் என்றால் இறைவன் தன் விருப்பத்தின்படி இலவசமாக எந்த எதிர்பார்ப்புமின்றி வழங்கிய அனைத்துமே பிரசாதம் என்பதைத்தான் குறிக்கிறது. அநேக வருடங்கள் குழந்தைப்பேறு இல்லாமல், இறைவனின் அருளினால் குழந்தை பிறந்தால் அவர்களுக்கு “பிரசாத், ராம்பிரசாத், ஹரிபிரசாத், கிருஷ்ண பிரசாத், சிவபிரசாத், ஸ்ரீ பிரசாத், குரு பிரசாத்” என்று பெயரிடுகிறார்கள். குழந்தைப்பேறு என்பது இறைவனின் அருளால் கிடைக்கிறது என்று விவிலியத்தில் கூறப்பட்டுள்ளது. சங்கீதம் 127:4: “இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்”. இயற்கை, காற்று, தண்ணீர், உடல், புத்தி, ஞானம், தாலந்துகள் இவையெல்லாம் இறைவனின் பரிசாகும். சிறுவயதில் நல்ல பெற்றோர் கிடைத்தால் அது அவர்களுக்கு கிடைத்த பரிசாகும். பெரியவர்கள் ஆனபின்னர் அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமைந்தால் அதுவும் இறைவனின் வரமாகும் அல்லது பரிசாகும். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று கவிஞர் கண்ணதாசன் கூறியது உண்மை. நல்ல பிள்ளைகள் கிடைத்தால் அது பெற்றோர்களுக்கு இறைவன் அருளிய வரமாகும். நல்ல நண்பர்கள், நல்ல உறவினர்கள் இவையெல்லாம் இறைவனின் வரமாகும். அதை நாம் என்றைக்காவது சிந்தித்து பார்க்கிறோமா? இவையெல்லாவற்றிற்கும் மேலாக இறைவன் … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து