தமிழ் | తెలుగు

» Archive

எட்டாம் உபதேசம்

பரமபுருஷர் ஸ்ரீமந் நாராயணர் அருளிய ஆதிவேள்வியின் நற்செய்தி ……வெவ்வேறு தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்ட பரிசுத்த வேதங்களிலிருந்தும் மற்றும் இந்த கலியுகத்திலே ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அருளிய சொற்பொழிவுகளிலிருந்தும் விளக்கப்பட்டுள்ளது     ஸ்ரீமந் நாராயணரின் அழிவற்ற உருவத்தின் இரகசியம் எட்டாம் உபதேசத்திற்கான முன்னுரை ஸ்ரீமந் நாராயணரின் குணங்களைக் குறித்தும், அவருடைய அழிவில்லாத உருவத்தைக் குறித்த இரகசியத்தையும் இந்த உபதேசம் வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு யுகங்களிலும் காலாகாலங்களிலும் ஸ்ரீமந் நாராயணர் இராமர், கிருஷ்ணர், இயேசு என்ற பெயர்களில் அவதார புருஷர்களாகவும், தீர்க்கதரிசிகளாகவும் வெளிப்பட்டார். ஆனால் அவருடைய சொந்த உருவத்தை யாருக்கும் காண்பிக்கவில்லை. இந்த கலியுகத்தை அழித்து, தர்மயுகத்தை நிலைநாட்ட வரும்பொழுதுதான் தன்னுடைய சொந்த உருவத்தை மக்களுக்குக் காண்பிக்கிறார். அந்த உருவம்தான் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் உருவமாகும். இந்த உருவமானது பல்லாயிரம் ஆண்டுகளாக ராஜாக்களுக்கும், தீர்க்கதரிசிகளுக்கும், முனிவர்களுக்கும் மறைக்கப்பட்டது. இந்த உருவத்தைத்தான் அர்ச்சுனன் காண ஆசைப்பட்டான். ✡✡✡✡✡✡✡ … Read entire article »

Filed under: ஸ்ரீமத் பகவத்கீதை

ஸூரா-15

அல்லாஹ் ஆதாம் காலம் முதல் இந்த நாள் வரை ஒவ்வொருவரையும் நேரான பாதையில் வழிநடத்தி வருகின்றார் வச.51-60: இன்னும், நபியே! இப்ராஹிமுடைய விருந்தாளிகள் பற்றி நீர்  அவர்களுக்கு தெரிவிப்பீராக! அவர்கள் அவரிடம் நுழைந்தபோது “ஸலாமுன்” சாந்தி உண்டாவதாக! என்று கூறினார்கள்; “நிச்சயமாக அவர், நாம் உங்களைப் பற்றி பயப்படக்கூடியவர்கள்” என்றார். அதற்கவர்கள், “நீர் பயப்படாதீர்; நிச்சயமாக நாம் உமக்கு மிக்க அறிவார்ந்த ஒரு குமாரனைக் கொண்டு நன்மாராயங் கூறுவதற்காகவே வந்திருக்கின்றோம்” என்று கூறினார்கள். அதற்கவர், “என்னை முதுமை வந்தடைந்து விட்டபோதா நீங்கள் எனக்கு குமாரனைக்கொண்டு நன்மாராயங் கூறுகின்றீர்கள்? எதனைக் கொண்டு நீங்கள் எனக்கு நன்மாராயம் கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கவர்கள், “உண்மையைக்கொண்டே நாங்கள் உமக்கு மகனைப் பற்றி நன்மாராயம் கூறுகிறோம். அதைப்பற்றி நிராசை கொண்டோரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம்” என்று கூறினார்கள். அதற்கவர், “வழிகெட்டவர்களைத் தவிர, வேறெவர் தன் இரட்சகனின் அருளைப்பற்றி நிராசை கொள்வார்?” என்றார். பின்னர் மலக்குகளிடம், “அல்லாஹ்வினால் அனுப்பப்பட்டவர்களே! உங்கள் செய்தி என்ன?” என்று கேட்டார். அதற்கவர்கள் “பாவிகளான ஒரு கூட்டத்தார்பால் அவர்களை அழித்துவிட நிச்சயமாக நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்” என்று கூறினார்கள். லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர – நிச்சயமாக அவர்கள் அனைவரையும் காப்பாற்றுகிறவர்கள் – “அவருடைய மனைவியைத் தவிர நிச்சயமாக அவள் வேதனையடைவதில் தங்கியவர்களில் … Read entire article »

Filed under: சங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம்

ஸ்ரீ ஜனாபாய்

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! ஒருநாள் நடுநிசியில் நாமதேவர் தமது வீட்டிற்குள் அயர்ந்து தூங்கிகொண்டிருந்தார். கடும் காற்றும் மழையும் உண்டாயின. காற்று கூரைகளையெல்லாம் தூக்கி எறிந்தது, மழையும் இடியும், மின்னலுமாய் பொழிய ஆரம்பித்தது. இறைவன் கோயிலினின்று ஓடிவந்து தமது சக்ராயுதத்தை அவரது வீடு பறந்து செல்லாமல் மேலே குடைபோல் நிறுத்தி அவ்வீட்டை காத்தார். ஆனாலும் சுவர்கள் ஈரம் தாங்காமல் சரிந்து உட்கார்ந்துவிட்டன. பொழுது புலரும் சமயம் நாமதேவர் மழை பெய்த செய்தியே அறியாதவராய் மெல்ல எழுந்து எட்டிப்பார்த்தார். ஒளி பொருந்திய பீதாம்பரம் தரிப்பவனும், காதுகளிலே குண்டலங்கள் சூரிய சந்திரர்கள்போல் பிரகாசிப்பவனும், ரத்தினமயமான கிரீடம் தரிப்பவனுமான இறைவன் மண்ணை தன் கையினால் பிசைந்து சுவர் எழுப்புவதைக் கண்டார். “அடடா, இதென்ன அபச்சாரம்! என் வீட்டிற்கு தாங்கள் மண் பூசுவது அடுக்குமா? இது தகுமா” என்று கதறினார். இறைவனோ மிகுந்த கனிவுடன் “அப்பா குழந்தாய் காற்றிலே உன் சிறு குடிசை பறந்துபோயிருக்கும். நீயோ என் நாமத்தை தவிர வேறொன்றிலுமே பற்று இல்லாமலிருக்கிறாய். உனக்கு வரும் தீமையை விலக்குவது என் பணியல்லவா! அப்படி செய்யாவிட்டால், உன் தாயார் என்னை சும்மாவிடுவாளா?” என்றார். இங்கே பேச்சுக்குரல் கேட்டு வெளியே வந்த குணாயி இறைவன் திருவடிகளிலே வீழ்ந்து “தங்களை நான் தூஷித்ததுண்டு, உண்மைதான். மன்னிக்க வேண்டும்” … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்

கிழக்கே தோன்றிய மின்னல் – 6

இதில் மனுஷகுமாரனின் மாமிசத்தை புசிக்காமலும், அவருடைய இரத்தத்தை அருந்தாமலும் போனால் நீங்கள் நித்திய ஜீவனை பெற முடியாது என்றார். இப்படி சொன்னதும் இயேசுவை பின்பற்றியவர்களில் அநேக சீடர்கள் அவரை விட்டு அகன்றனர். அவருடன் இருந்த எழுபது சீடர்களில் ஐம்பத்தெட்டு பேர் அவரை விட்டு பிரிந்து சென்றனர். நிலையில்லாத வாழ்க்கைக்கு பணி செய்வதை தவிர்த்து நிலையான வாழ்க்கைக்குரிய பணிகளை செய்யுங்கள். அதற்கு மனுஷகுமாரன் உங்களுக்கு உதவியாக இருப்பார். இதுதான் சரீர மீட்பின் நற்செய்தி. சிலுவை அறைதலின் சம்பவத்தின்போது, அவருக்காக நின்ற பதினொரு சீடர்களும் ஓடி விட்டனர். பன்னிரெண்டாவது சீடனான யூதாஸ் மாத்திரமே கடைசி வரை அவருடன் இருந்தான். இதைப்போலவே மனுஷகுமாரனின் காலகட்டத்திலும் நடைபெற்றது. சுகமளிக்கும் ஊழிய நிலையில் பல இலட்சக்கணக்கானோர் அவரை தீவிரமாக பின்பற்றினார்கள். ஆனால் அவர் வேத இரகசியங்களை கூறியதும் இது கடினமான உபதேசம் என்று சொல்லிவிட்டு அநேகர் அவரை விட்டு ஓடிப்போனார்கள். பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் அறிவு ஆற்றலையும் – பிரசங்கத் திறமையையும் கண்ட பல அமைப்புகள் அவரை தங்கள் அமைப்புக்குள் கொண்டுவர முயற்சித்தன. அதற்காக எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருந்தன. பணத்திற்கும் புகழுக்கும் விலைபோகாத அவர் கடவுள் பணி செய்வது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக கொண்டிருந்தார். அவர் இப்பணிக்காகவே இப்பூமியில் அவதரித்தார். … Read entire article »

Filed under: பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை

மணிவண்ணா லஹரிகிருஷ்ணா

பாரதப் போரில் தேரோட்டி பகைவரும் உன்னை பாராட்டி – இடையே நீரதன் தலைமைப் பொறுப்பேற்று நடத்திய திறமைக்கு நிகரேது? இரு தாரங்கள் கொண்டவனே அவதாரங்கள் பத்து எடுத்தவனே – மணி வண்ணா உன் திருநாமம் சொன்னால் பகையும் நெருங்காது. வீ. உதயகுமாரன், திருவாரூர் ✡✡✡✡✡✡✡ … Read entire article »

Filed under: கவிதைகள்

உலகில் மனிதனாக

ஒன்றே இறைவன் ஆகும் – அதை ஒதுக்கின் நிம்மதி போகும் துன்பங்கள் எங்கும் படரும் – மனித வாழ்வினில் என்றும் தொடரும் மனிதனை மனிதன் கொல்லும் – கொடும் மடமையே எதுவிங்கு வெல்லும் வாழ்வதும் தடம்மாறிச் செல்லும் – நெடும் வறுமையும் பற்றியே கொள்ளும் மானுடம் ஒன்றே குலமாம் – அதை மனதினில் கொண்டால் நலமாம் மதத்துடன் மதத்தினைச் சேரு – அதில் மாண்புகள் கிடைத்திடும் பாரு பொதிகை மு. செல்வராசன், சென்னை ✡✡✡✡✡✡✡ … Read entire article »

Filed under: கவிதைகள்

ஸ்ரீ லஹரி அய்யா துணை!

அன்பு இருந்தால் ஆதரிக்கும் சுத்தம் குறை இருந்தாலும் ஸ்ரீ லஹரி அய்யாவை வணங்கு! இறைவன் சொல்லுவது உண்மை நோய் இருந்தால் நோன்பு வினை இருந்தால் விரதம்தான் வாழ்வை வந்து வலி நீக்கும் வாசம் மலர் பூ மணக்கும் கோடி மக்களை கொண்டு அணைக்கும் உலகம் பூரா உறவாகும் பாப்பாக்குடி பக்கத்தில் வந்தவருக்கு வரம் கொடுக்கும் அய்யா என்று சொல்லி தரும் எல்லாரும் கும்பிடும் ஏழை மக்களை ஏந்தி வளர்க்கும் பாவங்களை போக்கும் எங்களுக்கு ஸ்ரீ லஹரி அய்யாவே துணை! M.S. முனியம்மாள், வள்ளியூர் ✡✡✡✡✡✡✡ … Read entire article »

Filed under: கவிதைகள்

மனுஜோதி ஒளியாய் திகழ்ந்தாரு

வந்தார் அய்யா வந்தாரு லஹரிகிருஷ்ணா வந்தாரு தந்தார் அய்யா தந்தாரு ஒருமைப்பாட்டை தந்தாரு சென்றார் அய்யா சென்றாரு மேலை நாடுகளெல்லாம் சென்றாரு வென்றார் அய்யா வென்றாரு வேதங்கள் ஆய்வில் வென்றாரு நின்றார் அய்யா நின்றாரு – ஒரு தெய்வமாய் உலகில் நின்றாரு என்றார் அய்யா என்றாரு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றாரு திகழ்ந்தார் அய்யா திகழ்ந்தாரு மனுஜோதி ஒளியாய் திகழ்ந்தாரு ஏகினார் அய்யா ஏகினாரு வைகுண்டம் தானே ஏகினாரு பாவலர் தூத்துக்குடி பாலு ✡✡✡✡✡✡✡   … Read entire article »

Filed under: கவிதைகள்