தமிழ் | తెలుగు

» Archive

அகப்பேய் சித்தர் வாக்கு

        “காசிக்குப் போனாலும் அகப்பேய் கம்மம் தொலையாதே         பூசித்து வந்தாலும் அகப்பேய் புண்ணியம் கிட்டாதே         தீர்த்தமாடினாலும் அகப்பேய் தீவினை தீராதே         உளத்தை போனாலும் அகப்பேய் உன் வினை போகாதே” ஒவ்வொரு தேசத்திலும் தீர்த்த ஸ்தலங்கள் இருக்கின்றன. தீர்த்த ஸ்தலங்களில் ஸ்நானம் செய்வதால் பாவம் நீங்கி புண்ணியம் பெறலாம் என்பது ஓர் நம்பிக்கையாகும். ஆனாலும் அந்த ஸ்தலங்களில் முழுகுவதால் மாத்திரம் புண்ணியம் கிடைக்காது என்று நம் தேச ஞானிகளில் ஒருவரான அகப்பேய் சித்தர் இவ்வாறு கூறியிருக்கிறார். ✡✡✡✡✡✡✡ … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

மகா கணபதி எனும் விடுகதை

புராணங்களில் தத்துவங்களை பாமர மக்களுக்கு விளக்கிக்கூற அத்தத்துவங்களை சிலைகளாக்கினர். அப்படிப்பட்ட தத்துவங்கள் நிறைந்த சிலைதான் மகா கணபதியாகும். சிலைகளில் தும்பிக்கை நேராக இருப்பதைப் போலவும், இடப்பக்கத்தில் திரும்பியிருப்பதைப் போலவும், வலப்பக்கத்தில் திரும்பி இருப்பதாகவும் காணப்படுகிறது. நேராக தொங்கும் தும்பிக்கையானது இறைவனின் வெளிப்படாத ‘சுஷும்னா’ என்ற சக்தியை காண்பிக்கிறதாக உள்ளது. வலப்பக்கத்தில் தும்பிக்கை திரும்பி இருந்தால், ஒளியின் பாதையில் மனம் முன்னேற்றம் அடைகிறதைக் காண்பிக்கிறது. இடப்பக்கத்தில் தும்பிக்கை லட்டுகளை எடுப்பதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இது ஐம்புலன்களின் மூலமாக பொருள்களை அனுபவிக்கிறது என்பதை குறிக்கின்றது. நான்கு கைகளையுடைய விநாயகர் பிரபலமானதாகும். கீழேயிருக்கும் இரண்டு கைகளில் ஒரு கை கீழ் நோக்கியும், ஒரு கை மேல் நோக்கியும் அமைக்கப்பட்டிருக்கிறது. இதின் தத்துவமாவது கீழ் நோக்கும் கை என்றால் பக்தனுக்கு அபயமளிப்பவன் என்றும், மேல் நோக்கும் கை என்றால் பக்தனுக்கு பாதுகாப்பையும், அருளையும் வழங்குவதை குறிக்கின்றது. மேலேயுள்ள கைகளில் அங்குசமும், பாசக்கயிறும் உள்ளது. ‘அங்குசம்’ என்றால் மனதை (தீய குணங்களை) அடக்க ஒரு ஆயுதத்தை குறிப்பதாக உள்ளது. பாசக்கயிறு இவ்வுலகில் ஏற்படும் பந்த பாசத்தை காண்பிக்கிறது. இதின் ஒருங்கிணைந்த அர்த்தமாவது பந்தபாசம் என்பது ஒழிந்த பின்னர் ஞானோதயம் பிறக்கிறது என்பதாகும். மகா கணபதியின் சிலைகளெல்லாம் ஒரு தந்தத்துடன் காணப்படுகிறது. இன்னொரு தந்தம் உடைந்து காணப்படும். … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

உலகம் ஓடுகிறது

மக்கள், எது தம் மனம் தேட சொல்லி ஆவலை தூண்டுகிறதோ, அதை அப்படியே செய்து முடிப்பதுதான் வெற்றி என கருதுகின்றனர். மண்ணில் ஒரு குழந்தை செழிக்க தொடங்கிவிட்டால் அதன் வாழ்க்கைக்கு தேவையான நல்லறங்களை சொல்லி வளர்த்து சிறந்த சான்றோன் என்ற பெருமை பொருந்த உருவாக்குவதே பண்டையகாலம் தொட்டு வந்த வழி. இதை வள்ளுவர் வழியில் உரைத்தால்…. “ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச்         சான்றோன் எனக்கேட்ட தாய்” என்றார். இன்றைய காலத்தில் இது ஏட்டுச் சுரைக்காயைப்போலத்தான் இருக்கிறது. இப்போது எவரும் சான்றோர் ஒருவனாய் தன் மக்களை உருவாக்க விரும்புவதில்லை. நல்ல வசதி வாய்ப்புகள், கை குறையாத பொருட்செல்வம் இதைத்தான் தேடுகிறார்கள். வாழ்வை தள்ளிச் செல்ல பொருள் செல்வம் தேவை எனினும், வாழ்வையே அதற்காக கொடுப்பது, ஒரு படி பாலுக்காக பசுவையே வாங்குவது போலத்தான். இவற்றிலிருந்து நாம் காணுவது உலகம் செல்வத்தின் பின்னால் ஓடுகிறது என்பதையே! அதர்மத்தால் எதையும் உடனுக்குடன் தீர்வு காண முடியும் என நம்புகிறது. அதனால்தான் பின்னாலேயே போய்க்கொண்டிருக்கிறது. உலகம் மோசமான நிலையில் உள்ளது. ஒரு செய்தித்தாளை எடுத்தால் அதிலுள்ள நல்ல செய்திகளிலும், தீய செய்திகளே எண்ணிக்கை மிகைப்படுகிறது. இவை எல்லாவற்றையும் சிந்தித்து பாருங்கள். நாம் முன்னேறியிருக்கிறோமா? இல்லை, பின்னோக்கித்தான் செல்கிறோம். இன்று கொலை பாதகமும், கலவரங்களும் இனிப்பை … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

கீதாஞ்சலி

“நம் தலைவனே, மிக்க மகிழ்ச்சியுடன் படைப்பின் சுமைகளை தாங்கிக் கொண்டிருக்கிறான். எப்பொழுதும் அவன் நம்முடன் பிணைக்கப்பட்டிருக்கிறான். உன் தவங்களின்று வெளியே வா! என் மலர்களையும், சாம்பிராணி புகையையும் து]ர எறிந்துவிடு, உன் ஆடை கிழிந்து கந்தலாகிவிட்டால், ஒன்றும் கெட்டுவிடவில்லை. உன் உழைப்பாலும், நெற்றி வியர்வையாலும் அவனை அடையலாம்”. இறைவன் நம்மை சிருஷ்டித்த போதே நம்மை அவருடன் பாகச்கயிறுகளால் இணைத்துக் கொண்டார். எப்பொழுதும் அவர் நம்முடன் இணைந்தே இருக்கிறார். உன் ஆடையைப் பற்றி இறைவன் கவலைப்படுகிறதில்லை. உன் மனதின் தூய்மைதான் அவரை நம்மிடம் ஈர்க்கிறது. ஆகவேதான் வெளித்தோற்றத்தைப் பற்றி கவலைப்படாதே என்று கவிஞர் கூறுகிறார். கடின உழைப்பினால், நெற்றியில் வியர்வை ஏற்படும்போது நாம் அவரை சந்திக்க முடியும். “நான் கண்களை மூடுவதற்கு முன், என் கண்கள் வெகுதூரம் தேடி அலைந்தன. நீ எங்கே இருக்கிறாய்? என்று சொல்லின. ஓ! நீ எங்கே என்ற கேள்விக்குரல் கண்ணீராக உருகி, ஆயிரமாயிரம் ஓடைகளில் பெருகின. ‘நான் இருக்கிறேன்’ என்ற நம்பிக்கையின் ஒளி, உலகைப் பிரகாசப்படுத்தியது”. கவிஞர், தான் இறப்பதற்கு முன்பாக இறைவனைக் காண வேண்டும் என விரும்பி தேடி அலையும்போது, இறைவன் நான் இருக்கிறேன் என்று பதிலுரைத்தபோது, கவிஞருக்கு ஆனந்த கண்ணீர் ஏற்படுகிறது. “என் ஆசைகள் அநேகம்; ஆகவே என் குரல் பரிதாபமாக ஒலிக்கிறது. … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாம மகிமை

ல+ஹரி என்பதே லஹரியாகும். இந்த நாமத்தின் பொருளாவது பெரும் வெள்ளமாக திகழும் அன்பாகும். மகாத்மா காந்தி இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட தீர்க்கதரிசியாவார். அவர் தாழ்ந்த ஜாதி மக்களுக்கு ஹரிஜனம் என்று பெயர் வைத்தார். அதாவது லஹரியின் ஜனம் என்ற பாதி பெயரை எடுத்துக்கொண்டார். முஸ்லீம்கள் ‘லா’ என்பதை எடுத்துக்கொண்டு லா-ஜனம் என்கிறார்கள். இந்துக்கள் ‘ஹரி’ என்றுதான் கூறுவார்கள். ‘லா’வை அவர்கள் உச்சரிக்கமாட்டார்கள். இமாலயம், மலேயா, இலங்கை என்று “லா” நெடில் முக்கியத்துவம் வாய்ந்தது. சங்கராச்சாரியார் ‘லஹரி’ என்ற நாமம் வெளிப்பட்டதால் அவர் ஆனந்த லஹரி, சௌந்தர்ய லஹரி என்று பாடினார். ஆனந்த லஹரி என்றால் இறைவனின் ஆன்மாவைப் பெற்ற ஆண்களை குறிக்கிறது. சௌந்தர்ய லஹரி என்பது இறைவனின் ஆன்மாவைப் பெற்ற பெண்களை குறிக்கிறது. ஆந்திராவைச் சேர்ந்த ஷேக் காதர் மஸ்தான் அலிஹா காதர் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். பிரகாசம் மாவட்டம், சிராலா தாலுக்காவில் ஆதி நாராயணர் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் இவ்வாறு கூறுகிறார்: நீர் உம்முடைய மகிமையை படைத்து அந்த மகிமையை ‘லஹரி’யில் வைத்திருக்கிறீர் என்கிறார். இதேவிதமாக ஆகார் என்பவளுக்கு ‘லஹரி’ என்னும் நாமம் வெளிப்படுத்தப்பட்டதாக விவிலியம் கூறுகிறது. இறைவனைக் கண்ட பின்னர் ‘என்னைக் காண்பவரை நான் கண்டேன்’ என்று ஆகார் கூறினாள். ஆகையால் அந்த கிணற்றிற்கு அவள் … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

கடவுளின் வருகைபற்றி வள்ளலார் கூறுவது என்ன? – 4

கர்மயோகி அல்லது கடவுளை கிரஹித்து உணர்ந்த ஓர் பக்தனின் குணங்களாக வள்ளலார் கூறுவது என்ன? சென்ற இதழின் தொடர்ச்சி….. பாங்கி தலைவி பெற்றி உரைத்தல்: திருவருட்பா 6-ம் திருமறை (வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்ள வசதியாக இப்பாடல் பதம் பிரித்து எழுதப்பட்டுள்ளது). பாடல் எண் 1064:    ஊராசை உடலாசை உயிர் பொருளின் ஆசை                       உற்றவர் பெற்றவராசை ஒன்றுமிலாள் உமது                       பேராசைப் பேய்பிடித்தாள் கள்ளுண்டு பிதற்றும்                       பிச்சி எனப் பிதற்றுகின்றாள் பிறர்பெயர் கேட்டிடிலோ                       நாராசம் செவிபுகுந்தால் என்ன நலிகின்றாள்                       நாடறிந்தது இது எல்லாம் நங்கை இவள் அளவில்                       நீர் ஆசைப்பட்டது உண்டேல் வாய் மலர வேண்டும்                       நித்தியமாமணமன்றில் நிகழ் பெரிய துரையே தெளிவுரை:- நித்தியமான அழகிய ஞான சபையை நடத்தி வருகின்ற மகத்தான சீமானே! என்னுடைய தோழியாகிய உமது கோபிகையிடம், தான் பிறந்த ஊரின்மீது ஆசை, தனது உடலின்மீது ஆசை, தனது உயிரின்மீது ஆசை, பொருளின்மீது ஆசை, தனது நண்பர்கள்மீது ஆசை, தன்னை ஈன்றெடுத்த பெற்றோரின்மீது ஆசை – இவைகள் ஒன்றுமேயில்லை. உம்மீது மட்டும் பேராசை கொண்டு பேய்பிடித்தவள் போலக் காணப்படுகிறாள். கள் உண்டவர் உளறுவதுபோல உளறிக்கொண்டிருக்கிறாள். உமது திருப்பெயரைத் தவிர வேறு பெயர் தனது காதில் விழ அவள் கேட்பாளென்றால், இரும்புக்கம்பி தன்னுடைய காதிற்குள் புகுந்து வேதனை செய்வதுபோல … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

இஸ்லாம் ஓர் இனிய அறிமுகம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ லஹரி கிருஷ்ணாய! இறையே அபயம்!                     யாவும் இறையின் உபயம்! சங்கைமிக்க திருக்குர் ஆன்-புர்கானுல்மஜித் பெயர் 4-வது பேதம் முஹம்மது நபிக்கு வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) மூலமாக ஏக நாயகன் வல்லதோர் பேரிறைவன் அல்லாஹ் மக்காவில் அருளியது. 6666 ஆயத்துக்களை கொண்டது. அரபுமொழியில் உள்ளது. இஸ்லாத்தின் (சாந்தி எனும் பெயர்) கடமைகள் 5. கலிமா சொல்லி ஈமான் (நம்பிக்கை) கொள்ளுதல். அல்லாஹ் ஒருவன்- அவனருளிய வேதங்கள் உண்மை, அவனின் அடியார்கள் (நபிமார்கள்) உண்மை என ஒப்புதல். தொழுகை 5 வேளை. தஹஜ்ஜத் நள்ளிரவில் தனித்து தொழுவது. இறைவனுக்கும் இன்ஷானுக்கும் (மனிதனுக்கும்) இடையில் எவர்தம் குறுக்கீடும் இல்லை என உறுதியாக நம்புவது. நோன்பு அவனை எண்ணி உபவாசமிருத்தல், பசியறிதல். ஜகாத் – தருமம் செய்வது, கட்டாயம் எளியவர்க்கு உதவுவது. ஹஜ் – வாழ்வில் வசதியுள்ளோர் ஒருமுறையேனும் ஆதி ஆலயம் கஃபதுல்லாஹ் உள்ள இடம் மக்கா. அங்கே சென்று வருவது ஒவ்வொரு முஸ்லீமும் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள். வானவர்கள் நெருப்பால் படைக்கப்பட்டவர்கள். அதில் நால்வர்கள் தலையானவர்கள். 1. ஜிப்ரீல் (அலை) இறைவன் அருளியதை தூதர்கட்கு (நபிமார்கள்) அறிவிப்பவர். 2. மீக்காயில் காற்றின் காப்பாளர். 3. இசுறாடில் உயிர்க்குலம் யாவற்றிற்கும் உணவளிக்கும் பணி. 4. இஸ்ராயில் மரணத்திற்கு உரித்தான பணி இறை அருளியது. ஆதம் (அலை) மண்ணால் … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

தெய்வத்தின் துணை வேண்டும்

நாம் நம் திறமையால், அறிவால் வாழ்க்கையில் வெற்றி அடைந்ததாக நினைக்கிறோம். ஆனால் இந்த எண்ணம் தவறு. தெய்வம் துணை நின்றால்தான் நம் முயற்சிகளுக்கு முழு பலனும் கிடைக்கும். இதை உணர்த்த ஒரு கதை. பாரதப்போர் நடந்து கொண்டிருந்தது. அர்ஜுனனுக்கு பகவான் கிருஷ்ணர் தேரோட்டியாக செயல்பட்டார். ஒரு நாள் யுத்தம் முடிந்து பாசறைக்கு திரும்பினான் அர்ஜுனன். அவனுக்கு தன் வில் வித்தையால்தான் வெற்றி அடைகிறோம் என்ற கர்வம் உண்டாயிற்று. அதனால், வழக்கமாக முதலில் தேரிலிருந்து இறங்கும் அவன், அன்று கிருஷ்ணரை முதலில் இறங்கும்படி கூறினான். அர்ஜுனனின் எண்ண ஓட்டத்தை புரிந்துகொண்ட பகவான், அவனது அகந்தையை நீக்க முடிவு செய்தார். “வழக்கமாக நீதானே முதலில் இறங்குவாய்? இன்று மட்டும் ஏன் என்னை முதலில் இறங்கச் சொல்கிறாய்?” என்று கேட்டார். இதற்கு அர்ஜுனன், “இன்று வழக்கத்தை மாற்றலாமே!” என எகத்தாளமாக பதிலளித்தான். அதற்கு கிருஷ்ணர் “இல்லை! நீதான் முதலில் இறங்க வேண்டும். நான் இறங்கினால் உனக்குத்தான் ஆபத்து” என்றார். “எனக்கு ஆபத்தா? என்ன ஆபத்து? என் கையில்தான் வில் இருக்கிறதே!” என்றான் அர்ஜுனன் கர்வத்துடன். “அதெல்லாம் பிறகு பேசிக்கொள்ளலாம். முதலில் நீ கீழே இறங்கு!” என பகவான் கட்டளையிடும் தொனியில் கூறினார். அதற்கு மேல் மறுப்பு தெரிவிக்க பயந்தவனாக அர்ஜுனன் கீழே இறங்கினான். பகவான் … Read entire article »

Filed under: ஆன்மீக கதைகள்