தமிழ் | తెలుగు

» Archive

ஆன்மீகப் பார்வையில் திருக்குறள்

‘அன்புடைமை’ என்ற வார்த்தையிலேயே அன்பு நம்மிடமிருக்கும் ஒரு உடைமையாக இருக்க வேண்டும் அல்லது ஒரு உறுப்பாக இருக்க வேண்டும் என்று வள்ளுவர் வலியுறுத்துகிறார். ‘அன்பு’ என்பது அகத்துறுப்பாகும்.                “புறத்துறுப்பெல்லாம் எவன் செய்யும் யாக்கை                அகத்துறுப்பு அன்பிலவர்க்கு?” உடம்பினுள்ளே இருக்கின்ற மனதின்மேல் அன்புற்றவர்களுக்குப் புறத்தே உள்ள உறுப்புகளால் ஆகும் பயன் என்ன? எதுவுமில்லை என்பது இக்குறளின் பொருளாகும். அதாவது கை, கால், கண், மூக்கு, செவி, வாய் போன்றவை புற உறுப்புகளாகும். ஆனால் ‘அன்பு’ என்ற கண்ணுக்குத் தெரியாத அகத்துறுப்பு இல்லாவிட்டால், புற உறுப்புகள் இருந்தும் பயன் இல்லை. அன்புணர்ச்சி என்பது தனித் தன்மையுடையது. அன்பின் அடிப்படையிலேதான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. உயர்ந்த நிலையிலிருக்கும்போதுதான் அன்பு செய்கிறார்கள். அதே நபர் வாழ்க்கை சக்கரத்தில் கீழான நிலைக்கு வரும்போதும், அன்பு செலுத்த வேண்டும். அதுவே உண்மையான அன்பாகும். அன்பு என்ற உறுப்பு மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் மிருகங்கள், பறவைகள், ஊர்வன போன்றவற்றிலும் காணப்படுகிறது என்பதை நிரூபிக்கிறது இச்சம்பவம். காசிராஜனுடைய தேசத்தில் ஒரு வேடன், விஷமுள்ள பாணத்தை எடுத்துக்கொண்டு, சேரியிலிருந்து புறப்பட்டு மானைத் தேடிப் போனான். அங்கு ஒரு பெரிய வனத்தில் மகான்கள் அருகிலிருக்கக் கண்டு மாமிசத்தில் இச்சையுடைய அந்த வேடன், ஒரு மானையடிக்க குறிவைத்துக் கூரிய பாணத்தை விடுத்தான். தடுக்க முடியாத அந்தப் … Read entire article »

Filed under: திருக்குறள் விளக்கம்