தமிழ் | తెలుగు

» Archive

டிசம்பர்

Filed under: புகைப்படங்கள்

கிழக்கே தோன்றிய மின்னல் – 5

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் மக்களின் நலனுக்காக நிகழ்த்தப்பட்ட பிரம்ம யக்ஞம் அல்லது ஆதிபலி என்ற இரகசியத்தை, மனுஷகுமாரன் லாறி முத்துகிருஷ்ணா 1986-ம் ஆண்டு பக்தர்களுக்கு வெளிப்படுத்தினார். அந்த ஆதி வேள்வியானது உன்னத நிலையில் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை பக்தர்களுக்கு விளக்கினார். அது பூலோகத்தில் மாத்திரம் அல்ல, பரலோகத்தின் கீழ் உள்ள சர்வ சிருஷ்டிக்கும் நிகழ்த்தப்பட்டது. ஆதி புருஷராக அதை நிகழ்த்தி காட்டினார். இந்த பலியானது தேவ புத்திரரால் செலுத்தப்பட்டது என்று கூறினார். வார்த்தையானவர் அல்லது கிறிஸ்து அவருடைய குமாரனாக அதைச் செய்தார். உலகத்தோற்ற முதல் தேவனுடைய பிள்ளைகளால் பலி செலுத்தப்பட்டது. சிருஷ்டிப்பின் துவக்கம் ஆதி பாவம் கலியன் உருவெடுத்தல், பாதாளத்தின் தோற்றம் என்பவைகளைப் பற்றிய இரகசியங்களை வெளிப்படுத்தினார். இந்த இரகசியத்தை அறிந்து கொண்டவர்தான் மரணமில்லாமல் பெருவாழ்வு அடைவர், என ஆணித்தரமாக கூறினார். இந்த ஆதி வேள்வியை நிகழ்த்தியவர்களுக்கு ஜீவாத்மா வரப்பிரசாதமாக கொடுக்கப்பட்டது என்ற நற்செய்தியானது பக்தர்களுக்கு சந்தோஷத்தை அருளிச் செய்தது. பலி என்றால் ஒருவரை கொல்வது என்று அர்த்தமல்ல. அந்த வார்த்தையானது தியாகத்தையும் குறிக்கும். இந்த ஆதி வேள்வி என்ற சொல் கீதையில் அழியாத யோகம் என வர்ணிக்கப்படுகிறது. இந்த வேள்வியை நினைவுகூர்ந்து இஸ்லாமியர் பக்ரீத் பண்டிகையாகவும், கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாகவும் கொண்டாடுகின்றனர். ஆனால் அதின் உள் … Read entire article »

Filed under: பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை

இறைவார்த்தையினால் வாழ்ந்து காட்டியவர்!

(ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அனுபவம்) இந்த உலகில் வாழ்க்கை நடத்துவது என்றால் தினம் தினம் உழைத்து சம்பாதித்து குடும்பத்தை நிர்வகித்து வருவதுதான் என்று நம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இறைவன் நமக்கு கொடுத்த திறமையினால் அல்லது சக்தியினால்தான் நாம் தினமும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை மக்களாகிய நாம் மறந்து விடுகின்றோம். நம்முடைய திறமையினாலும், முயற்சியினாலும்தான் சம்பாதித்து உயர்ந்த நிலைக்கு வருகிறோம் என நினைக்கின்றோம். ஆனால் இறைவன் மனிதன்மேல் சுமத்தும் குற்றச்சாட்டு என்ன? அவன் இறைவனின் சிருஷ்டிப்புக்கு சாட்சியாக நடவாமல் நான், என் மனைவி, என் பிள்ளைகள் என்று கூறி, தனக்குத்தானே சுயமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான் என்பதுதான். ஒரு மனிதன், தான் பிறந்தபின் தனக்காக வாழாமல் பிறருக்காக வாழவேண்டும் என அநேக மகான்கள் போதித்தும், வாழ்ந்து காட்டியும் இருக்கின்றனர். இறைதொண்டுக்காக துறவறம் மேற்கொண்டு மக்களை விட்டு ஒதுங்கியும் வாழ்க்கை நடத்தி வந்தனர். ஆனால் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களோ இலங்கையில் வாழ்ந்தபோது, இறை சக்தியால் தொடப்பட்டார்.  இலங்கையிலிருந்து அவர் தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்து வந்து, மணமுடித்து மனைவி, பிள்ளைகளுடன் வசித்து வந்தார். வேலூரில் இன்றளவும் பெயர் பெற்ற சி.எம்.சி மருத்துவமனையில் அவரும் அவரது துணைவியாரும் பணியாற்றி வந்தனர். ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா … Read entire article »

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்

மக்களின் சொர்க்கலோகம் – சத்திய நகரம்

சத்திய நகரம் மக்களின் உலகம் சத்திய நகரம் இது சத்திய உலகம் சாதி பேதம் காணாத உத்தம உலகம் பாசதீபம் ஏற்றி வைக்கும் சத்திய நகரம் சகலரையும் ஒன்றாக்கும் உத்தம உலகம் கல்கி மகா அவதார புருஷராக காட்சி தரும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் புண்ணிய உலகம் காலங்கள் கூடும்போது வெண்குதிரை மீதேறி காக்க வரும் பகவானின் நித்திய உலகம் – தமிழறிஞர் முத்தமிழ் முரசு சின்னப்பாண்டியன் ✡✡✡✡✡✡✡ … Read entire article »

Filed under: கவிதைகள்

உலகமெங்குமுள்ள ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அன்புக்கொடி ஏற்றும் விழா!

வாழ்க! வாழ்க! ஸ்ரீ லஹரியின் அன்புக்கொடி வான் புகழ் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் வாழ்த்துடனே ஏழ்கடல் அலைகள் இசை முழங்க எழில்மிகு அன்புக்கொடி வளமிகவே ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவும் அவரது அன்புக்கொடியும் போல் ஸ்ரீ லஹரியும் அவரது மனுஜோதி ஆசிரமமும் போல் பகவான் லஹரி கிருஷ்ணாவின் அருளும் கனியும்போல் அன்புக்கொடியும் மக்களைக் காக்கும் இறைவனைப்போல் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா ஆனந்த ஜோதியைப்போல் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் வெற்றிக் கொடியைப்போல் அன்புக்கொடி இருக்கும் இடத்தில் எல்லா நலன்களும் அமையப்பெற்று மா, பலா , வாழை போல், தேனும் இனிமையும் போல் அன்புக்கொடியால் அனைவரின் வாழ்வும் சிறந்தோங்கி வளம் பெரும். – பாவலர் J.A. கருணாநிதி, தலைவர், செய்யார் தமிழ் சங்கம், செய்யார் ✡✡✡✡✡✡✡ … Read entire article »

Filed under: கவிதைகள்

அன்புக் கொடி

இறைவன் ஒருவன் தானென்றே எடுத்துக் கூறும் கொடியிதே இறையின் தியாகக் குணத்தையே குறிக்குங்காவிக் கொடியிதே அன்புயென்னும் தெய்வீகத்தை அடையும் வழியும் காட்டுதே ஆதிபலி பிரம்மவேள்வியை காட்டுங்குறியீடேற்ற கொடியிதே இல்லந்தோறும் ஏற்றுவோம் எல்லாவூரிலும் ஏற்றுவோம் இல்லாத ஏழையர்க்கும் எளியோர்களுக்கெல்லாமே உதவியேது மாற்றுவோம் அன்னதானங்கள் வழங்கியே ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகளை கூறுவோம் தாம் தர்மத்தை நிலைநாட்டிடும் தன்னிகரில்லாக் கொடியிதே மர்மமாக உலகை மூடிய அறியாமையிருள் நீக்குங் கொடியிதே ஆன்மீக மகிலத்தில் பரவிட அன்பே தெய்வீக மென்றுணர்த்திட ஆனந்தமாய் காவிக்கொடியேற்றி மனுஜோதி தீபமேற்றுவோம் கொடியை ஏற்றுவோம் நமது கொடியை ஏற்றுவோம்! – நல்லாசிரியர் கவிஞர். பி. வேலுசாமி, சேலம் ✡✡✡✡✡✡✡   … Read entire article »

Filed under: கவிதைகள்

பதங்கள் போற்றியே நாராயணா!

உலகில் அரு உருக் கொண்டு நின்றானவன் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஆனவன் பலவும் பொருள் கொண்ட பல்லுயிர் வடிவானவன் பரந்து விரிந்த ‘பிரபஞ்சம்’ அவன் தானானவன் நிலவும் அமைதி அவனுள் உருவானது நிதமும் இயக்கம் அவனால் உண்டானது-ஓம் புலனும் அவனால் நமை ஆட்டுவிப்பது, அப் பொறிகளைந்தும் தானே நம்மைக் கூட்டுவிப்பது ஆட்டுவிப்பதும் நமை கூட்டுவிப்பதும் அவனன்றி வேரில்லை என்பார் ஆட்டங்காணும் மானுட வாழ்வின் முன்பால், ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா என்றார்  – கவிஞர் நா. சக்திமைந்தன், திருவாரூர் ✡✡✡✡✡✡✡ … Read entire article »

Filed under: கவிதைகள்

கடிதங்கள்

பேரன்புடையீர், மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, என் பணிவான வணக்கம். ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் மாத என் இதயதுடிப்பான மனுஜோதி இதழை படித்தேன். இதில் 46-வது கல்கி ஜெயந்தி விழாவின் படங்களை கண்டு, என்னால் இந்த விழாவில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலையில் இருந்ததை நினைத்து மிகவும் வருத்தப்பட்டேன். “மகா கணபதி எனும் விடுகதை”, “மறுபிறவி ஸ்ரீமந் நாராயணருக்கு மட்டுமே! திரு. தேவாசீர் லாறியின் சொற்பொழிவு கட்டுரை”, “பிரார்த்தனையின் சக்தி”, “கவலைப்படுவதால் என்ன லாபம்?”, “திருந்திய முரடன்”, போன்ற கட்டுரைகள் எல்லாம் பயனுள்ள, படிக்க வேண்டிய, மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டிய கட்டுரைகள். மதம் வேறாக இருக்கலாம். ஆனால் நாம் எல்லோரும் இறைவனின் பிள்ளைகளே! நன்றி! – சு. முத்துச்சாமி, விட்டிலாபுரம் ✡✡✡ மனுஜோதி ஆசிரியர்க்கு, நம்முடைய மும்மாத இதழ் மிகவும் அருமையான கருத்துக்களை வெளியிடுகிறது. முக்கியமாக சமபந்தி போஜனம், சர்வ சமய மாநாடு, கலப்பு திருமணங்கள் போன்றவை மிகவும் இந்த நாட்டிற்கு அவசியமான உத்திகளை, இந்த உலகமறிய நடத்திக் காட்டுவது போன்ற நல்லதொரு சேவைகளை செய்துவருவது கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் மட்டுமல்ல, எங்களின் “அறிவுக்கு உணவு மையம்” மற்றும் எங்களின் “மனித நல இயக்கமும்” உங்களை வெகுவாக பாராட்டுகிறது. நன்றி! மேலும் ஆகஸ்டு – அக்டோபர் மாத இதழில் பக்கம் … Read entire article »

Filed under: வாசகர் கருத்து