தமிழ் | తెలుగు

» Archive

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!

ஆறுகள் பலவாயினும்! சேரும் இடம் கடல் மதங்கள் பலவாயினும் ஒருவனே தேவன் மண்ணின் மனிதகுலம் ஒன்றே! அன்பெனும் இறைவனைத் தொழுகின்றோம் அன்பிற்கு ஏது? கீழோர்? மேலோர்? நட்டக் கல்லை கும்பிட்டு நாலு புஷ்பம் சாற்றுவதா? நம் மக்கள் வறுமையில் வயிறாற உணவிடு நாலு இதயம் உன்னை வாழ்த்துமே! வணங்குமே! பாலில்லா குழந்தைக்கு பசி நீக்கும் நீ தெய்வம் பாலாபிஷேகம் செய்து குறுவட்டம் இடுவாயோ? உலகம் உன் சேவைக்கு வாசல் திறந்து காத்திருக்கும் உலக மக்கள் இதயமன்றோ! இறைவன் கோயில் உன் மொழி – என் மொழி – எது பெரிதோ? அன்பின் மொழி பசியாற்றும் உயிர்கள் வாழ அது எம்மொழியோ, அது புரிதல் மொழி உன் உதிரம் சிகப்பென்றால் என்னது கறுப்பாமோ? உடை வாழ் கொண்டு வெட்டி மாண்ட மனிதர்கள் உன் குலம் பெரிதன்றோ! என்குலம் சிறிதன்றோ! பசிக்கு ஏது குலம் பண்பாளர் பாட்டினிலே நீ நினைத்தால் நல்ல செயல் தொண்டாகும் நீ நினைக்காத அருளும் வசமாகும் விரைவினிலே நீ வணங்கும் தெய்வமாய் உன்செயல் அன்றோ கை வணங்கும் மனிதரெல்லாம் உன்னை தேவன் என்பார் உன் குலம் ஒன்றேயது அருளும் குலம் ஒருவனே தேவன்! இறைவன் துணை நிற்பார்! – கவிஞர் நா. பேபி உமா, பி.லிட்.எம்.ஏ. கானகம் தரமணி, சென்னை ******* … Read entire article »

Filed under: கவிதைகள்

கவிதைகள் – 2

அன்னைத் தமிழே உலகின் மூத்தவளே! முத்தமிழும் தந்து எமை சிந்திக்க வைத்தவளே! நீ உயிராய் எமை வாழ வைத்தாய் அதனால் வெற்றித் தடங்கள் பதிக்கின்றோம்! உன்னிதயம் உறையும் தெய்வத்தை ஏன் தேடித்தேடி அலைகின்றாய்? உள்ளே உறையும் தெய்வமது உண்மைச் சுடராய் உனை விஞ்சி நிற்கும் வான் வள்ளுவரும் வள்ளலாரும் வாழ்ந்திட்ட பூமி இது வந்தார்க்கு பசிபோக்கும் பூமியிது – தயானி தாயுமானவன், சென்னை ******* … Read entire article »

Filed under: கவிதைகள்

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா

எங்கும் நிறைந்திருக்கும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா எழுந்தருள வேண்டுமெங்கள் இதயமெனும் கோவிலில் எங்கள் குறை தீர்த்திடுவாய் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா என்றுமுனை வேண்டுகிறோம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா உன்னருளை நாடுகிறேன் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா உன்பதமே கதியானேன் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா நல்லவர்க்கும் நன்மைசெய்யும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா நிறைவான வாழ்வளிப்பாய் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா – கே.வி.ஜெனார்தனன், ஓவிய ஆசிரியர், காஞ்சிபுரம் ******* … Read entire article »

Filed under: கவிதைகள்

வேதத்தில் ஒற்றுமை வேண்டும்

பவிஷ்ய புராணத்தில் காண்பது “அபிராம்” பைபிள் வேதத்தில் இருப்பது “ஆபிரகாம்” குரான் ஓதுகையில் பார்ப்பது “இப்ராஹீம்” ஒன்றுபடுத்திப் பார்த்தால் ஒற்றுமை வேறுபடுத்திப் பார்த்தால் வேற்றுமை நீ வாழ பிறரைப் பழிக்காதே – அதனால் நிம்மதி இழந்து தவிக்காதே அன்பே சிவம் என்றிரு கர்த்தரே அன்பு கண்டிரு இஸ்லாம் சாந்தி என்றிரு இறைவனார் ஒன்றே அறிந்திடு ஓதும் வேதத்தில் ஒற்றுமை காண்போம் உலகோர் உணர்ந்திட எடுத்துரைப்போம் ஜாதி மதம் பாராமல் – உயர் சான்றோர் வழி நாம் நடப்போம் – கே. இரவிக்குமார், (இறைதொண்டர்), கோவை ******* … Read entire article »

Filed under: கவிதைகள்

உம்மால் நிலைக்கிறோம் உமதன்பில் பிழைக்கிறோம்

மண்ணில் விழுந்த மழையின் நிறமும் குணமும் மாறுவது போல உலகில் விழுந்து உண்(ம்)மை மறந்து போன எங்களை தேறிவரச் செய்தாய் மண்குணம் மாற்றி – உந்தன் செங்குணம் தந்தாய் இம்மையில் மறுமை தந்தாய் உண்மையில் வறுமை தீர்த்தாய் புலம் பெயர்ந்து போனாலும் நிழல் அகன்று போகாதே எப்போதும் துணை என முப்பொழுதும் எமை தப்பாமல் காப்பவர்… காத்தவர் நீர் திரிதீண்ட ஒளி சிறக்குமே உமை வேண்ட வழி திறக்குமே உன் விதியில் எங்களை சரிபார்க்க இனம் புரியாத வலி பிறக்கும் சிக்கல் சிரமங்கள் தொடர்ந்தாலும் பிக்கல் பிடுங்கல் எது வந்தாலும் அக்குவேராய் பிரிந்துபோனாலும் சுக்குநூறாய் உடைந்து கிடந்தாலும் கரம் நீட்டி காத்தவனே – வினைகளை புறம் தள்ளிப் பார்த்தவரே – உம்மை சிரம் பணிந்து வணங்குகிறோம் வரம் தந்த நாயகனே! – J.பாலசந்தர், உதவி ஆசிரியர் ******* … Read entire article »

Filed under: கவிதைகள்

கடவுளின் வருகைபற்றி வள்ளலார் கூறுவது என்ன?

கர்மயோகி அல்லது கடவுளை கிரஹித்து உணர்ந்த ஓர் பக்தனின் குணங்களாக வள்ளலார் கூறுவது என்ன? சென்ற இதழின் தொடர்ச்சி….. பாங்கி தலைவி பெற்ற்றி உரைத்த்தல்: திருவருட்ப்பா 6-ம் திருமறை (வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்ள வசதியாக இப்பாடல் பதம் பிரித்து எழுதப்பட்டுள்ளது) பாடல் எண்:1062 அன்னையைக் கண்டு அம்மா நீ அம்பலத்து என் கணவர் அடியவளேல் மிக வருக அல்லள் எனில் இங்கே என்னை உனக்கு இருக்கிறது ஏகுக என்று உரைப்பாள் இச்சை எலாம் உம்மிடத்தே இசைந்தனள் இங்கு இவளை முன்னையள் என்று எண்ணாதீர் தாழ்த்திருப்பீர் ஆனால் முடுகி உயிர் விடுத்திடுவாள் கடுகிவரல் உளதேல் மன்னவரே உமது திருவாய் மலர வேண்டும் வயங்கு திருமணிமன்றில் வாழ்பெரிய துரையே தெளிவுரை: மகிமைமிக்க தெய்வீக திருச்சபையில் வாழ்கின்ற பெரிய சீமானே! எங்கள் மன்னவரே! தன்னைப் பெற்றெடுத்த தாய், தன்னை நோக்கி வருவதைக் கண்ட என் தோழியாகிய கோபிகை “அம்மா ஞான சபையின் நாயகனும் என் கணவனுமாகிய கடவுளுடைய அடியவளாக நீ இருந்தால், என்னோடு நன்கு ஐக்கியம் கொள்க. அப்படி இல்லையென்றால், இங்கே உனக்கு என்னிடம் என்ன உறவு இருக்கிறது? சென்று விடுக” என்று வைராக்கியத்துடன் உரைக்கிறாள். தனது விருப்பங்களையெல்லாம் உம்மீதே கொண்டிருக்கிறாள். ஆகவே இவளை ஓர் பழமைவாதி அல்லது ஒன்றும் அறியாத பேதைப் பெண் என்று எண்ண வேண்டாம். அவளிடம் வருவதற்கு நீர் தாமதம் செய்வீர் … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

பிரார்த்தனையின் சக்தி

சென்ற இதழில் பிரார்த்தனை என்பது நாம் இறைவனிடம் நமக்கு தேவையானதை கேட்பதாகும். அதை பிச்சைக்காரனைப்போல கேட்காமல் உரிமையுடன் கேட்க வேண்டும். மூன்றாவதாக மனம் இலேசாவதற்கு மனத் துயரங்களை இறைவனிடம் கூறுகிறோம். நான்காவதாக நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கிறோம். ஐந்தாவதாக நம்முடைய பிரார்த்தனை சுயநலமற்றதாக இருக்க வேண்டும் என பார்த்தோம். “அசத்தியத்திலிருந்து சத்தியத்திற்கும் இருளிலிருந்து ஒளிக்கும், மரணத்திலிருந்து மரணமில்லாப் பெருவாழ்விற்கும் எம்மை அழைத்துச் செல்க” என்பதாக இந்துக்களின் பிரார்த்தனை அமைகிறது. எத்தனை உன்னதமான பிரார்த்தனை, மனித சம்சாரத்திலிருந்து நாம் விடுபட கேட்க வேண்டும். அதுவே நாம் செய்ய வேண்டிய முக்கியமான பிரார்த்தனையாகும். இயேசு பிரான் மற்றவர்கள் காணும்படியாக ஆலயங்களில் பிரார்த்தனை செய்யாமல், உன் வீட்டில் கதவை பூட்டி, உன் அறையில் இறைவனிடம் பிரார்த்தனை செய் என்கிறார். அப்பொழுது எல்லோரும் அறியும் வண்ணம் இறைவன் உன் பிரார்த்தனைக்கு பதிலளிப்பார். பிரார்த்தனை செய்யும்போது நமக்கு தாழ்மை ஏற்படுகிறது. தாழ்மை என்ற சுபாவம் ஒருவனிலிருக்கும்போது அது அவனுக்குள் இருக்கும் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்துகிறது. “அல்லாஹு அக்பர்” என்று சொல்லி ஒருவன் தொழுகையைத் துவங்கும்போது நான் பெரியவன் அல்ல, எனது ஆஸ்தி பெரியதன்று, என் பட்டங்களோ பதவிகளோ பெரியவை அல்ல என்பதற்கு வாக்கு மூலம் அளிக்கிறான். நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னரே உங்களுக்கு இன்னது தேவை … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

கீதாஞ்சலி

“உன் ஆசைகளின் பெருமூச்சு விளக்கொளியை அணைத்து விடுகிறது. அது நல்லதல்ல. அவலட்சணமான உன் கைகளால் பரிசுகளை எடுத்துச் செல்லாதே. புனித அன்பினால் கொடுக்கப்படுவதையே ஏற்றுக்கொள்”. நான் இவ்வுலகத்துக்கு ஒளியாக இருக்கிறேன் என்று இறைவன் கூறுகிறார் என்பதை விவிலியத்தின் வாயிலாக அறிகிறோம். நம் மனதில் சுடர் விடும் ஒளியாக இருப்பவர் இறைவன். லௌகீக ஆசைகள் இறைவன் என்னும் ஒளி அணைந்துபோகும்படி செய்கிறது. ஆக இரண்டும் அதாவது இறைவனும், லௌகீக ஆசைகளும் மனதில் இருக்க முடியாது என்பது தெளிவாகிறது. அவலட்சணமான உன் கைகளினால் இறைவனுக்கு வெகுமதிகளை அர்ப்பணிக்காதே. நம் கைகள் எவ்வாறு அவலட்சணமாகிறது? லௌகீக ஆசையுடைய மனதுடன் நாம் இறைவனிடம் எதையாவது அர்ப்பணிக்கும்போது, நம் கைகள் அவலட்சணமாக காட்சி அளிக்கிறது. ஆகையால் லௌகீக ஆசைகளை களைந்து விட்டு அழகான கைகளினால் அவருக்கு காணிக்கை செலுத்த வேண்டும் என்று ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா விளக்கம் அளிக்கிறார். “உன் பாதபீடம் இங்கே இருக்கிறது. தரித்திரர்களும், தாழ்த்தப்பட்டவர்களும், இழக்கப்பட்டுப் போனவர்களும் வசிக்கும் இடத்தில் உன் கால்கள் படிந்திருக்கின்றன. உனக்கு வணக்கம் செலுத்த முயற்சிக்கும்போது, என்னால் தாழ்ந்து உன் பாதங்களை அடைய முடிவதில்லை. அவைகள் இன்னும் தாழ்வாக தரித்திரர்கள் இடையேயும் தாழ்ந்தவர்கள் இடையேயும், இழக்கப்பட்டு போனவர்களிடையேயும் இருக்கின்றன”. இறைவன் எங்கே இருக்கிறார்? ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம். ஆம். உண்மையில் இறைவன் ஏழை எளியவர்களிடம்தான் … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்