தமிழ் | తెలుగు

» Archive

கடவுள் என்பதன் பொருள்

1. அகண்டாகண்டன் 2. அகநிலை 3. அகாரி 4. அசலன் 5. அச்சயன் 6. அச்சுதன் 7. அடிகள் 8. அதிகுணன் 9. அதுலன் 10. அத்தன் 11. அந்தாதி 12. அபயன் 13. அமலன் 14. அருட்குடையோன் 15. அருளாழி 16. வேந்தன் 17. அரூபி 18. அறக்கொடியோன் 19. அறவாழி மன்னன் 20. அறுகுணன் 21. அனகன் 22. அனந்தஞானி 23. அனந்தலோசனன் 24. அனந்தன் 25. அனாதி 26. ஆதி 27. ஆதிபுங்கவன் 28. இறையோன் 29. ஈசன் 30. ஈச்சுரன் 31. ஈறிலி 32. உள்வழி கடந்தோன் 33. உள்ளத்துறைவோன் 34. எண்குணத்தோன் 35. ஏகதேவன் 36. ஏகன் 37. ஐ 38. ஐம்புலத்தடங்கான் 39. கருணாலயன் 40. கருத்தாகுணநிதி 41. குணபத்திரன் 42. சகநாதன் 43. சகல வியாபி 44. சச்சிதானந்தன் 45. சதாநந்தன் 46. சுயம்பு 47. சருவேச்சுரன் 48. சாமி 49. சீதி 50. சோதி 51. நற்பரன் 52. தணிக்கோலான் 53. தாபரன் 54. தேவன் 55. தேவாதி நாயகன் 56. நிதானன் 57. நித்தன் 58. நிமலன் 59. நிரஞ்சனன் 60. நிரந்தரன் 61. நிரம்பன் 62. நிராமபன் 63. நிருநாமன் 64. நிருமலன் 65. நிரூபன் 66. நீதிபரன் 67. பகவன் 68. பகாப்பொருள் 69. பரஞ்சோதி 70. பரதுக்கதுக்கன் 71. பரப்பிரம்மம் 72. பரமம் 73. பரமேசுவரன் 74. பரம் 75. பராபரம் 76. பிதா 77. பிரமம் 78. பிரான் 79. பிறப்பில்லான் 80. புங்கவன் 81. பூரணன் 82. மயேச்சுரன் 83. மாசேனன் 84. முக்குற்றங்கடிந்தோன் 85. முதலோன் 86. முத்தொழிற்பகவன் 87. முழுதொருங்குணத்தோன் 88. முன்னூற்கேள்வன் 89. முன்னோன் 90. மூவுலகாதாரன் 91. மூவுலகாளி 92. மூவுலகேந்தி 93. விதித்தோன் 94. விமலன் 95. வினைவிநாசன் 96. வேதன் 97. வேதா 98. வேதாந்தன் 99. வேதார்த்தன். ஆதாரம் :- நா. கதிரைவேற்பிள்ளையின் பொருளகராதி ******** … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

ஞமலிபோல் வாழேல்

ஞமலி என்றால் நாய் என்று பொருள். நாயைப் போல் வாழாதே என்கிறார் பாரதியார். “பிறர் உண்டு எஞ்சிய எச்சிலைத் தின்று வாழ்வது நாய். அதுபோல் பிறருடைய உழைப்பினால் வந்ததை நுகர்ந்து சோம்பேறியாய் வாழாதே” என்பது இதற்குரிய விளக்கமாகும். நாய், தன் இனத்தையே நெருங்கவிடாமல் பகையுணர்ச்சி காட்டும். அது மட்டுமல்ல, அடங்காத ஆசையுடைய மிருகம் நாயாகும். எப்பொழுதும் பார்த்தாலும் எதையேனும் தேடி அலைந்துகொண்டே இருக்கும். ஓர் இடத்தில் அமைதியாய் இருக்காது. “அங்காடி நாய் போல் அலைந்து திரிந்தேனே” என்பார் பட்டினத்தார். உலக மோகங்களில் மூழ்கிக் கிடப்பவர்களையும், இச்சைகளுக்குப் பின்னால் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு ஓடிக் கொண்டிருப்பவர்களையும் நாய்க்கு ஒப்பிடுகிறது திருக்குர்-ஆன். மேலும் நபியே ஒரு மனிதனின் நிலையை நீர் இவர்களுக்கு எடுத்துரைப்பீராக. அவன் எத்தகையவன் என்றால் நாம் அவனுக்கு நம்முடைய வசனங்களின் அறிவை வழங்கியிருந்தும் அவன் அவற்றைப் பின்பற்றாமல் நழுவி ஓடினான். இறுதியில் சைத்தான் அவனைப் பின்தொடர்ந்தான். இவ்வாறாக அந்த மனிதன் வழிகெட்டவர்களில் ஒருவனாகி விட்டான். நாம் நாடியிருந்தால் நம் வசனங்களின் மூலம் அவனை உயர்த்தியிருப்போம். ஆயினும் அவன் இவ்வுலக வாழ்விலேயே மோகம் கொண்டான். மேலும் தன் மன இச்சைகளையே பின்பற்றலானான். எனவே அவனுடைய நிலை நாயைப் போன்றதாகும். அதனை நீர் துரத்தினாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டுதான் இருக்கும். … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து