தமிழ் | తెలుగు

» Archive

கடவுளின் அன்பால் நிறைந்திருக்க வேண்டும்

ஸ்ரீமந்  நாராயணர்  ஸ்ரீ  லஹரி  கிருஷ்ணாவின் சொற்பொழிவில் இருந்து தொகுக்கப்பட்டது ஜனங்கள் இறைவனுடய வார்த்தைக்கு உண்மையாக நின்று வந்திருக்கிறார்கள். எதற்காக? ஆதாயம் இல்லாமல் எவரும் எதுவும் செய்கிறதில்லை. ஜோதி ராமலிங்கம் அடிகளார் ஒரு சிவபக்தனாக இருந்தார். அவர் இறைவனுடைய பெயரை “அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை” என்று அழைக்கிறார். அவர் கிருபையுள்ள மகத்தான ஒளி, ஒப்பில்லாத பரிபூரண கிருபை என்று கூறினார். அவர் கிருபையில் மகத்தான ஒளியாக இருக்கிறார். தனிப்பெரும் கிருபை என்பது ஒப்பற்ற பரிபூரண கிருபையாகும்.  ஒப்பற்றவிதத்தில் அவர் அவருக்கு மட்டுமே விசேஷமான கிருபையை அளித்துள்ளார். அந்த இறைவன் மூலமாக மரணமில்லாத வரத்தை நான் பெற்றிருக்கிறேன் என்கிறார். அவர் மூலமாக நித்திய ஜீவனை நான் பெற்றுக்கொண்டேன் என்று ராமலிங்க அடிகளார் கூறுகிறார். இன்று இறைவனுடைய அன்பு நம்முடைய அன்பையும் உரிமையுடன் கேட்கிறது. அன்பு என்பது முகத்தையோ, அல்லது நிறத்தையோ, அழகையோ குறிப்பதல்ல என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். ஏன்? அவைகள் காலத்தினால் மறைந்து மாறிப்போகும் தன்மையுடையவை ஆகும். ஆதிபலியை (ஆதியக்ஞத்தை) பற்றி நீங்கள் அறிந்துகொள்ளும்போது, அந்த அன்பைப் பார்க்கிலும் மேலான அன்பாக எந்த அன்பையும் நான் காணவில்லை. நாம் இந்த பூமியில் வந்து கஷ்டப்படுவோம் என்பதை அறிந்துகொண்டு, அவர்  நமக்காக எல்லாவற்றையும் முடித்துவிட்டார். அவர் இனிமேல் நமக்காக செய்ய வேண்டிய … Read entire article »

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்

கிழக்கே தோன்றிய மின்னல் – 3

ஒரு நாள் கலிபோர்னியாவில், லாறி தெருமுனை பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். ‘உங்களுக்கு என்ன வேண்டும்? கடவுளிடம் கேளுங்கள். உங்கள் தேவைகளை நிறைவேற்ற அவர் காத்திருக்கிறார் என்று, தனக்கே உரிய கம்பீரமான சிம்மக் குரலில் முழங்கி கொண்டிருந்தார் லாறி முத்துக்கிருஷ்ணா. அவர் பிரசங்கத்தை கேட்டுக் கொண்டிருந்த ஒருவன் சட்டென ஒரு கேள்வியை கேட்டு அவரை திக்குமுக்காடச் செய்தான். “பிரசங்கியாரே! நீர் சொன்னது உண்மையா என்று சோதித்து பார்க்க விரும்புகிறேன். இப்பொழுது எனக்கு தேவை நூறு டாலர். கடவுள் எனது தேவையை நிறைவேற்றுவாரா” என்று கேட்டு, கை நீட்டி நின்றான். சுற்றியிருந்தவர்கள் ஏளனமாக லாறியைப் பார்த்தனர். ‘ஆண்டவரே நான் சொன்னது பொய்யா. நான் சொன்னது சத்தியம் என்று எப்படி நிரூபிக்க போகிறீர்’ என்று ஆண்டவரிடம் மனதிற்குள் முறையிட்டார் லாறி முத்துக்கிருஷ்ணா. கண்மூடி கண் திறப்பதற்குள் அந்த அதிசயம் நடந்து முடிந்தது. அந்த கூட்டத்தினர் ஆண்டவரின் பிரதிநிதியாக மரியாதை கலந்த பயத்துடன் லாறியைப் பார்த்தனர். அதற்கு காரணம், கூட்டத்திலிருந்த ஒரு நபர் சட்டென தன் பாக்கெட்டிலிருந்த நூறு டாலரை எடுத்து அந்த மனிதனின் கையில் வைத்ததுதான். ‘இது எனக்கு கடவுள் இட்ட கட்டளை. நேற்று கடவுள் என் கனவில் வந்தார்’ என்று லாறியின் காதில் கிசுகிசுத்துவிட்டு கூட்டத்தோடு கூட்டமாக, கடவுளின் பிரதிநிதியாக … Read entire article »

Filed under: பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை

அல்லாஹ்வின் பார்வையில் – 1

ஆயிரம் வருடங்கள் அல்லாஹ்வின் பார்வையில் ஒரு நாளாயிருக்கிறது ஸூரா-22 வச.47: மேலும் நிச்சயமாக, உம் இரட்சகனிடத்தில் ஒரு நாளாகிறது, நீங்கள் கணக்கிடும் ஆயிரம் வருடங்கள் போன்றதாகும். ஸூரா-32 வச.5: வானத்திலிருந்து பூமி வரை உள்ள காரியத்தை அவன் நிர்வகிக்கின்றான்; பின்னர் நிர்வகிக்கப்பட்ட காரியமான அது நீங்கள் எண்ணுகின்ற உங்கள் கணக்கின்படி ஆயிரம் வருடங்களாக அதனுடைய அளவு இருக்கும் அந்நாளில் அவன் பக்கம் உயரும். – தொடரும்… ******* … Read entire article »

Filed under: சங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம்

தருவது யார்? பெறுவது யார்?

நான் இளம் பருவத்தில் சென்னையில் வீணை பயின்று கொண்டிருந்தேன். அப்பொழுதே விரிவுரையும் புரிவேன். பாம்பன் சுவாமிகளின் சீடர் அத்தியாச்சிரமி பாலசுந்தர சுவாமிகள் என்னுடன் அன்பாய் பழகி வந்தார். ஒருநாள் பாலசுந்தர சுவாமிகள் என்னை அழைத்துக்கொண்டு வண்ணாரப் பேட்டையில் ஒரு கிராமணியாரின் இல்லத்துக்குச் சென்றார். அந்தக் கிராமணியார், அள்ளி வழங்குகின்ற வள்ளலாவார். பழுமரத்தை நாடிப் பறவைகள் போவதுபோல் அவரை நாடிப் பல சந்நியாசிகளும் வறியவர்களும் வருவார்கள். அவர் 10 ரூபாய், 15 ரூபாய் என்ற தொகைகளைத் தன் கையில் வைத்துக்கொண்டு, ‘எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறுவார். அவர்கள் எடுத்துக்கொள்வார்கள். இதை நான் கண்டேன். இதன் கருத்து எனக்குப் புரியவில்லை. அவரை கேளாமலேயே தெரிந்துகொள்ள வேண்டும் என்று நெடுக சிந்தித்தேன். ஒன்றும் புரியவில்லை. கேட்டேன். அவர் விளக்கினார். “என்பால் வருகின்றவர்கள் எத்தனையோ புண்ணிய தலயாத்திரை, தீர்த்த யாத்திரை செய்திருப்பார்கள். அவர்கள் எனக்கு அருளைத் தருகின்றார்கள். நான் அவர்களின் அருளைப் பெறுகின்றேன். அருள் கண்ணுக்குத் தெரியாது. நான் பெறுகின்ற அருளுக்கு காணிக்கையாக இச்சிறிய பொருட்களை அவர்கள் எடுத்துக் கொள்கின்றனர். ஆதலால், அருளைப் பெறுகின்ற என் கை கீழே இருக்கின்றது. அருளைத் தருகின்ற அவர்களின் கை மேலேயிருக்கிறது” என்றார். நாம் அறம் செய்கிறோம் என்ற எண்ணமே அவருக்கு இல்லை. இந்தப் பொருளடங்கிய மொழிகளைக் … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்

இந்தியாவின் நட்சத்திரம் 2015 விருது

மனுஜோதி ஆசிரமத்தலைவர் பால்உப்பாஸ் லாறிக்கு முன்னாள் இந்தியப் பிரதமர் தேவகவுடா வழங்கினார். பெங்களூரு. மார்ச். 14- ஆன்மீக சேவகருக்கான இந்தியாவின் நட்சத்திரம் 2015 விருதை திருநெல்வேலி மாவட்டம் மனுஜோதி ஆசிரமத்தின் தலைவர் பால் உப்பாஸ் லாறி – லியோ பால் லாறி ஆகியோருக்கு இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகவுடா வழங்கினார். விருதைப் பெற்ற பால் உப்பாஸ் எதிர்காலத்தை நிர்ணியிக்கின்ற இறைவனுக்கே வெற்றி வெற்றி என்று கூறியதோடு இந்த விருதை  பெற நல்வழிகாட்டிய ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவுக்கும் தனது தந்தை தேவாசீர் லாறிக்கும் சமர்ப்பணம் செய்வதாகவும் கூறினார். மேலும் PAN INDIA நிறுவனத்தினருக்கு நன்றியைத் தெரிவித்தார். மேலும் அவர் பேசும்போது, “முன்னாள் பிரதமர் திரு.தேவகவுடா அவர்களுக்கும், மற்றும் இந்தியாவின் நட்சத்திர விருதை பெற்ற நண்பர்களுக்கும் அரங்கத்தில் கூடியிருக்கும் அன்பர்களுக்கும் ஸ்ரீமன் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தால் வாழ்த்துகிறேன். மனுஜோதி ஆசிரமத்தின் சார்பாக இந்த விருதை எனது சகோதரர் லியோ பாலுடன் சேர்ந்து நான் பெறுவதற்கு மிகவும் மகிழ்கிறேன். இந்த மகத்தான விருதை எனக்கு பெற்று தந்தமைக்காக பகவான் ஸ்ரீமன் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மனித குலத்துக்கு சேவை செய்வதும், அகில உலக சகோதரத்துவத்தை வளர்ப்பதும் எங்களுடைய தலையாய கடமையாகும். எங்களது ஆசிரமத்தில் … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்

கற்கள் நடந்து போகுமா?

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள ‘ரேஸ் டிரெக் பிளாஸா’ என்ற இடம் மிகவும் பிரசித்தி பெற்றது. இதற்கு ‘மரண சமவெளி’ (Death valley) என்ற இன்னொரு பெயரும் உண்டு. ஏன் தெரியுமா? இங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்களையோ உயிரினங்களையோ, மரம், புல் பூண்டுகளையோ பார்க்க முடியாது.  கிட்டத்தட்ட பாலைவனம் போல என்று வைத்துக் கொள்ளுங்கள். இங்கே எந்தவிதமான உயிரினங்களும் இல்லாததால் இதை மரண சமவெளி என்றழைக்கிறார்கள். இங்கே வறட்சி அதிகமாக உள்ள காலங்களில் நிலங்கள் வெடிக்கும். குளத்தில் தண்ணீர் வற்றினால் வறட்டிபோல இருக்கும் அல்லவா? அது போல அப்படி வெடிக்கும் இடங்களில் எல்லாம் ‘ஐஸ்’ படர்ந்திருக்கும். இங்கு இன்னொரு மர்மமும் இருக்கிறது. இந்த மர்மபூமியில் கற்கள் தானாகவே நகர்ந்து செல்லுமாம். நீண்ட காலமாக நடந்து வரும் இந்த மர்மத்திற்கான காரணம் இதுவரை யாருக்குமே தெரியாது. கற்கள் தானாக நகருவதற்கான அடையாளங்கள் மட்டும் தெளிவாக உள்ளன. இந்த இடத்தில் உள்ள கற்கள் 2 அல்லது 3 ஆண்டுகளில் அந்த முழுப் பிரதேசத்தையுமே சுற்றி வருவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த பரந்த நிலப்பரப்புக்கு அருகே உள்ள மலையில் இருந்து கற்கள் உடைந்து துண்டுகளாக விழுகின்றன. அவையே இந்தப் பகுதியில் இப்படிச் சுற்றித் திரிகின்றன. சில கற்கள் 10 ஆயிரம் அடிகள் … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்

ஸ்ரீ சமர்த்த ராமதாஸர்

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! ஸ்ரீ சமர்த்த ராமதாஸர், ஒருநாள் தாஸர் காட்டிலே வேடிக்கையாகப் பழங்களைக் கவண் கல்லால் எறிந்தபொழுது, அது தவறி ஒரு பறவையின்மீது பட, அது கீழே விழுந்து இறந்தது. அச்செயல் ஏற்கனவே இவரை அரச குருவாக இருப்பதற்கு தகுதியற்றவர் என்று தூற்றிக்கொண்டிருந்த சிலருக்கு நல்லதொரு வாய்ப்பாயிற்று. அவர்கள், “அந்தணர்கள் கொல்லா விரதங்கொண்ட பெரியோர்கள். இந்த ராமதாஸரோ, பறவைகளைக் கொல்லும் கயவர். இவரைப் பக்தர் என்று புகழ்கிறார்களே!” என்றனர். தாஸர், அவர்களை அழைத்து, “நான் அறநெறி தவறிவிட்டேன். நீங்கள் எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகும் அந்தணர்கள். ஆகவே, வந்து இந்தப் பறவையை எழுப்பித் தர வேண்டும்” என்றனர். அதற்கு அவர்கள், “இது ராமனாலும் ஆகாது” என்றனர். உடனே அவர், ஸ்ரீராமத்ரயோதசாக்ஷரத்தை உச்சரித்து, அப்பறவையின் உடலை வான வீதியிலே விட்டெறிந்தனர். பறவை கீச்சிட்டுப் பறந்து சென்றது ‘ம்ருத சஞ்ஜீவனம் ராமசரித்திரம்’ என்றார் பட்டர். அந்தணர்கள் வியந்தனர். இதன்பின் இவர் மூடனைத் திருத்தி நல்வழிப்படுத்தினர்; பின் காட்டிலே அமைதியானதொரு சூழ்நிலையிலே தியானம் செய்ய உட்கார்ந்தார். அந்தச் சமயம் துக்காராம் ஸ்வாமிகளின் இனிமையான பாடல்கள் இன்னிசையுடன் கலந்து காற்றிலே மிதந்து வந்தன. சற்று நேரத்திற்கெல்லாம் பண்டாபுரம் செல்லும் ஒரு கோஷ்டி அவர் முன்னே நின்றது. மிகுந்த பணிவுடன், “நீங்களும் பண்டரிபுரத்துக்கு எழுந்தருள … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்

ஏழாம் உபதேசம்

தேவனுடைய முதற்பேறானவர் – ஞானம் – ஆதிபுருஷரைப் பற்றிய இரகசியம் என்னென்ன விதமான குணங்கள் இருந்தபோதிலும், என்னால் பிறப்பிக்கப்பட்ட சாத்வீகர்களும், பூமிக்குரியவர்களான ரஜோ குணமுள்ளவர்களும், காமத்தினால் தந்தை தாய்க்கு பிறந்தவர்களும், மிருகத்தன்மை உடையவர்களும், உலகத்தினால் பிறந்தவர்களும், தாமஸ குணம் உடையவர்களுமாகிய இவர்கள் அனைவரும் என்னிடமிருந்தே உண்டானவர்கள் என்பதை அறிவாயாக. ஆனால் உண்மையில் நான் அவர்களிடம் இல்லை, அவர்களும் என்னுள் இருப்பதில்லை (மூன்று பிரிவினரும் கடவுளிடம் இருந்து தோன்றுகின்றனர்). சாத்வீக குணம், ரஜோ குணம் மற்றும் தாமஸ குணமுள்ள இந்த மூன்று சுபாவங்கள் அல்லது குணங்களால் என்னுடைய முழு சிருஷ்டிப்பானது மாயமானவைகளால் அல்லது தவறான நம்பிக்கையினால் நிறைந்திருக்கிறது.   ஆகவேதான் அவர்கள் என்னை அறிந்துகொள்ள தவறுகிறார்கள். நான் இந்த மூன்று குணங்களுக்கும் அப்பாற்பட்டவன், தனிப்பட்ட  குணமுடையவன்,  நான் அழிவற்றவன். எவர்கள் இந்த மூன்று குணங்களையும் விடுவதில்லையோ அவர்கள் இந்த அற்புதமான என்னுடைய மகிமையை அடைவது அரிதாகும். ஆனால் என்னால் முன் குறிக்கப்பட்டவர்கள் என்னையே பூஜித்து, அவர்கள் மாத்திரமே மரணத்தை மேற்கொண்டு என்னுடைய மகிமையைக் காண்பார்கள். தங்களுடைய சொந்த அறிவுடையவர்களும், மாயையினால் இழுத்துச் செல்லப்பட்டவர்களும், சாத்தானுடைய குணமாகிய கண்டுவிசுவாசிக்கிற தன்மையை தழுவுகிறவர்களும் ஆகிய அப்படிப்பட்ட மதியீன நீசர்கள் என்னுடைய மகிமையை காண்பதில்லை. அர்ச்சுனா பூலோக செல்வங்களை நாடுகிறவர்கள், துன்புற்றவர்கள், பூலோக ஞானத்தை தேடுபவர்கள் மற்றும் ஞானம் அல்லது பரமபுருஷரின் … Read entire article »

Filed under: ஸ்ரீமத் பகவத்கீதை