தமிழ் | తెలుగు

» Archive

லஹரியின் பெயர் மகி

லஹரி பெயரை சொன்னாலே இடியின் சத்தம் கேட்குதே! இயற்கை சக்திகள் அனைத்துமே லஹரிக்கு அடி பணியுதே! மக்கள் கூட்டம் அனைத்துமே! சத்திய நகரம் வருகுதே மதபேதங்கள் இன்றியே! மகிழ்ந்து கூடி களிக்குதே!   P. விஜயலட்சுமி, ஜெயங்கொண்டான் ******* … Read entire article »

Filed under: கவிதைகள்

ஓம் நமோ நாராயணா போற்றி!

ஓம் நமோ நாராயணா வென்று ஓம்கார நாதத்தை யான் எழுப்பும்போது, ஒன்றிய உலகம் உடனுறைந்து வந்து உதவுவதைப் போல் உணர்கின்றேன் யானே! போற்றி! போற்றி! போற்றி! சொல்வேன்; உம்பொன்னடி போற்றி புகழினைப் பாடி, இம்மண்ணும் உலகில் மகிழ்வுடன் வாழ, இம்மணியினுள் இருந்து அருள் புரிவீரோ! கவிதாயினி மணி அர்ஜூனன், நீலகிரி ******* … Read entire article »

Filed under: கவிதைகள்

அருள் புரியும் லஹரி நாயகா!

வெற்றிமேல் வெற்றி தரும் வேதநாயகா! வேண்டுவோர்க்கு அருள்புரியும் லஹரி நாயகா! புலவன் பெற்ற ‘கொடை’- அவன் வறுமையை வென்றது! வழியில் நிற்கும் ‘நிழற்குடை’ வெயிலை வென்றது! கையில் இருக்கும் ‘கருங்குடை’ மழையை வென்றது! ஒரு குடையின்கீழ் ஆட்சிசெய்யும்….. உம்முடைய ‘மகிமை கொடையே!’…. மரணத்தை வென்றது ஓ.. நீதியின் சூரியனே…! நித்திய காரியனே! வானுயர புகழ் கூட்டி…. உம் வாய் வார்த்தைக்கு தலை ஆட்டி… வாழையடி வாழையாய்… வாடிக்கையாய் வாழ்த்தப் பாடல்கள் உமக்கே! கே. ராமகிருஷ்ண மூர்த்தி, கோவை ******* … Read entire article »

Filed under: கவிதைகள்

நமது ஸ்ரீ லஹரி

 அமைதியைத் தருவார் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா  ஆறுதலை அளிப்பார் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா  இயல்பாய் வைப்பார் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா  ஈகையை வளர்ப்பார் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா  உயர்வினைத் தருவார் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா  ஊக்கம் உண்டாக்குவார் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா  எண்ணங்கள் அறிவார் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா  ஏக்கங்கள் களைவார் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா  ஐயங்கள் அகற்றுவார் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா  ஒற்றுமை கொடுப்பார் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா  ஓம் எனும் மந்திரமே ஸ்ரீ லஹரி கிருஷ்ணா  ஒளவையின் ஆத்திச்சூடி ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கண்ணியம் காப்பார் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா காரிருள் போக்குவார் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கிருபையாய் இருப்பார் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கீர்த்தியை அளிப்பார் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கும்பிட்டுத் தொழுவோம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூப்பிட வருவார் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கெட்டதை விளக்குவார் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கேட்டதை தருவார் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கைகளில் பலம்தருவார் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கொள்கையில் இருப்பார் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கோயிலில் தெய்வம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கௌதமர் போன்றவர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா எஸ். இரகுநாதன், சென்னை *******   … Read entire article »

Filed under: கவிதைகள்

மார்கழியின் மாமன்னா மாயவா!

நீர் சூழ்ந்த நிலத்தினில் – நீலவண்ணா நின்னைச் சார்ந்த பக்தியினில்; கார்மேகக் காலையினில் – கனிகண்ணா கனிந்து வந்த பாமாலையினில்; ஊர்கூடிய கூட்டத்தினில் – தவகிருஷ்ணா உயிர்ப்பித்ததான ஊர்வலங்களில்; யார் நாயகன் என்றறிவதில் – யுவயசோதரா யாசிக்கின்ற உள்ளங்களில்……. தீர்வாகவோ நின்நாமம் – நீள்நரசிம்மா திகட்டாமல் கூறுகிறேன்; மார்கழியின் மாமன்னா – யுகமாயவா மண்ணுலகினில் வேரூன்றிய….. கார்த்திகையின் சகோதரமான – புவிமாதவா கன்னிமார்கழியின் கடைவிழிகளில்….. பூர்த்தியாகும் புதுமைகளின் – புதுகோகுலா பூசையேற்கவோ புறப்படுகின்றன! நார்த்தொகுப்பினில் நளினம்காணும் – நவநீதா நவமலர்களின் மாமாலைகளில்….. தேர்ந்தெடுக்கும் நறுமணங்கள் – தசாவதாரா தேவைக்கேற்ப கிட்டுகின்றன; வேர்த்துளைத்த விரிமண்போல் – கீதோபதேசா வெற்றியத்தின் வீரம்புகள்; கீர்த்திப்பெற்று துலங்கிடவோ – நீலநயனா கிளர்ந்தெழும்புகின்றது மார்கழிகீதம்! ந. சங்கமன் சண்முகன் சமன்குமார், நீலகிரி ******* … Read entire article »

Filed under: கவிதைகள்

நவம்பர் – டிசம்பர் 2014 – Jan 2015

அன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே, ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்! 2014-ம் வருடம், அக்டோபர் மாதம் 3-ம் தேதி நடைபெற்ற நீதியுக ஸ்தாபக விழாவானது, மனுஜோதி ஆசிரமத்தில் கூடி வந்திருந்த எல்லாருக்கும் மற்றும் உலகெங்கிலும் உள்ளவர்களுக்கும் ஆசீர்வாதமாக இருந்தது. ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பிரசன்னம் அந்நாள் முழுவதும் இருந்ததை உணர முடிந்தது. செப்டம்பர் மாதம் 4-ம் தேதி முதல் 14-ம் தேதி வரையும், அக்டோபர் மாதம் 4-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையும் தேனி, கோவை, ஈரோடு, திருப்பூர், ராமநாதபுரம் போன்ற பல மாவட்டங்களுக்கு ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற கொள்கையை மக்களுக்கு பிரச்சாரம் செய்யச் சென்றனர். நான் ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்று வந்தேன். நவம்பர் மாதத்தில் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகளை மக்களுக்கு அறிவிக்க ஆந்திரா மாநிலத்திற்கு நாங்கள் குடும்பமாக சென்றிருந்தோம். 1987-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதியன்று ஸ்ரீ லஹரி கிருஷ்ணா ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகளை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். இன்றைக்கு ஜனங்கள் தங்களுடைய திறமைகளை உபயோகிக்க விரும்புவதில்லை. இந்த தாலந்துகளைக் கொடுத்தது யார்? இறைவன் இந்த திறமைகளை உங்களுக்கு அளித்திருக்கிறார். ஆனால் … Read entire article »

Filed under: ஆசிரியர் குறிப்பு

கடவுளின் வருகைபற்றி வள்ளலார் கூறுவது என்ன?

கர்மயோகி அல்லது கடவுளை கிரஹித்து உணர்ந்த ஓர் பக்தனின் குணங்களாக வள்ளலார் கூறுவது என்ன?  சென்ற இதழின் தொடர்ச்சி….. திருவருட்பா 6-ம் திருமுறை. 78 பாங்கி தலைவி பெற்றி உரைத்தல் பாடல் எண் 1060: புல்லவரே பொய் உலக போகம் உற விழைவார் புண்ணியரே சிவபோகம் பொருந்துதற்கு விழைவார் கல்லவரே மணி இவரே என்றறிந்தாள் அதனால் கனவிடையும் பொய்யுறவு கருதுகிலாள் சிறிதும் நல்லவரே எனினும் உமை நாடாரேல் அவரை நன்கு மதியாள் இவளை நண்ண எண்ணம் உளதோ வல்லவரே நுமது திருவாய்மலர வேண்டும் வயங்குதிரு மணிமன்றில் வாழ்பெரியதுரையே பொய் உலகபோகம் – இந்த உலக இன்பங்கள் பாசங்கள் நேசங்கள் அனைத்தும் நீர்க்குமிழி போல நிலையற்றவை. அதனால் தான் பொய் உலகபோகம் என்று அழைக்கப்படுகிறது. இறைவனுடைய அன்பு ஒன்றே நித்தியமானது என்பதைக் கண்டுகொண்டதால், இந்த உலகபோகம் பொய்யானது என்பதை கோபிகை எளிதில் அறிந்துகொண்டாள். பொய்யான இந்த உலக போகத்தில் மூன்று காரியங்கள் இருக்கின்றன என்று விவிலிய நூல் கூறுகின்றது. அதாவது, 1. மாம்சத்தின் இச்சை 2. கண்களின் இச்சை 3. ஜீவனத்தின் பெருமை. (I யோவான் 2:15-17) உலகமும் அதன் இச்சையும் ஒழிந்துபோம் கடவுளுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான் என்பதே விவிலிய நூலின் இறுதியான தீர்ப்பு. இறைவன் உனக்கு பெரிதாகத் தோன்றினால், இந்த உலகம் உனக்கு தூசியாகத் தோன்றும் மாறாக, உலகம் உனக்கு … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

இஸ்லாம் தோன்றின வரலாறு

மத்திய கிழக்கு நாடுகளில் இயேசு தோன்றி சில நூற்றாண்டுகள் கழித்து ரோம சாம்ராஜ்யத்துடன் இணைந்து கத்தோலிக்க மார்க்கம் பெரிதளவில் வளர்ந்தது. அச்சமயம் யூதர்கள் இயேசு மரிக்க முடியாது என்ற இரகசியத்தை இருட்டடித்து, அவரை சிலுவையில் அடித்து கொன்றதாகவும், பின்னர் 3-ம் நாள் உயிர்த்தெழுந்ததாகவும், ஒரு கட்டுக்கதை கட்டி, அதைப் பரப்பி கிறிஸ்தவ சமுதாயத்தை உருவாக்கினர். அது ரோம அரசியலுடன் சேர்ந்து மக்களை ஆட்சி செய்த சமயம். கடவுள் ‘முகம்மது’ என்பவருக்கு காட்சியளித்து, வேத இரகசியங்களைக் கொடுத்து மக்களுக்கு வரப்பிரசாதமாக வந்ததுதான் குர்-ஆன் என்ற இஸ்லாமிய வேதமாகும். குர்-ஆன் தோன்றி 1,400 ஆண்டுகள்தான் ஆகிறது. அதில் சூரா 4:155-159. “இன்று அல்லாஹ்வுடைய தூதர் மரியமுடைய மகன் ஈசா மசீஹை நிச்சயமாக நாங்கள் கொலை செய்துவிட்டோம் என்று அவர்கள் கூறியதன் காரணமாகவும், அவரை அவர்கள் கொல்லவும் இல்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. எனினும் அவருக்கு ஒப்பான ஒருவனைக் கொன்றவர்கள் உறுதியாக அவரை கொலை செய்யவில்லை. அல்லாஹ் அவரை எடுத்துக்கொண்டார். மறுமை நாளில் ஈசா நபியே அவர்களுக்கு பாதகமான சாட்சியாக இருப்பார்”. மேற்கண்ட இரகசியத்தை அவர் கூறியவுடன் அவரை அழிக்க திட்டமிட்டனர். முகம்மது காலத்திற்குப்பின்பு வெகுவிரைவில் அவரது கொள்கையானது அவர் பிறந்த ஊரான மெக்காவிலிருந்து மதீனா வரை பரவி ரோம சாம்ராஜ்யத்தையே அழிக்கக்கூடிய அளவிற்கு பெரிதாக உருவாகியது. அப்பொழுது மத்திய கிழக்கத்திய … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்