தமிழ் | తెలుగు

» Archive

மனுஜோதி

மனுஜோதி எங்கள் மனுஜோதி! மக்களை காக்க வந்த மனுஜோதி! ஒன்றே குலமாம் மனுஜோதி! ஒருவனே தேவனாம் மனுஜோதி! திசை எங்கும் பரவும் மனுஜோதி! தீமையை அகற்ற வந்த மனுஜோதி! உள்ளத்தில் ஏற்றுவோம் மனுஜோதி! உயிரை காக்க வந்த மனுஜோதி! ஆதி வேதமாம் மனுஜோதி! அதுவே எங்கள் மனுஜோதி! – ஜெயவேல், சேலம் ******* … Read entire article »

Filed under: கவிதைகள்

மனிதனாக வாழும் வழிகள்

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றோதி அன்பான பாதையிலே ஆன்மீக – தொண்டுகள் செய்து மனுஜோதி சாகரத்தில் நீந்துகின்ற மெய்யன்பர்க் கெல்லோர்க்கும் வாழ்த்து! மனிதன் மனிதனாக வாழும் வழிகள் புனிதமாய் சொல்லும் புதினம் – மனுக்குலம் வாழும் வழியை விளக்கிட வந்ததால் ஏழுலகும் போற்றும் இதை! மனுஜோதி பத்திரிகை மானுடர்க்காக தினுசாக தத்துவமாய் தந்தீர் – அனுதினமும் எல்லோரும் இன்புற்று எந்நாளும் வாழ்ந்திட நல்வழி காட்டிடும் நூல்! இறைவனை நாடுவோர் இன்பத்தில் மூழ்கி குறையின்றி வாழ்வார் களித்து – முறையற்ற வாழ்க்கையை ஏற்று விகற்பங்கள் செய்வது ஊழ்வினை என்றே உணர்! – கே.வி. ஜனார்த்தனன், காஞ்சிபுரம் ******* … Read entire article »

Filed under: கவிதைகள்

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா நமோ நாமம் தோத்திரம்

என் இதயத்தில் இருப்பவர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அய்யா எப்பொழுதும் துதிப்பேன்  ஸ்ரீ லஹரி கிருஷ்ணா நாமம் தாமரை கண்ணா தமிழகத்தில் தலை சிறந்த மன்னா பச்சை நிற மேனியனே பார் அளந்த மாயவனே வானம் பூமி நீர் நெருப்பு கல் முள் செடிகள் ஊர்வன ஜீவ ஜந்துக்கள் எல்லாம் உன் பொறுப்பு அரக்கனை கருவருக்கும் அட்சய பாத்திரமே உன்னை பணிந்தோர்க்கு பரலோகம் சொந்தம் உண்டு இறுமாப்பு உடையோருக்கு எமலோகம் அனல் சொந்தம் காவிய கலையே கையேந்தும் நிலையே உன் மகிமை கண்டோர் தெய்வ பிறவி தர்மம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா நமோ நாமம் தோத்திரம் தோத்திரம் அய்யா ! – கவிஞர் P. துரைசாமி, கீரிப்பட்டி ******* … Read entire article »

Filed under: கவிதைகள்

சந்தோஷ கீதை

மனு ஜோதி சென்று வந்தாலே மனம் ஜோதியாக மாறிடுமே இனிதான காலை மலர் போலே இதமாக உள்ளம் ஆகிடுமே நாராயண நாமம் சொன்னாலே நலம் கோடி நம்மை நாடிவரும் ஏகாந்த நிலையில் ஓரின்பம் இதயத்தை தேடி ஓடிவரும் ஆண்டவன் முன்னே நீதானே பிள்ளை அவர் பார்வை பட்டாலே ஆனந்த முல்லை வேண்டுதல் யாவும் ஜெயமாகிப் போகும் விரும்பிடும் வாழ்வில் சந்தோஷம் சேரும் பூலோகம் ஒருநாள் வைகுண்டமாகும் பூ வாசம் போல சந்தோஷம் வீசும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா காட்டுகின்ற பாதை சந்தோஷம் கூட்டும் புதியதொரு கீதை – கவிஞர் செல்வராஜா, சேலம் ******* … Read entire article »

Filed under: கவிதைகள்

கடவுள் ஒருவரே

கடவுள் ஒருவரே-அவரைக் காணாதவர் பலரே! வையகம் சிறக்க மறைவானவைகள் பலவிதம்! ஸ்ரீ லஹரிக்குள் மண் விண் சமுத்திரமும் குலுங்கும் ஒன்றானவர் நன்றானவர் ஒவ்வொரு உயிரிலும் நின்றானவர் நின் மனம் நிலையானால் உன் குணம் ஐம்புலனொடுக்கம் ஆமைபோல் என்னில் இருந்தால் உன்னுள் நானிருப்பேன் ஆன்மீக அடக்கம் அறிவறிந்தால் நடக்கும் அடக்கம் நடக்கும் ஒடுக்கும் உள்மனம் ஒரே குலம் அடக்கமுடைமை உடைமையும் உயர்வுக்குள் அடக்கா உலகம் மாயையில் இருளால் மடியுமே! – து. அங்கமுத்து, காஞ்சிபுரம் … Read entire article »

Filed under: கவிதைகள்

மே 2014 அன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே, ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்! ஒவ்வொரு முறையும் ‘மனுஜோதி’ பத்திரிக்கையின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிம். ‘மனுஜோதி’ பத்திரிக்கையை வாசித்து, நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களை உங்கள் கடிதங்கள் மூலமாக கிடைக்கப் பெறுகிறோம். இன்னும் சிலர் தொலைபேசியிலும்கூட தொடர்புகொண்டு தங்கள் கருத்துக்களையும், பாராட்டுதலையும் தெரிவிக்கிறார்கள். அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மாணவ மாணவியர்களுக்கான கோடைகால விடுமுறை முகாம் மே மாதம் 4-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மனுஜோதி ஆசிரமத்திலும், 2-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை மனுஜோதி ஆசிரமத்தின் சார்பில், ஆந்திர மாநிலம் அசரடா பகுதியிலும் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. தமிழகம் மற்றும் ஆந்திரா மாநிலத்திலிருந்து மாணவ மாணவியர் இந்த முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றார்கள். “தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே” என்று கீதை கூறுகிறது. கல்கி மகா அவதாரமாக வந்த ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா தர்மத்தை ஸ்தாபிக்க வந்தார் என்று கீதையின் வாயிலாக அறிந்துகொள்கிறோம். தர்மம் என்றால் என்ன? தர்மம் என்ற வார்த்தைக்கு பல பரிமாணங்கள் இருக்கிறது. ஆனால் ஒரு தனி மனிதனுக்கு இது எவ்வாறு பொருந்தும் என்பதைக் காண … Read entire article »

Filed under: ஆசிரியர் குறிப்பு

எது உண்மையான அன்பு?

லியர் என்ற மன்னனுக்கு மூன்று குமாரத்திகள் இருந்தார்கள். அவர் தன்னுடைய ஆஸ்திகளையும் மற்றும் எல்லாவற்றையும் தன்னுடைய குமாரத்திகளுக்குப் பிரித்துக் கொடுக்க விரும்பினார். முதல் மகளிடம் சென்று, மகளே நீ என்னை எவ்வளவாய் நேசிக்கிறாய்? என்று கேட்டார். அப்பா! நீங்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. நீங்கள் என் கண்களைப் போன்றவர். நீங்கள் என்னுடைய தந்தை. கடவுளைக் காட்டிலும், இந்த உலகத்திலுள்ள எல்லாவற்றைக் காட்டிலும் நான் உங்களை நேசிக்கிறேன் என்று கூறினாள். அதேபோல இரண்டாவது மகளிடம் கேட்கிறார். அவள், அப்பா! நான் உங்களை எவ்வளவாக நேசிக்கிறேன் தெரியுமா? என் கணவரைக் கூட நான் அவ்வளவாக நேசிக்கிறதில்லை. என் கடவுளைக்கூட நான் அவ்வளவாக நேசிக்கிறதில்லை. நீங்கள்தான் என்னுடைய கடவுள் என்று கூறுகிறாள். அவர் மூன்றாம் குமாரத்தியிடம் சென்று கேட்கிறார். அதற்கு அவள், அப்பா! ஒரு மகள் எவ்வாறு தன் தந்தையை நேசிக்க வேண்டுமோ அதற்கு குறைவாகவும் அல்ல, அதற்கு அதிகமாகவும் அல்ல, அவ்விதமாக நான் உங்களை நேசிக்கிறேன் என்றாள். அப்பொழுது ராஜா மிகவும் கோபமடைந்து என்னுடைய ஆஸ்தி முழுவதும் என்னுடைய முதல் இரண்டு குமாரத்திகளுக்கு மட்டுமே உரியது. அவர்கள் என்னை அதிகமாக நேசிக்கிறார்கள். உனக்கு என் சொத்தில் ஒன்றும் கிடையாது என்று கூறுகிறார். அப்பொழுது அவள் ஒன்றுமில்லாத பிச்சைக்காரியைப் போலாகிறாள். ராஜா தன்னை மிவும் நேசிப்பதாகக் கூறிய இரண்டு குமாரத்திகளுக்கும் தன்னுடைய ஆஸ்தியைக் கொடுத்தார். மறுநாள் அதிகாலையில் அவர் தன்னுடைய முதல் குமாரத்தியின் … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

யாதவ குலத்தின் முடிவு!

விதுரன் தன்னுடைய புனித யாத்திரையின்போது, கிருஷ்ணரின் நண்பன் உத்தவரை சந்தித்தபோது, யாதவ குலம் எவ்வாறு அழிந்தது என்று உத்தவர் கூறுகிறார். ஸ்ரீ கிருஷ்ணர் யாதவ குலத்தில் தோன்றியபோதும், பகவான் தங்களுடன் வாழ்கின்றார் என்பதை யாதவர்கள் ஒருபோதும் உணரவில்லை. ஒருமுறை சில ரிஷிகள் துவாரகைக்கு வந்தபோது, யாதவ குலத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் சாம்பா என்பவனை கர்ப்பஸ்திரியாக வேடமிடச் செய்து இவளுக்கு பெண் குழந்தை பிறக்குமா, ஆண் குழந்தை பிறக்குமா என்று ரிஷிகளிடம் கேட்டனர். கோபமுற்ற ரிஷிகள் ஒரு உலக்கையை அவள் பெற்றெடுப்பாள். அது உங்கள் குலத்தை அழிக்கும் என்று கூறினார். சாம்பா தன் உடையை அவிழ்த்தபோது ஒரு இரும்பு உலக்கை அவன் உடையில் இருந்தது. அந்த இளைஞர்கள் நடந்த சம்பவத்தை பலராமனிடமும், கிருஷ்ணரிடமும் தெரிவித்தனர். அவர்களின் பொறுப்பற்ற நடத்தையைக் குறித்து பலராமன் கோபமடைந்தார். ரிஷிகளின் வார்த்தையைக் கேட்டதினால் கவலையுற்ற பலராமன் அந்த இரும்பு உலக்கையை தூளாக அரைக்கும்படி செய்தார். ஒரு துண்டு மிகவும் கடினமாக இருந்தது, அதை தூளுடன் சமுத்திரத்தில் வீசினார். குருஷேத்திர யுத்தம் தன்னுடைய குடும்பம் முழுவதையும் அழித்து விட்டது. கிருஷ்ணர் யுத்தத்தை தடை செய்யவில்லை என்பதினால் காந்தாரி கோபமடைந்தாள். கட்டுப்படுத்தாத துவேஷமும், பொறாமையும் குரு குடும்பத்தை அழித்தது என்று கிருஷ்ணர் விளக்கிக் கூறினார். உன்னுடைய குலமும் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வார்கள் … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்