தமிழ் | తెలుగు

» Archive

தெய்வங்கள் ஒன்றே!

ஆரிய மாயை ஆசனம் இட்டு ஆதாயம் தேடியது – எங்கள் ஆணவம் அழிக்க ஆசான் மொழி ஆகமம் கூறியது. கடவுள் கட்டுக் கதைகள் ஏராளம் கட்டு வைத்தது – எங்கள் கண்களை திறந்து இறைமொழி கண்ணியம் காத்தது. மூடப் பழக்கங்களில் மூர்க்கத் தனமாய் மூழ்க வைத்தது – எங்கள் மூர்த்தி மூலத்தால் கீர்த்தி பெற்று மூதறிவு பெற வைத்தது. தெய்வங்கள் பலதை உருவங்காட்டி தொழு என்றது – எங்கள் தெட்சிணம் அய்யா தெளிவுகாட்டி தெய்வங்கள் ஒன்றே என்றது. சடங்கு சம்பிரதாயங்கள் உலகை சடன் ஆக்கியது – எங்கள் சமரச மனுஜோதி இதழால் சமுதாயம் சீர்மிகு சிறப்பாகுது! – லோகநாதன், காஞ்சிபுரம் … Read entire article »

Filed under: கவிதைகள்

மனுஜோதி எங்கள் மனுஜோதி

கடிதம் எழுதி விட்டால் காற்றில் பறந்து வரும் – மனுஜோதி இரண்டு முக்கோணம் போட்டால் நடுவில் லஹரி வருமிடம் – மனுஜோதி குலமும் தேவனும் ஒன்று கூட்டிக் கழித்தால் வரும் – மனுஜோதி பாவம் பல செய்வார் போக்கிட படிக்க வேண்டும் – மனுஜோதி கண்ணனை கண்ணால் காண காணக்கிடைக்கா தகவல் கொண்ட – மனுஜோதி கிருஷ்ணா வாராயோ என்று கிரீடமாய் அமைந்த நுால் – மனுஜோதி வேதங்களின் வேற்றுமை போக்கி வெற்றிப் பதிப்பாய் எங்கள் – மனுஜோதி புத்தகத்தைப் படிக்கும் போது போதி மரமாகும் எங்கள் – மனுஜோதி படித்து முடித்து விட்டால் பாவத்தைத் தொலைத்துவிடும் – மனுஜோதி திரும்பத் திரும்ப படிக்க திகட்டாத இறையமுது எங்கள் – மனுஜோதி – ஐ.வி. இசக்கி, இலஞ்சி … Read entire article »

Filed under: கவிதைகள்

கடவுளின் வருகைபற்றி வள்ளலார் கூறுவது என்ன?

கர்மயோகி அல்லது கடவுளை கிரஹித்து உணர்ந்த ஓர் பக்தன் அல்லது மணவாட்டியின் குணங்களாக வள்ளலார் கூறுவது என்ன? பாங்கி தலைவி பெற்றி உரைத்தல் திருவருட்பா 6-ம் திருமுறை பாடல் எண்: 1058 அங்கலிட்ட களத்தழகர் அம்பலவர் திருத்தோள் ஆசையெனும் பேய் அகற்றல் ஆவதிலை எனவே பொங்கலிட்ட தாயர் முகம் தொங்கலிட்டுப் போனார் பூவை முகம் பூ முகம் போல் பூரித்து மகிழ்ந்தாள் எங்கள் இட்டம் திருவருள் மங்க வஞ்சூட்டல் அன்றி இரண்டுபடாது ஒன்றாக்கி இன்பு அடைவித்திடவே தங்களிட்டம் யாது திருவாய் மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே. தெளிவுரை: ஞான சபையில் (மணவாட்டியின் மத்தியில்) திருவிளையாடல் புரிகின்ற தனக்கு நிகரில்லாத சீமானே! இருளைத் தமக்கு மறைவிடமாகக் கொண்ட கருமை நிறம் கொண்ட அழகர் நீரே! வேதங்களில் மறைக்கப்பட்டுள்ள இரகசியங்களை நீர் கோபியருக்கு பகிரங்கப்படுத்துபவராக விளங்குகிறீர். ஆகவே எனது தோழியாகிய உமது காதலி (கோபிகை) உமது அழகிய தோளின்மீது பேயாசை கொண்டவளாக இருக்கிறாள். அதை அவளுடைய தோழியாகிய என்னாலும்கூட அகற்ற முடியவில்லை. அவளுடைய உறவினர்கள், அவள் உம்மீது வைத்திருக்கும் பேயாசையை அகற்ற பலவாறு முயற்சித்தனர். ஆனால் தோல்வியடைந்தனர். இறுதியில் அவர்கள் தங்களின் குல தெய்வங்களுக்குப் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். அதனாலும் எந்தவிதப் பயனும் இல்லாமல் போயிற்று. ஆகவே அவர்கள் தங்கள் முகங்களைத் தொங்கப் போட்டுக்கொண்டு, சோகம் மேலிட்டுத் தங்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர். அவர்கள் அவளை … Read entire article »

Filed under: ஆசிரியர் குறிப்பு

நீயா! நானா!

எஜமானா, தொழிலாளியா, கணவனா, மனைவியா, ஆசிரியரா, மாணவனா, மாமியாரா, மருமகளா யார் ஜெயிப்பது? என்ற போட்டி சமுதாயத்தில் நிலவிக் கொண்டிருக்கிறது. இதை ஈகோ (ego) என்று ஆங்கிலத்திலும் ‘சுயம்’ அல்லது ‘தனித்தன்மை’ அல்லது ‘அகராதி’ என்று கூறுகிறோம். இறைவனா, பக்தனா யார் ஜெயிப்பது? என்ற போட்டியும் காலாகாலமாக நடந்து கொண்டே இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் சண்டையைப் பற்றி ‘ஊடலில் தோற்றவரே வென்றவர்’ என்று வள்ளுவர் கூறுகிறார். இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையே நடக்கும் போட்டியில் ‘தோற்றவரே வென்றவராவர்’ என்பதற்கு சான்றாக ஒரு சம்பவம் அர்ஜுனனின் வாழ்க்கையில் நடந்தது. வில் வித்தையில் சிறந்தவனான அர்ஜுனன் சிவனுக்கு மிகப் பிரியமானவன். தீர்த்த யாத்திரைக்கு செல்லும்போது கூட சிவலிங்கத்தை காட்டில் பார்த்தால் அவன் அதற்கு பூஜை செய்யாமல் இருந்ததில்லை. ஒருமுறை அர்ஜுனன் வேட்டையாடச் சென்றபோது சிவனும், பார்வதியும் காட்டுவாசிகளைப்போல வேடமிட்டுக்கொண்டு, அர்ஜுனன் வேட்டையாடும் காட்டிற்கு வந்தனர். அப்பொழுது ஒரு காட்டுப் பன்றி அர்ஜுனனை தாக்கியது. சிவன் தன் வில்லை நாணேற்றி காட்டுப் பன்றியை குறிபார்த்து அம்பை எய்தார். அதேசமயம் அர்ஜுனனும் அம்பை எய்தான். கிராட்டா என்ற காட்டுவாசிகள் தங்கள் தலைவன் எய்த அம்பினால் தன் காட்டுப் பன்றி ஒழிந்தது என்றனர். அர்ஜுனனோ தான் எய்த அம்புதான் காட்டுப் பன்றியை கொன்றது என்றான். இதினால் அர்ஜுனனுக்கும், … Read entire article »

Filed under: ஆசிரியர் குறிப்பு

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற சத்தியத்தைப் பின்பற்றுகின்ற மக்களின் தகுதி என்ன?

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந் துய்ம்மினே என்கிறார் திருமூலர். தெளிவுரை: கடவுள் ஒருவர் என்றும்; ஒரே ஜாதி என நன்றாக நினைத்தால், உங்களுக்கு எமன் (மரணம்) இல்லை. உமது சித்தம் ஒன்றிலே மட்டும் நிலைத்து நிற்பதைத் தவிர, சென்றடையக்கூடிய கதி (சொர்க்கம்) வேறு இல்லை. நீர்தாமே அடியாரை நினைத்துப் பார்த்து எங்களை மீட்டுக்கொள்வீராக என்று கூறுகிறார். கடவுளுடைய மக்கள் ஒன்றுபடுவதற்காக திருமூலர் எழுதிய திருமந்திரம்தான் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதாகும். திருமூலர் என்ற ஞானி ஏறத்தாழ ஐந்தாம் நுாற்றாண்டு காலத்தில் வசித்து வந்தவர். திருமூலர் மூலம் கடவுள் நமக்கு கூறிய கருத்து என்னவெனில், நாமனைவரும் கடவுளின் பிள்ளைகள்; ஆகவே ஜாதி, மத, இன, மொழி, தேச வேறுபாடின்றி ஸ்ரீமந் நாராயணருக்குள் ஒன்றுபட வேண்டும். இதை நாம் புரிந்துகொண்டோமானால் நமக்குள்ளே உள்ள அனைத்து பேதங்களும் அகன்று போய்விடும். இதுவே இந்த உயர் வாக்கியத்தின் உண்மையான பொருளாகும். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று உண்மையாக அறிந்து, அதன்படி நடப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மனிதனால் ஏற்படுத்தப்பட்ட எந்த மத அமைப்புகளும் கட்டுப்படுத்தாது. அவர்கள் கடவுளுடைய மக்களாக இருப்பதினால், ஆழ்மனதில் தம்மைப் படைத்த இறைவனுக்கு மட்டுமே பணிந்து கடவுளைக் குறித்த ஆன்மீக தாகமுள்ளவர்களாக இருப்பார்கள். மனித உருவில் அவதரித்த நர நாராயணரை தன் நாயகனாக ஏற்றுக்கொண்டவர்கள், ஸ்ரீமந் நாராயணருடைய பிள்ளைகள்தான் … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

திருப்பாவை காட்டும் நெறிகள்

திருப்பாவை பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நுால் ஆகும். வைணவ பக்தி நுால்களின் தொகுப்பான நாலாயிரந் திவ்ய பிரபந்தத்தின் 473 முதல் 503 வரையுள்ள 30 பாடல்களும் ‘திருப்பாவை பாடல்கள்’ என்று அழைக்கப்படுகிறது. மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் ‘பாவை நோன்பு’ என்று அழைக்கப்படுகிற விரதத்தை தமிழ் நாட்டில் இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றனர். இதன்போது விடியும் முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக் கொண்டு ஆற்றில் நீராடி இறைவனை துதித்து வழிபடுவர். இதனைப் பின்னணியாகக் கொண்டு எழுந்ததே திருப்பாவை என்னும் நுால். இதில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் இறைவனின் பெருமைகளைக் கூறி கன்னியர்களைத் துயில் எழுப்பும் பாங்கில் எழுதப்பட்டுள்ளது. தற்காலத்தில் தமிழ் நாட்டில் இறை சிந்தனையுள்ள கன்னிப் பெண்கள் இறைவனை சிரத்தையோடு வேண்டுவதற்காக, மார்கழி மாதத்தில் பல விரதங்களைக் கடைபிடித்து ஆச்சாரமாக அனுஷ்டித்து வருகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் நாடு முழுவதும் மாதம் மும்மாரி மழை பெய்யும்; மேலும் வயலில் நெற்பயிர் ஓங்கி வளரும். பசுக்கள் நிறைய பால் கொடுக்கும். செல்வம் பெருகும் என்பது பலரின் நம்பிக்கை. இப்பாடல்களை பாடி மார்கழி மாதக் குளிரில் இறைவனை வழிபட்டு வருவது வெறும் சம்பிரதாயங்களுக்காக செய்யப்படுவதல்ல. அந்த மாதத்தில் மட்டும் கடைப்பிடிப்பதினால் உலகம் செழிக்கும் என்று நினைப்பது தவறு. அவை அந்த … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

பரீக்ஷித் கலியுகத்தை எதிர் நோக்குகிறான்

மகாபாரத யுத்தம் முடியும் தருவாயில் சாகும் நிலையிலிருக்கும் துரியோதனனிடம்: பாண்டவர்கள் குலம் முழுவதையும் அழித்து, பழி தீர்த்துக்கொள்ளுவேன் என்று அசுவத்தாமன் வாக்களித்தான். அர்ஜுனனின் மருமகள் வயிற்றில் இருக்கும் கருவை அழிக்க ‘பிரம்ம சிர்ஷா’ என்னும் தன் சக்தி வாய்ந்த அஸ்திரத்தைப் பிரயோகித்தான். அபிமன்யுவின் மனைவி உத்தரா தன்னை நோக்கி அஸ்திரம் வருவதை அறிந்து, ஸ்ரீ கிருஷ்ணரின் பாதத்தில் வீழ்ந்து சர்வ சிருஷ்டிகரின் நாயகனே! நான் அபிமன்யுவின் குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறேன். இவன்தான் இறுதியாக இருக்கும் வாரிசு. என் குழந்தையைக் காப்பாற்றுங்கள் என்று வேண்டினாள். ஸ்ரீ கிருஷ்ணர் அவளுக்கு ஆறுதல் கூறி நான் உனக்கு அருள் புரிகிறேன் என்றார். அசுவத்தாமனின் அஸ்திரம் உத்தராவின் கருவில் பிரவேசித்தபோது, ஸ்ரீ கிருஷ்ணர் அங்கே ஏற்கனவே இருந்தார். ஒரு தெய்வீக நீல வண்ண ஒளிவட்டம் கருவை சுற்றி பாதுகாப்பாக இருந்ததினால், அந்த அஸ்திரம் குழந்தையை தாக்கவில்லை. அதன் பின்னர் அஸ்திரம் அதின் சக்தியை இழந்தது. குழந்தை பிறந்தபோது கிருஷ்ணர் அவனுக்கு பரீக்ஷித் என்று பெயரிட்டார். ஏனெனில் கருவாக இருந்தபோதே, அக்குழந்தை தன்னைச் சுற்றி இருக்கும் ஒளிவட்டத்தை பரிட்சித்துப் பார்த்தான். பரீக்ஷித் அரசனான பின்பு அஸ்வமேத (யாகத்தை) யஞ்ஞத்தை செய்தான். ஒருமுறை சரஸ்வதி நதி கரையில் இதயத்தை கிழித்தெறியும் காட்சியை அவன் பார்த்தான். ஒரு காளை மாட்டிற்கு மூன்று கால்கள் உடைந்து விட்டிருந்தது. அது மிகவும் அவலட்சணமான பசுமாட்டின் அருகே நின்று கொண்டிருந்தது. அந்த காளை மாடு … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

மகா மோசமான அசுத்தம்!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ லஹரி கிருஷ்ணாய! இறையே அபயம்! யாவும் இறையின் உபயம்! சர்வக்ஞர் என்ற கன்னடத்துக் கவி கூறிய கதை இது. இராமானந்தர் எனும் இளம் வித்துவான் சகல சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தவர். ஒருநாள் காவிரி நதியில் ஸ்நானம் செய்துவிட்டு, சந்தியா வந்தனம் செய்ய ஆரம்பித்தார். அப்போது தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த தோல்வினைஞன் வறண்டுபோன தோல்களை நீரில் நனைக்க அந்த நதிக்கு வந்தான். அவன் தோல்களை நனைத்து உதறிய போது, சில நீர்த் துளிகள் இராமானந்தர்மீது பட்டுவிட்டன. திக்விஜயம் செய்து பல தேசத்துச் சாஸ்திர விற்பன்னர்களையும் வாதில் வென்ற பெருமையும், பெருமிதமும் கொண்டவர் அவர். இந்த அநாசாரத்தைப் பொறுப்பாரா? உடனே உக்கிர மூர்த்தியாய் மாறி கோபாவேசத்துடன் அடேய்! அற்ப புழுவே! இதென்ன அக்கிரமம்? என்ன காரியம் செய்து விட்டாய்? நீ நாசமாய்ப் போக, உன்னால் நான் பரிசுத்தம் இழந்து விட்டேன். மறுபடியும் ஸ்நானம் செய்ய வைத்துவிட்டாயே பாவி என்று சபித்தார். அந்த தோல்வினைஞன் பணிவாகவும், அடக்கமாகவும் பதில் சொன்னான். சுவாமி தெரியாமல் செய்த என் குற்றத்தைப் பொறுத்தருள வேண்டும். இந்த தோலிலிருந்து தெரித்த நீர்த்துளிகளால் உங்களது தோல் பரிசுத்தம் இழந்துவிடாது. பார்க்கப்போனால் நான்தான் ஸ்நானம் செய்தாக வேண்டும். அசுத்தங்களுள் மகா மகா மோசமான அசுத்தம் கோபந்தான். அதன் … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து