தமிழ் | తెలుగు

» Archive

ஆன்மீக பார்வையில் திருக்குறள்

“தந்தை மகற்காற்று நன்றிய வையத்து முந்தி யிருப்பச் செயல்” – என்ற குறளில் வள்ளுவர்  ஒருவன்  தன் மகனைக் கல்வி கேள்விகளில் சிறந்த சான்றோர் இருக்கும் அவையின்  தலைமகனாக  தன் மகன்  இருக்குமாறு உருவாக்க  வேண்டும்  என்கிறார். கல்வியை  மட்டும்  கற்றால் போதாது, வாழ்க்கைக் கல்வி  அதாவது  எவ்வாறு வாழ வேண்டும்  என்ற கல்வியையும் கற்க வேண்டும் என்று  சென்ற  இதழில்  பார்த்தோம். இக்காலத்தில்  பெற்றோர் பிள்ளைகளுக்கு எப்படிப்பட்ட  சூழ்நிலையிலும்  வாழும் கலையை கற்றுக்கொடுக்காமல்  பணத்தை  அவர்களுக்காக சேர்த்து  வைக்கிறார்கள். நான் கஷ்டப்பட்டது போல என்  பிள்ளைகளும்  கஷ்டப்படக்கூடாது என்ற மனநிலை உடையவர்களாக பெற்றோர்கள் இருக்கக்கூடாது. பிள்ளைகள் கஷ்டப்படும்போது வாழ கற்றுக்கொள்ளுவார்கள் என்ற மனநிலைபெற்றோர்களிடம் இருந்தால் அது ஆரோக்கியமாக இருக்கும். ஸ்ரீமந் நாராயணர்  ஸ்ரீ லஹரி கிருஷ்ணாஅமைத்த மனுஜோதி  ஆசிரமத்தில் “வாழ்க்கைகல்வி” முறை  இளைஞர்களுக்கு கற்றுத் தரப்படுகிறது.  பள்ளிக் கூடம்  மற்றும்  கல்லூரி  செல்பவர்களுக்காக  கோடை காலத்தில், இந்த பயிற்சியை  மேற்கொள்ள  வாய்ப்பளிக்க  “கோடை கால விடுமுறை முகாம்” ஏற்படுத்தப்பட்டுள்ளது.  கல்வியறிவு, வாழ்க்கை கல்வி இவற்றை மட்டுமே பிள்ளைகளுக்கு  அளித்தால் போதுமா? ஒருவன் சாகாத கல்வியை கற்றுணர வேண்டாமா?வள்ளுவரே  தம்  குறளில்  இதைக் கூறுகிறார். “கற்றதனால் ஆய  பயனென் கொல் வாலறிவன் நற்றாள் தொழா அர் எனின்” கல்வியில் சிறந்தது சாகாத கல்வியாகும் … Read entire article »

Filed under: திருக்குறள் விளக்கம்