தமிழ் | తెలుగు

» Archive

நீங்கள் வாடகை காரா அல்லது கடவுளின் சொந்த காரா?

சிலர் கடவுளை வாடகை கார் என்று நினைத்துக் கொள்ளுகிறார்கள். வாடகை காரில் நாம் செல்ல வேண்டிய இடம் வந்தவுடன் இறங்கிவிட்டு, வாடகை காருக்கு பணம் கொடுக்கிறோம். அந்த காரை சுத்தம் செய்ய வேண்டும் என்று நாம் நினைக்கிறதில்லை. ஆனால் யாராவது நமக்கு ஒரு காரை வெகுமதியாக கொடுத்தால் நீங்கள் அதை கழுவி சுத்தம் செய்வீர்கள். யாராவது உங்களிடம் வந்து உன்னுடைய காரை இரவலாக தரமுடியுமா என்று கேட்டால், நான் என் காரை இரவலாக கொடுப்பதில்லை என்ற கூறுவீர்கள். ஞாயிற்றுக்கிழமையன்று அல்லது வெள்ளிக்கிழமையன்று ஒரு வாடகைக் காரைப்போல இறைவனைக் காணச் சென்றால், கடவுள் உங்களைப்பற்றி கவலைப்படமாட்டார். ஆனால் உங்கள் உடல், பொருள், ஆன்மாவை இறைவனுக்கு வெகுமதியாக கொடுத்துவிட்டால் அப்பொழுது அவர் “உன்னைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்” என்று கூறுவார்.  – ஸ்ரீ லஹரி கிருஷ்ணா … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து, ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்

இறையே அபயம்! யாவும் இறையின் உபயம்!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ லஹரி கிருஷ்ணாய! பாண்டவர்கள் பத்தினி பாஞ்சாலியோடு வனத்தில் வாழ்கிறார்கள் துர்வாச மAரிமூp தனது பத்தாயிரம் சீடர்களுடன் துரியோதன மன்னனின் விருந்தாளிகளாக பல நாட்கள் இருக்கிறார்கள். துர்வாசர் புறப்படும் சமயம் துரியோதனனிடம் உன்றன் உபசாpப்பும் அன்பும் நன்று. என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். பாண்டவர்களின் அழிவையே எண்ணி வந்த துர்யோதனன், துர்வாசாpடம் பாண்டவர்கள் யாவரும் உணவு உண்ட பின்பு தாங்கள் அவர்களிடம் உணவருந்தச் செல்லுங்கள், அது போதும் என்றான். அது அவன் எண்ணம்! பாண்டவர்கள் யாவரும் உணவு உண்டபின் அட்சய பாத்திரம் (உணவளிப்பது) கவிழ்த்து வைக்கப்படும். பின்னர் மறுநாள் தான் பயன்பாட்டிற்கு வரும். உணவு இல்லாதபோது துர்வாசர் பாண்டவர்களிடம் உணவுக்காகச் சென்றால், உணவு இல்லையென்றால் அவர்களை அவர் சபிப்பார். அதனால் பாண்டவர்கள் அழிவர் என்பது துர்யோதனின் எண்ணம்.  அதனை ஏற்று துர்வாசர் தன் சீடர்களுடன் பாண்டவர்களிடம் வந்தார். பாண்டவர்கள் துர்வாசரை வணங்கி நீராடி விட்டு வாருங்கள், உணவு சித்தமாகிவிடும் என்று சொல்லி நதிக்கு அனுப்பினர். பின் பாஞ்சாலியை நோக்கினர். உள்ளே சென்ற பாஞ்சாலி கண்ணீரும் கம்பலையாக ஹே! லஹரி கிருஷ்ணா! மாதவா! மதுNதனா! தீனபாந்தவா! தீனரட்சகா என் செய்வோம்! என ஏங்கினாள். துவாரகையிலிருந்த கண்ணன், பாண்டவர்களுடைய ஆசிரமவாசலில் தோpலிருந்து இறங்கி … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள், பிரமுகர்களின் உரை

திருமந்திரம் கூறுவது என்ன!

“அவனை ஒழிய அமரரும் இல்லை அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை அவனன்றி _வரால் ஆவதொன்றில்லை அவனன்றி ஊர்புகு மாற்றியேனே”  விளக்கம்: அவன் என்பது எல்லாம் வல்ல இறைவன் பரம புருமூர் என்றும், பரம பிதா என்றும், கர்த்தர் என்றும், தேவாதி தேவன் என்றும் அழைக்கப்படுகின்ற ஜமந் நாராயணரே ஆவார். அவரே ஸ்ரீ லஹரி கிருஷ்ணா. பரம பிதாவே முழுமுதற்  கடவுள், அவாpல்லாது அமரர், தேவர்கள் வேறு எவரும் இந்த முழுமுதற் கடவுளுக்கு இணையாக மாட்டார்கள். பரம பிதாவான, முழுமுதற் கடவுளான ஜமந் நாராயணரே ஆதிபலி ஆனவர், பிரம்ம வேள்வி ஆனவர். ஆதிபலியைப்  போல, பிரம்ம வேள்வியைப் போல வேறெந்த தவமும் இணையானது இல்லை. திரிமூர்த்திகள் என்று அழைக்கப் படுகின்ற சிவன், பிரம்மா, விமூ;ஹ ஆகிய _வருக்கும் மேலான பரம பிதாவின் விருப்பமில்லாமல் எதுவும் நடப்பதில்லை.  அந்த பரம பிதாவான ஜமந் நாராயணர் இல்லாது ஊருமில்லை, இந்த  உலகுமில்லை. – K. P. பாலு, து]த்துக்குடி … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

இளவரசன் வில்லியமிற்கு இந்திய மூதாதையர்

இளவரசன் வில்லியமிற்கு இந்திய _தாதையர் இருந்திருக்கிறார்கள் என்று டி.என்.ஏ (DNA) நிரூபித்துள்ளது, லண்டன், ஜூன் 14 இளவரசன் வில்லியம் பிரிட்டிஷ் சிங்காசனத்தில் அமரக்கூடிய இரண்டாவது வாரிசாவார். இளவரசன் வில்லியமிற்கு இந்திய _தாதையர் உள்ளனர் என்று டி.என்.ஏ. ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இவர் இந்திய _தாதையர் உள்ளனர் நிரூபிக்கப்பட்ட முதல் பிரிட்டிஷ் மன்னன் ஆவார். கேம்பிரிட்ஜ் டியூக்கின் உறவுக்காரர்களின் உமிழ் நீரை எடுத்து டி.என்.ஏ ஆராய்ச்சி செய்தபோது, 30 வயது இளவரசர் வில்லியமிற்கு அவரது தாய் இளவரசி டயனாவின் உறவு முறையில், நேரடியான இந்திய தொடர்பு உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இளவரசர் வில்லியமின் கொள்ளு பாட்டியின், கொள்ளு பாட்டி எலிசா கேவார்க் என்பவர், தியோடர் ஃபோர்ப்ஸ் என்ற ஸ்காட்லாந்து வியாபாரியின் வீட்டில் பணி புரிந்தார். இவர் ஈஸ்ட் இந்திய கம்பெனியில் பணிபுரிந்தார். அவர் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் என்ற இடத்தில் வசித்து வந்தார். எலிசாவின் எம்.டி.டி.என்.ஏ (mt DNA) அவளுடைய மகன்கள் மூலமாகவும், பேத்திகள் மூலமாகவும் இளவரசி டயனாவிற்கும், அதன்பின்னர் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹேரிக்கும் நேரடியாக வந்துள்ளது. இளவரசர் வில்லியமிற்கு ஐரோப்பியர்களுக்கு இல்லாத டி.என்.ஏ (DNA) இருப்பதால் அவர் அதிக ஜனத்தொகை உடைய இந்தியாவுடன் மரபு வழியாக தொடர்பு உடையவர். எலிசா கேவார்க்கின் வழி … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்

மலையின் மறுபக்கம்

ஒரு மாபெரும் நதி ஒரு உயரமான மலையருகே பாய்ந்து வந்தது. ஆனால் மலையை தாண்டி அதனால் செல்ல முடியவில்லை. வெறுப்படைந்த நதி மலையின் எல்லா பக்கங்களிலும் அடிக்க ஆரம்பித்தது. வானளாவி உயர்ந்து நின்ற பழம்பெரும் மலை நதியின் பயத்தையும், எரிச்சலையும் புரிந்துகொண்டது. கடல்போல பாய்ந்து கொண்டிருந்த நதி தன்னுடைய தனித்தன்மையை இழந்து விடுவோம் என்று பயந்தது. அந்த மலை நதியிடம் தினமும் என்மேல் வீசுகின்ற காற்றானது, உன்னை என் அடுத்த பக்கத்திற்கு அழைத்து செல்லட்டும் என்றது. உடனே நதியும் காற்றிடம் தன்னை மலையின் அடுத்த பக்கத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டியது. காற்று உடனே ஒத்துக் கொண்டது. ஆனால் அதற்கு உன் தீவிரமான உழைப்பு தேவை என்று காற்று கூறியது. என்னுடைய குறிக்கோளை அடைய நான் கடுமையாக உழைப்பேன். மலையின் அடுத்த பக்கத்திற்கு சென்று, என்னுடைய பிரயாணத்தை தொடர வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என்று நதி கூறியது. ஒரு கடைசி எச்சாரிக்கை சொல்லுகிறேன். மலையின் அடுத்த பக்கத்திற்கு சென்ற பின்னர் அது உனக்கு வேறு ஒரு புதிய உலகமாக இருக்கும். புதுவிதமான மக்களை சந்திக்க வேண்டும். நீயும் வேறு புதிய பெயாரில் அழைக்கப்படுவாய் என்று காற்று கூறியது. உடனே நதி என்ன, நான் என்னுடைய தனித்தன்மையை இழந்து விடுவேனோ … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

சிருஷ்டிப்பிலுள்ள அதிசயங்கள்

மனிதனால் தண்ணீர் குடிக்காமல் உயிர் வாழ முடியாது. ஆனால் தவளைகள் தண்ணீர் குடிப்பதில்லை. அவை தங்களுடைய தோலின் மூலமாக, தங்கள் உடலுக்குத் தேவையான நீரை உறிஞ்சிக்கொள்கின்றன. தண்ணீரிலும் சேற்றிலும் வாழும் தவளை மூச்சுவிட வேண்டுமல்லவா? அதற்காகவே தவளைகளின் கண்களும், மூக்கும் அதின் தலையிலுள்ள மேல் பாகத்தில் இருப்பதால், அவற்றின் உடல் தண்ணீரில் இருந்தாலும் அதனால் மூச்சுவிட முடிகிறது. ஆனால் தவளைகளால் உப்புத் தண்ணீரில் வாழ முடியாது. ஒரு வகையான தவளை பாலைவனத்தில் வாழும். அந்த தவளை மழை பெய்யாமல் இருந்தாலும், ஏழு வருடம் வரை உயிர் வாழ முடியும். தன்னைச் சுற்றிலும் ஒருவிதமான பையை தன் உடல் முழுவதும் பரப்பிக்கொள்கிறது. மழை வந்த பின்னர் முதலாவது இந்த பைதான் அதன் முதல் உணவாகும். ஆஸ்திரேலியாவிலுள்ள தவளைகளின் மேல்பாகத்திலுள்ள தோலானது, உடல் முழுவதும் கோடுள்ளதாக இருக்கிறது.  இவை 9 முதல் 10 மாதங்கள் தண்ணீர் மற்றும் நீரை அருந்தாமல் வாழ்கின்றன. மண்ணில் குழி தோண்டி, தன் உடலிலிருந்து உதிர்த்த தோலினால் ஒரு கூட்டைக் கட்டி அதினுள் வாழ்கின்றது. இந்த தவளை நினைவில்லாமல் வாழ்கின்றது. தவளை உயிர் வாழ்வதற்கான சக்தி குறைவாகப் பயன்படும் விதமாக அதின் உடலில் மாற்றம் ஏற்படுகிறது. இதினால் அவை மறுபடியும் உணவு கிடைக்கும் வரை … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

புறம் பேசுதல் கூடாது

மனிதன் மிகவும் கவனமாக கையாள வேண்டிய உடல் உறுப்புகளில் குறிப்பிடத்தக்கது நாக்கு. பொய் பேசுதல், பிறரைப் பற்றி புறங்கூறுதல் போன்ற இழிவான செயல்களைச் செய்யக்கூடாது என்பதை திருக்குர்-ஆனும், நபிமொழிகளும் பல்வேறு வகையில் வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக நோன்பு காலத்தில் ஒரு நோன்பாளி தனது நாக்கை மிகவும் கவனமாக பேணிக்காக்க வேண்டும். பொய் சொல்லுதல், பிறரைப் பற்றி புறங்கூறுதல் போன்ற செயல்களை நாவானது செய்யக்கூடாது. மேலும் நோன்பு நோற்றுக்கொண்டு, ஒருவர் புறம்பேசினால் என்ன விளைவு ஏற்படும் என்பதற்கு நபிகளாரின் காலத்தில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அதுபற்றி விவரம் வருமாறு: ஒருநாள் ஹசரத் உபைத் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்தித்து இரண்டு பெண்கள் நடந்துகொள்ளும் விதம் குறித்து கூறினார்கள். ‘யாரசூலல்லாஹ், இரண்டு பெண்கள் நோன்பு நோற்றுள்ளனர். அவர்கள் தாகத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். இதனால் மரணமாகும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்’ என்று கூறினார். நபிகளார் அவாரின் சொல்லை புறக்கணித்து எதுவும் கூறாமல் மவுனம் சாதித்தார்கள். மீண்டும் அதையே அவர் திரும்பக் கூறினார். உடனே நபிகளார் ‘அவ்விருவரையும் அழைத்து வாருங்கள்’ என்றார். உடனே அந்தப் பெண்கள் நபிகளார் முன்பு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் நபிகளார் ஒரு பெரிய பாத்திரத்தை கொடுத்து வாந்தி எடுங்கள் என்றார்கள். ஒருவர் … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து