தமிழ் | తెలుగు

» கவிதைகள் » மனுஜோதி ஆசிரமம் செல்வோமே! ஸ்ரீ லஹரியை தொழுவோமே!

மனுஜோதி ஆசிரமம் செல்வோமே! ஸ்ரீ லஹரியை தொழுவோமே!

அமைதியை தந்திடும்

அருளினை வழங்கிடும்

ஆன்மாவை நிரப்பிடும் ஆனந்தம் அளித்திடும்

மனுஜோதி ஆசிரமம் செல்வோமே

மறுபிறவியை வெல்வோமே

ஆன்மீக தொண்டோடு

அருள்மழை பொழிந்திடும்

கருணையின் இருப்பிடமாம்

மனுஜோதி ஆசிரமம் செல்வோமே

இறைவனின் அன்பினைப் பெறுவோமே

கடமையை ஆற்றிடும் அருளினை வழங்கிடும்

கண்ணியம் காத்திடும் காரிருள் போக்கிடும்

ஸ்ரீ லஹரியை தொழுவோமே

மன அமைதியைப் பெறுவோமே

ஸ்ரீ லஹரி நாமம் பாடி மகிழ்வோமே

கவிஞர். எஸ். இரகுநாதன், சென்னை

✡✡✡✡✡✡✡



 

Filed under: கவிதைகள்