தமிழ் | తెలుగు

» பத்திரிகை செய்திகள் » ஹிட்லர் யூத இனத்தைச் சேர்ந்தவரா?

ஹிட்லர் யூத இனத்தைச் சேர்ந்தவரா?

லண்டன் ஆகஸ்ட் – 29: சர்வாதிகாரி ஹிட்லர் யூத இனத்தைச் சேர்ந்தவராக இருக்கலாமென ஆய்வில் தெரிய வந்துள்ளது. இரண்டாம் உலகப்போரின்போது, லட்சக்கணக்கான யூதர்களை கொடூரமாக சித்ரவதை செய்து, கொன்று குவித்தவர் ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர். ஜெர்மானியர்கள்தான் உயர்ந்தவர்கள் என கூறிக்கொண்டு, யூத இனத்தையே அழிக்க நினைத்தார் ஹிட்லர். ஆனால் அவரே யூத இனத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று தற்போது ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. புலனாய்வு பத்திரிகையாளரான ஜேன் பால் முல்டர் என்பவர் இது குறித்து ஆய்வு செய்து, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளார். நியூயார்க்கில் வசித்து வரும் ஹிட்லரின் உறவினர்கள் அலெக்சாண்டர் ஸ்டூவர்ட் ஹஸ்டன் மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த நார்பர்ட் உள்ளிட்ட உறவினர்கள் 39 பேரிடம் மரபணு சோதனை நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், வட ஆப்பிரிக்காவில் உள்ள யூதர்களின்
மரபணுவுடன், ஹிட்லர் உறவினர்களின் மரபணு ஒத்துப்போனது. இதன் மூலம், ஹிட்லரின் 20 தலைமுறைக்கு முந்தைய மூதாதையர்கள் யூத இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. ஹிட்லரின் உறவினர்களின் மரபணு மாதிரிகளில், ‘அப்லாப்கு ரூப் இ1பி1பி’ என்ற ‘ஒய்’ குரோமோசோம் இருந்தது. பொதுவாக, இந்த குரோமோசோம் ஜெர்மானியர்களிடம் இருக்காது. யூதர், அஸ்கென்சி இனத்தினர் மற்றும் மொராக்கோ, அல்ஜீரியா, லிபியா, துனிசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வடக்கு ஆப்பிரிக்காவின் ‘பெர்பர்ஸ்’ இனங்களில் இந்த
குரோமோசோம் இருக்கும். எனவே, ஹிட்லரும் யூத இனத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

******

Filed under: பத்திரிகை செய்திகள்