தமிழ் | తెలుగు

» கவிதைகள் » ஸ்ரீ லஹரி கிருஷ்ணா!

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா!

அன்பெனும் மந்திரப் பொருளானவன்
ஆற்றல்மிகு செம்மை வடிவானவன்!
இடற் நீக்கும் இன்பச் சுடரானவன்
ஈகைக் குணத்தின் மறு பிறப்பானவன்!
உண்மையின் உறைவிடம் ஆனவன்
ஊக்கத்தின் உற்ற மருந்தானவன்!
எங்கும் எழிலும் நிறைந்தவன்
ஏற்றமிகு நல்வாழ்வு அளிப்பவன்!
ஐயத்தை அறவே நீக்குபவன்
ஒற்றுமையின் வலிமையை உணர்த்துபவன்!
ஓங்கார நாதமாய் ஒலிப்பவன்
ஒளடதமே பேசி அல்லல் தீர்ப்பவன்!
அஃதே வேத நாதம் என்பவன்!

பகவத் கீதை எனும் நல்ல பாதை தந்த
பகவான் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா!
நம்பினோர்க்கு நலம் தரும்
நாயகனாம் ஸ்ரீமந் நாராயணா!
ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை
தத்ரூபமாக வாழ்ந்து காட்டிய ஸ்ரீ ராமன்!
தந்தையின் சொல்லே வேதமென
தாயின் தலையை கொய்த பரசுராமன்!
மூன்றடி மண்கேட்டு மகாபலியின்
ஆணவத்தை அடக்கிய உலகளந்த பெருமாளே!
திருக்கோவிலூரை ஆட்சி செய்யும்
திருவிக்ரமா! வேண்டும் உந்தன் திருவருளே!

– கவிச்செல்வர் ஆ.ச. செல்வராஜு,
தேவனூர்

*******

Filed under: கவிதைகள்