தமிழ் | తెలుగు

» கவிதைகள் » ஸ்ரீ லஹரி கிருஷ்ணா

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா

அல்லா இயேசு நாராயணா நீர்
மூவரும் ஒருவர் தானய்யா
எம்மை மீட்க லஹரியாக வந்தீரய்யா நீர்
வந்தபின் உங்கள் இடத்தை அடைந்தோமைய்யா!

மூன்று நதியை ஒரே கடலில் சேர்த்தீரய்யா
மூன்று வேதத்தை ஒரே வேதமாக விளக்கினீரய்யா
மூன்று குணங்களுக்கும் அப்பாற்பட்டவரைய்யா
மூன்று அடையாளத்தை வெறுமையாக்கி விட்டீரய்யா!

நீரில்லா குளத்தில் மீனாக துடித்தேனய்யா
உந்தன் அன்பு நீர்பட்டதால் மகிழ்ந்தேனய்யா
நீரில் உப்புக்கல்லாய் உம்மில் கரைந்தோமையா
சேற்றில் கலந்த நீராக தெளிந்தோமையா!

– A. வேணுகோபால், கீரிப்பட்டி

*******

Filed under: கவிதைகள்