தமிழ் | తెలుగు

» ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள் » ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அருளிய சொற்பொழிவு

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அருளிய சொற்பொழிவு

1974-ம் வருடம் செப்டம்பர் 22 அன்று ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அருளியது 

ஒவ்வொரு நகரமும் விழும். அது கடைசி காலத்தில் விழவில்லையென்றால், இப்பொழுதுகூட அது விழலாம். இந்த நாட்களில் ஒன்றில் சென்னையில் பயங்கரமான கடும் புயலினால் பேரழிவு ஏற்படும். அந்த நகரம் விழுந்து விடும். இது ஒரு வேடிக்கைக்குரிய காரியமல்ல, இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழியத்தை அவர்கள் கண்டார்கள். இன்றைக்கு அந்த இடத்தில் மிகப்பெரிய பிசாசுகள் இருக்கின்றன. வெகுவிரைவில் அது காணப்படாமற்போகும்.

பூகோள வரைபட அமைப்பில் முற்றிலுமாக ஒரு மாறுதல் இருக்கும். இறைவன்மேல் கொண்ட அன்பினால் பாதுகாப்பாக இருங்கள். நீங்கள் மனுஜோதி ஆசிரமத்தைவிட்டு வெளியே எங்கேயாவது செல்லும்போது உண்மையான அன்பை மறந்துவிடாமல் தியானம் செய்யுங்கள். இல்லாவிடில் நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்கள். இந்த மனுஜோதி ஆசிரமம் இறைவனுடைய ஆட்சியின்கீழ் இருக்கிறது. ஆனால் வெளியே நீங்கள் செல்லும்பொழுது, அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.

நியாயத்தீர்ப்பானது பூமியின்மேல் விழுகிறதை நீங்கள் பார்க்கும்பொழுது, இரண்டு காரியங்களை அறிந்துகொள்ளலாம். நம்முடைய ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கை உண்மையானது என்றும், காலம் முடிவடைந்தது, இந்துக்கள் மத்தியில் நாம் செல்வது சரி என்றும் தெரிந்துகொள்ளலாம்.

✡✡✡✡✡✡✡

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்