தமிழ் | తెలుగు

» கவிதைகள் » ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அய்யா

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அய்யா

ஒன்றே குலமும் ஒருவனே தேவன் என

உணர்ந்திட நன்றாக அழைக்கின்றார்

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அய்யா

மத வெறியும் இன வெறியும்

இல்லாமல் மக்கள் வாழ்ந்திட

மனுஜோதிக்கு அழைக்கின்றார்

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அய்யா

உத்தம மார்க்கத்தில் வாழவேண்டும் என்றால்

சத்திய நகருக்கு அழைக்கின்றார்

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அய்யா

கொலை, களவு, கள், காமம்,

கோபத்தை மறந்திட

தலையாய நகருக்கு அழைக்கின்றார்

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அய்யா

எல்லோரும் வாழ்ந்து பேரின்பம் பெற்றிட

நல்லோர்கள் வாழ்ந்திட அழைக்கின்றார்

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அய்யா

புலவர் திருக்குறள் இரா. நடராசன், தென்காசி

✡✡✡✡✡✡✡

Filed under: கவிதைகள்