தமிழ் | తెలుగు

» ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள் » ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்

ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்

பொய், கபடு, திருட்டு போன்றவை உங்கள் வாழ்க்கையில் இருக்கும்வரை உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படாது. சகோதரர்களை நேசித்து, அன்பு நிறைந்த வாழ்க்கையை வாழும்போது உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.

– ஸ்ரீ லஹரி கிருஷ்ணா

இரண்டு படகுகள் இருக்கின்றன. ஒன்று இயந்திர மோட்டார் பொருத்தியது. இன்னொன்று தண்டு வலிக்கும் படகு. சம்சார கடலை தாண்ட நாம் படகை உபயோகிக்க வேண்டும். மோட்டார் பொருத்திய படகு என்பதின் அர்த்தம் இறைவன் நம் வாழ்க்கையை திட்டமிடுவதாகும். தண்டு வலிக்கும் படகு என்பது நம் வாழ்க்கையை நாமே திட்டமிடுவதாகும். நாம் ஒரு சிறு பிள்ளையைக் கேட்டால்கூட இயந்திர மோட்டார் பொருத்திய படகில் செல்வது மேலானது, எளிதானது என்று கூறும். உங்கள் சொந்த முயற்சியை கை விட்டுவிட்டு இறைவனின் இஷ்டத்திற்கு சரணடையுங்கள்.

– ஸ்ரீ லஹரி கிருஷ்ணா

✡✡✡✡✡✡

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்