தமிழ் | తెలుగు

తెలుగు

» ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள் » ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அருளிய சொற்பொழிவு

ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அருளிய சொற்பொழிவு

1974-ம் வருடம் செப்டம்பர் 22 அன்று அருளிய சொற்பொழிவு

ஒவ்வொரு நகரமும் விழும். அது கடைசி காலத்தில் விழவில்லையென்றால், இப்பொழுதுகூட அது விழலாம். இந்த நாட்களில் ஒன்றில் சென்னையில் பயங்கரமான கடும் புயலினால் பேரழிவு ஏற்படும். அந்த நகரம் விழுந்து விடும். இது ஒரு வேடிக்கைக்குரிய காரியமல்ல, இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழியத்தை அவர்கள் கண்டார்கள். இன்றைக்கு அந்த இடத்தில்  மிகப்பெரிய பிசாசுகள் இருக்கின்றன. வெகுவிரைவில் அது காணப்படாமற்போகும்.

பூகோள வரைபட அமைப்பில் முற்றிலுமாக ஒரு மாறுதல் இருக்கும். இறைவன்மேல் கொண்ட அன்பினால் பாதுகாப்பாக இருங்கள். நீங்கள் மனுஜோதி ஆசிரமத்தைவிட்டு வெளியே எங்கேயாவது செல்லும்போது உண்மையான அன்பை மறந்துவிடாமல் தியானம் செய்யுங்கள். இல்லாவிடில் நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்கள். இந்த மனுஜோதி ஆசிரமம் இறைவனுடைய ஆட்சியின்கீழ் இருக்கிறது. ஆனால் வெளியே நீங்கள் செல்லும்பொழுது, அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.

நியாயத்தீர்ப்பானது பூமியின்மேல் விழுகிறதை நீங்கள் பார்க்கும்பொழுது, இரண்டு காரியங்களை அறிந்துகொள்ளலாம். நம்முடைய ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கை உண்மையானது என்றும், காலம் முடிவடைந்தது, இந்துக்கள் மத்தியில் நாம் செல்வது சரி என்றும் தெரிந்துகொள்ளலாம்.

✡  ✡  ✡

முட்களும் ரோஜாவும்

இராமாயணத்தில் ராமர் வனவாசம் சென்றபோது சீதை ஒரு மாயமானைக் கண்டு, அதின்மேல் ஆசைப்படுகிறாள். தனக்கு அந்த மான் வேண்டும் என கேட்டதினால் ஸ்ரீ ராமர் அதைப் பின்தொடருகிறார். அவரைப் பின்தொடர்ந்து இலட்சுமணனும் சென்றான். ஸ்ரீ ராமரும், இலட்சுமணனும் இல்லாத சமயத்தில் இராவணன் சீதையை கவர்ந்து சென்றான்.

சீதை எங்கே இருந்தாள்? சீதை ராட்சத ஸ்திரிகளின் மத்தியில் ‘அசோக வனம்’ என்ற இடத்திலிருந்தாள். அங்கே அந்த அசுரப் பிறவிகள் அவளை ஓயாமல் துன்புறுத்திக் கொண்டிருந்தனர். இராவணனின் மகிமைகளை அவளுக்கு கூறி, ‘ராமனை மறந்து விடு, உன் மனதை மாற்றிக் கொள்’ என்றனர். மனதளவில் அவளை துன்புறுத்தினர்.

ஸ்ரீ ராமர் இறைவனின் அவதாரமாவார். அவருடைய மனைவிக்கு இப்படியொரு அவல நிலை ஏற்பட்டது. ஆனால் சீதை எப்படியிருந்தாள்? முட்களுக்கு மத்தியிலிருந்த ரோஜாப்பூவைப் போல் இருந்தாள். அவள் எதற்கும் கலங்காமல், அமைதியாக இருந்தாள்.

இறைவனின் பாகமாக இருப்பவர்களும்கூட முட்களின் மத்தியிலிருக்கும் ரோஜாப் பூவைப் போலத்தான் இருக்கிறார்கள். ‘மக்கள் என்னை முட்களைப் போல குத்துகிறார்கள். என்னால் அதை சகித்துக் கொள்ள முடியவில்லை’ என்று நீங்கள் கூறினால் நீங்கள் ரோஜா மலரல்ல. ‘நான் ரோஜாவாகவும் இருக்க வேண்டும். அதேசமயத்தில் முட்களும் என்னை குத்தக்கூடாது’ என்று நீங்கள் கூறமுடியாது.

அத்துடன் ரோஜாப் பூவில் நல்ல வாசனை வருகிறது. எல்லோரும் அந்த வாசனையை முகர்ந்து பார்த்து அருமையான வாசனை என்று கூறி அதை அனுபவிக்கிறார்கள். அதைப் போலவே இறைவனில் பாகமாயிருப்பவர்களின் குணம் எல்லோருக்கும் பயனுள்ளதாகவும், போற்றக்கூடியதாகவும், மாசில்லாத குணமாகவும் இருக்க வேண்டும். அவர்களின் எதிரிகள்கூட அவர்களால் நன்மையடைபவர்களாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட குணம் இறைவனின் பூரண அருளினால் ஏற்படுகிறது. யாரும் அப்படியிருக்க முடியாது, யாரும் அப்படிப்பட்டவர்களுடன் போட்டிபோட முடியாது. எல்லோரும் பொறாமைப்படும் அளவிற்கு அவர்களின் குணம் விளங்கும். நீங்கள் யாரிடமிருந்து அன்பை எதிர்பார்க்கிறீர்களோ அவர்களிடத்திலிருந்து அன்பை பெறமாட்டீர்கள். ஆனால் இறைவனின் பூரண அன்பையும், அருளையும் பெறுவீர்கள். அதுவே இறைவனின் பாகமாயிருப்பவர்களின் பாக்கியமாகும்.

– ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா

✡✡✡✡✡✡✡

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்