தமிழ் | తెలుగు

» சங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம் » ஸூரா-15

ஸூரா-15

அல்லாஹ் ஆதாம் காலம் முதல் இந்த நாள் வரை ஒவ்வொருவரையும் நேரான பாதையில் வழிநடத்தி வருகின்றார்

வச.51-60: இன்னும், நபியே! இப்ராஹிமுடைய விருந்தாளிகள் பற்றி நீர்  அவர்களுக்கு தெரிவிப்பீராக! அவர்கள் அவரிடம் நுழைந்தபோது “ஸலாமுன்” சாந்தி உண்டாவதாக! என்று கூறினார்கள்; “நிச்சயமாக அவர், நாம் உங்களைப் பற்றி பயப்படக்கூடியவர்கள்” என்றார். அதற்கவர்கள், “நீர் பயப்படாதீர்; நிச்சயமாக நாம் உமக்கு மிக்க அறிவார்ந்த ஒரு குமாரனைக் கொண்டு நன்மாராயங் கூறுவதற்காகவே வந்திருக்கின்றோம்” என்று கூறினார்கள்.

அதற்கவர், “என்னை முதுமை வந்தடைந்து விட்டபோதா நீங்கள் எனக்கு குமாரனைக்கொண்டு நன்மாராயங் கூறுகின்றீர்கள்? எதனைக் கொண்டு நீங்கள் எனக்கு நன்மாராயம் கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கவர்கள், “உண்மையைக்கொண்டே நாங்கள் உமக்கு மகனைப் பற்றி நன்மாராயம் கூறுகிறோம். அதைப்பற்றி நிராசை கொண்டோரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம்” என்று கூறினார்கள். அதற்கவர், “வழிகெட்டவர்களைத் தவிர, வேறெவர் தன் இரட்சகனின் அருளைப்பற்றி நிராசை கொள்வார்?” என்றார்.

பின்னர் மலக்குகளிடம், “அல்லாஹ்வினால் அனுப்பப்பட்டவர்களே! உங்கள் செய்தி என்ன?” என்று கேட்டார். அதற்கவர்கள் “பாவிகளான ஒரு கூட்டத்தார்பால் அவர்களை அழித்துவிட நிச்சயமாக நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்” என்று கூறினார்கள். லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர – நிச்சயமாக அவர்கள் அனைவரையும் காப்பாற்றுகிறவர்கள் – “அவருடைய மனைவியைத் தவிர நிச்சயமாக அவள் வேதனையடைவதில் தங்கியவர்களில் உள்ளவளென்று நாம் நிர்ணயித்துவிட்டோம்” என்று அல்லாஹ் கூறியதாகக் கூறினார்கள்.

✡✡✡✡✡✡✡

Filed under: சங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம்