தமிழ் | తెలుగు

» ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள் » விசாகப்பட்டினத்தில் திரு. தேவாசீர் லாறி ஆற்றிய சொற்பொழிவு

விசாகப்பட்டினத்தில் திரு. தேவாசீர் லாறி ஆற்றிய சொற்பொழிவு

09.11.2002-ல்

இந்த உலகத்தின் காரியங்கள் மாறிக் கொண்டிருக்கிறது. இறைவனின் திட்டத்தின்படி ஒவ்வொரு நாளும் ஒரு மாற்றம் நடக்கிறது. ஆனால் நம்மால் அதை அறிந்துகொள்ள முடியாது. நாம் அதனுடன் ஓடிச்செல்ல முடியாது. இறைவனுடைய மக்களாகிய நீங்கள் அவருடைய கடிகாரத்தின்படி மாறிக் கொண்டிருக்கிறீர்களா? அதுதான் முக்கியமான கேள்வியாகும். சிலர் ஒரு கார் அல்லது வீடு அல்லது நிலத்தை வாங்குவதற்காக மிகவும் தைரியமாக கடன் வாங்குகிறார்கள். ஓ! அரசாங்கம் தருகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். சில வேளைகளில் இப்படி செய்ய வேண்டும்; அப்படிச் செய்ய வேண்டும் என்று திட்டமிடுகிறோம். அது நடைபெறுவதில்லை. முதலாவதாக நீங்கள் கடவுளுடைய கட்டளைகள், அவருடைய விதிமுறைகள் மற்றும் நியாயங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும். நியாயங்கள் என்றால் என்ன? அந்த நாட்களில் ஜனங்கள் தவறு செய்தபோது, அவர்கள் ஓய்வுநாளை பரிசுத்தக் குலைச்சலாக்கினார்களென்றால், கல்லெறியுண்டு கொல்லப்பட்டார்கள். ஆனால் இப்பொழுது நமக்கு கிருபை இருக்கிறது என்று நாம் கூறுகிறோம். உண்மையான இறைவனின் மக்களுக்கு மட்டுமே கிருபையுள்ளது. நீங்கள் விரும்பிய வண்ணம் எதையும் செய்ய முடியும் என்பது அதற்கு அர்த்தமல்ல. ஆகவே எல்லாக் காரியமும் திட்டமிடப்பட்டுள்ளது. அது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஜனங்கள் என்ன நினைக்கிறார்கள்? தங்களுக்கு சிறப்பான அறிவு இருக்கிறது என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லாக் காரியத்தையும் ஸ்ரீமந் நாராயணர் கண்காணித்துக் கொண்டிருக்கிறார். தேசத்திலுள்ள ஒவ்வொரு சட்டமும், ஒவ்வொரு கட்டளையும் இறைவனால் உண்டானதாகும்.

இஸ்ரவேல் ஜனத்தைக் குறித்து என்ன? அவர்கள் யாக்கோபின் உபத்திரவத்தைப் பெறப்போகிறார்கள். அதுவும் துவங்கப் போகிறது. பத்திரிக்கைச் செய்திகளை வைத்து நாம் பார்க்கும்போது ஒருவேளை ஈராக் தேசத்திற்கு ஏதாவது நடைப்பெறப்போகிறதென்றால் அது முழு உலகத்தையும் பாதிக்கும். நான் அமெரிக்காவிற்கு சென்றிருந்தபோது ‘நாளையைக் கண்ட மனிதன்’ (The Man Who Saw Tomorrow) என்ற படத்தை பார்த்தேன். அதில் எவ்வாறு நாஸ்டிரடாமஸ் எதிர்காலத்தைக் குறித்து முன் அறிவித்திருக்கிறார் என்பதை அவர்கள் காண்பிக்கிறார்கள். ஆகவே ஒவ்வொரு யுத்தத்தையும் அதில் அவர்கள் காண்பிக்கிறார்கள். நெப்போலியன் வந்தான், ஹிட்லர் வந்தான். எல்லாவற்றையும் அவர்கள் காண்பிக்கிறார்கள். கடைசி காட்சியில் ஒரு காரியம் சொல்லப்படுகிறது. அவர்கள் என்ன கூறுகிறார்களென்றால், மத்திய கிழக்கு தேசத்திலிருந்து ஒருவன் வருவான். அவன் அமெரிக்கா தேசத்தை அழிப்பான். ஆகவே அவர்களுக்கு ஒரு பயம் இருக்கிறது. மத்திய கிழக்கு தேசத்திலிருந்து ஒருவன் வந்து அமெரிக்காவை அழித்துப் போடுவான் என்று நாஸ்டிரடாமஸ் கூறியிருக்கிறார். அரேபிய தேசத்திலிருந்து ஒருவன் வந்து அமெரிக்காவை அழித்துப் போடுவான் என்று நாஸ்டிரடாமஸ் கூறியிருக்கிறார். அவன் யார் என்பதை அறிந்துகொள்ள அமெரிக்கா மிகவும் கவலையாக இருக்கிறது. ஆகவே அவர்களுக்கு ஒரு பயம் இருக்கிறது. அது ஒசாமா பின்லேடனா? அல்லது சதாம் ஹுசேனா? அது அவனாக இருக்கும் என்றால் அவனைப் பிடித்துக் கொன்று விடுவோம். அதன்பிறகு ஒருவராலும் அமெரிக்காவை அழிக்க முடியாது. அந்த படத்திலே விளக்கமாக இதுவரை நடந்தவைகளும் இனி நடைபெறப் போகிறவைகளைப் பற்றியும் காண்பிக்கிறார்கள்.

விதியை ஞானத்தால் வெல்லலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஒருவேளை உங்களுக்கு ஞானம் இருந்து, உங்களை அழிப்பவன் யார் என்பதை நீங்கள் தெரிந்திருப்பீர்கள் என்றால், அவனைக் கொன்று போட்டால் நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள். இதுவே அந்த சினிமா படத்தினுடைய அர்த்தமாகும். இந்தியாவில் இருக்கிற அநேகர் அதை அறியாமல் இருக்கிறார்கள். அமெரிக்காவில் இருக்கிற அநேகர் அதை மறந்து விட்டனர். அமெரிக்காவில் உள்ள அநேகர் பிரன்ஹாம் தீர்க்கத்தரிசியை மறந்துவிட்டனர். அமெரிக்காவில் உள்ள அநேக மக்கள் மனுஷகுமாரன் பாலாசீர் லாறியையும் மறந்து விட்டனர். பிரன்ஹாம் செய்தி சென்று கொண்டிருக்கிறது. லஹரி கிருஷ்ணாவின் செய்தியும்கூட சென்று கொண்டிருக்கிறது. அது இன்டர்நெட்டில் உள்ளது. அது புஸ்தகங்கள் மூலமாகவும் செல்கிறது. இன்று ஒரே ஒரு வினாடியில் கலிஃபோர்னியா மூழ்கிவிட்டால், அந்த செய்தியானது நாளை செய்தித்தாளில் வருமென்றால், அதுதான் இறைவனின் மக்களுக்குள்ள கடிகாரக் கணக்காகும். அது வெகு விரைவில் உள்ளது. ஆகவே அந்த கடிகாரம் ஸ்ரீமந் நாராயணருடைய கரங்களில் உள்ளது. எந்த நொடியிலும் அவர் கலிஃபோர்னியாவை தண்ணீருக்குள் தள்ளிவிடலாம். அதை யாராலும் முன்கூட்டியே சொல்ல முடியாது. அது மூழ்கும்போது, அந்திக்கிறிஸ்து அதிகாரத்துடன் வருவதை அப்பொழுது நீங்கள் காணலாம். அந்த சமயத்தில் அவர்கள் ஜனங்களை அழிக்க முயற்சிப்பார்கள். அவர்கள் இறைவனின் மக்களையும் அழித்துப்போட முயற்சிப்பார்கள்.

உதாரணமாக திடிரென கலிஃபோர்னியா தண்ணீரில் மூழ்கினால் என்ன நடக்கும் என்று யோசித்து பாருங்கள். அமெரிக்கா தேசமானது ஈராக் தேசத்தை அழிக்க வரும்போது, லாஸ் ஏஞ்சல்ஸ் பட்டணம் மூழ்கிவிட்டால் அமெரிக்க மக்கள் என்ன செய்வார்கள்? அமெரிக்காவின் மூன்றில் ஒரு பங்கு பொருளாதாரம் வீழ்ச்சியடையும். அது இன்றைக்கு அல்லது நாளை நடைபெற்றாலும், அது நடைபெறப்போகிறது. அது நடைபெறப் போகிறதல்லவா? அப்படி நடைபெற்றால், இந்தியாவைக் குறித்து என்ன? இந்திய தேசம் பல வியாபாரங்களை இழக்க நேரிடும். விசாகப்பட்டினத்திற்கு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. எத்தனை மக்கள் தங்களுடைய வீடுகளை விட்டு விட்டு, கிராமங்களுக்குச் செல்வார்கள் என்று தெரியுமா? அதனால் உலகம் முழுவதிலும் வியாபாரமானது துண்டிக்கப்படும். கடல் வாணிபத்திலும் பிரச்சினை ஏற்படும். கப்பல்களும் அதிகமாக செல்லாது. உங்களுடைய குடியிருப்பு ஸ்தலம், கப்பல் கூடுமிடம் மற்றும் மருத்துவமனைகள் இருந்து என்ன பிரயோஜனம்? பல காரியங்கள் மற்றொரு காரியத்தின்மேல் சார்ந்திருக்கிறது. எனவே ஜனங்கள் பிரச்சினைக்குள் சிக்கிக்கொள்வதை நீங்கள் காண்பீர்கள்.

கடவுளுடைய வார்த்தை என்ன கூறுகிறது? அறிவு பெருகும். இப்பொழுது ஒரு நொடியில் கம்ப்யூட்டர் மூலமாக ஒரு புஸ்தகத்தை அமெரிக்காவிற்கு அனுப்ப முடியும். உங்கள் முன் ஒரு கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டு, அமெரிக்காவில் இருக்கும் ஒரு மனிதனுடன் முக முகமாக நீங்கள் பேசலாம். உங்கள் முன் ஒரு வீடியோ கேமராவை நீங்கள் வைத்துக்கொண்டால், அமெரிக்காவில் இருக்கும் ஒருவர் தனக்கு முன்பாக ஒரு வீடியோ கேமராவை வைத்துக்கொண்டால், கம்ப்யூட்டர் மூலமாக நீங்கள் முகமுகமாகப் பேசலாம். ஆகவே யுகம் மாறிவிட்டது. ஆனால் நம்முடைய தர்மத்தின்படி நம்முடைய மக்களும் ஏன் மாறக்கூடாது? நம்முடைய பழைய பாரம்பரியங்களைக் குறித்து, நாம் ஏன் நினைத்துக் கொண்டிருக்கிறோம்? கடவுள் கீழே இறங்கி வந்தார் என்ற செய்தியின் பயன் என்ன? நாமும் ஜூலை 21-ம் தேதியைக் குறித்த மகத்தான இரகசியத்தை இந்த பூமிக்கு வெளிப்படுத்தியுள்ளோம். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற நித்திய சுவிசேஷம் ஜனங்களுக்குச் செல்கிறது. ஜாதி, மதம், மொழி என்ற வேறுபாடு இல்லை. நாம் அனைவரும் சர்வ சக்தியுள்ள ஸ்ரீமந் நாராயணரால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம்.

இப்பொழுது இந்த செய்தியானது எல்லா மக்களுக்கும் செல்ல வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு கோத்திரத்திற்கும் அய்யா கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. யூதா கோத்திரம் மற்றும் தாவீதின் வீட்டாருக்கு கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவுபெற்றது. இப்பொழுது பென்யமீன் கோத்திரத்திற்குச் செல்ல வேண்டும். கடவுளுடைய முழு திட்டமும் நிறைவேறும் வரைக்கும், ஒன்றும் நடைபெற முடியாது. இப்பொழுது இந்த உலகத்தில் ஏதாவது பிரச்சினை வந்தால், மக்கள் வருவதற்கு அரசாங்கம் அனுமதி அளிக்காது. இப்பொழுது அமெரிக்காவிலும், அநேக மக்களை அவர்கள் கட்டுப்படுத்துகிறார்கள். அதே காரியம் இந்தியாவிலும்கூட நடைபெறுகிறது. இப்பொழுது ஒரு புதிய சட்டம் வரும். ஒருவேளை மக்கள் அமெரிக்காவிலிருந்து தங்களுடைய பணத்தை எடுத்துக்கொண்டு இந்தியா திரும்ப வேண்டும் என விரும்பினால் அதற்கான அனுமதியைப் பெற்று எடுத்துச் செல்ல வேண்டும். இப்பொழுது இந்த வருடம், இந்திய தேசம் ஒரு புதிய சட்டத்தைப் பிறப்பித்துள்ளது. இந்த தேசத்தை விட்டு வெளியே சென்ற எந்த ஒரு இந்தியனும், தாங்கள் இந்தியர்கள் என்பதற்கு அடையாளமாக 20,000 ரூபாய் கட்டணம் செலுத்தி அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம். ஒருவேளை இந்தியர்கள் யாராவது அமெரிக்கா அல்லது உலகத்தின் எந்தப் பாகத்திலாவது வசித்துக் கொண்டிருந்தால், அவர்களுடைய பூர்வீகம் இந்தியாவாக இருந்தால், இந்திய தூதரகத்திலிருந்து ஒரு அடையாள அட்டையை அவர்கள் பெற்றுக்கொள்ளலாம். அதன் மூலமாக எந்த சமயத்திலும் அவர்கள் தங்களுடைய தேசத்திற்குத் திரும்பி வரலாம். சமீப காலத்தில் அந்த சட்டமானது வந்துள்ளது. ஆகவே ஒவ்வொரு மாற்றமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்த அடையாள அட்டையானது நரசிம்ம ராவினுடைய காலத்திலேயே எதிர்பார்க்கப்பட்ட ஒரு காரியமாகும். இப்பொழுது அமெரிக்காவில் இருக்கும் ஒரு இந்தியன் தான் சம்பாதித்த சொந்த பணத்தை எடுத்துக்கொண்டு இந்தியாவிற்கு திரும்பி வர வேண்டுமென விரும்பினால், அமெரிக்க நாடு என்ன கூறும்? இல்லை ஐயா, நீங்கள் எல்லா பணத்தையும் இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல முடியாது. சிறிதளவு பணத்தை மட்டுமே நீங்கள் இந்தியாவிற்கு எடுத்துச் செல்லலாம் என்பார்கள். வங்கியில் கூட ஒரு புதிய சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார்கள். ஒருவேளை 50 டாலர் காசோலையை நீங்கள் வங்கியில் சமர்ப்பித்தால், எந்தக் காரணத்திற்காக அதை நீங்கள் வங்கியில் ஒப்புவிக்கிறீர்கள் என்று நீங்கள் வாக்குமூலம் கொடுக்க வேண்டும். ஆகவே புதிய சட்டங்கள் ஏற்படுத்தப்படும். ஜனங்கள் தங்களுடைய பணத்தை ஒரு தேசத்திலிருந்து மற்றொரு தேசத்திற்கு மாற்ற முடியாது. நாளை இந்தியாவிலும்கூட ஒரு புதிய சட்டம் வரக்கூடும். யாரெல்லாம் தங்கம் வைத்திருக்கிறார்களோ, உங்களுக்கு அருகாமையில் இருக்கிற மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது தாசில்தாரிடம் சென்று, என்னிடம் இவ்வளவு தங்கம் இருக்கிறது என்று வாக்குமூலம் கொடுத்து, நீங்கள் ஒரு முத்திரையைப் பெற வேண்டும். அந்த பத்திரம் இல்லாமல் நீங்கள் தங்கத்தை வாங்கவோ விற்கவோ முடியாது. ஒருவேளை தங்கத்தை மறைவாக வைத்துக்கொண்டு, அதற்கு பத்திரம் உங்களிடத்தில் இல்லையென்றால், அந்த தங்கத்தை எந்த ஒரு கடையிலும் வாங்கமாட்டார்கள். அதை ஒருவரும் விற்கவும் முடியாது. அந்த சமயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல், அநேகர் தங்களுடைய தலையில் அடித்துக்கொள்வார்கள்.

‘ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!’ என்று நாம் கூறும்போது, மொழி வேறுபாடுகூட இருக்கக்கூடாது. நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை சிலர் அறியாதிருக்கிறார்கள். இப்பொழுது நாம் ‘ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!’ என்ற செய்தியை கொடுக்கப்போகிறோம். நாம் ‘மனுஜோதி’ என்ற இதழின் வாயிலாக பரப்பிக் கொண்டிருக்கிறோம். ஆகவே வேதாகமம், பகவத்கீதை, குர்-ஆன் மற்றும் அய்யாவின் செய்திகளிலிருந்து சில கட்டுரைகளை நாம் அதில் பிரசுரிக்கிறோம். ஜனங்கள் ஒருவரோடொருவர் சண்டைபோடக்கூடாது என்பதை, அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற பொது அறிவை, நாம் மக்களுக்கு கற்றுக் கொடுக்கிறோம். இதுவே ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அய்யா நமக்கு கொடுத்த செய்தியாகும். வேதாகமத்தில் வெளிப்படுத்தின விசேஷம் 14-ம் அதிகாரத்தை நாம் பார்ப்போமென்றால், தூதனானவர் செய்தியை வைத்துக் கொண்டிருந்தார் என்று சொல்லப்பட்டுள்ளது. அதுதான் நித்தியமான சுவிசேஷம் என்றழைக்கப்படுகிறது. அவர் அதை வைத்துக் கொண்டிருந்தார். அந்தச் செய்தியானது நமக்கும்கூட அருளப்பட்டது. இப்பொழுது அந்த செய்தியை நாம் பொது மக்களுக்குக் கொடுக்கிறோம்.

நாளை கடவுளுடைய திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றிருந்தால், ‘லாஸ் ஏஞ்சல்ஸ் பட்டணம் மூழ்கக்கடவது’ என்றால், அது முழ்கி விடும்; அவ்வளவுதான். அப்பொழுது இந்த முழு உலகமும் அநேக பிரச்சினைக்குள்ளாகும். ஒருவேளை நம்மில் அநேகர் தங்களுடைய உத்தியோகத்தை இழந்தால், நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? ஆனால் சிலர் என்ன கூறுவார்கள்? ஓ! நாங்கள் கஷ்டப்படுகிறோம்; எங்களுக்கு ஆகாரம் இல்லை. உடனே கடவுளே இல்லை எனபார்கள். எனவே நீங்கள் உங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு, உங்கள் வாழ்க்கை தரத்தை குறைத்துக்கொண்டால், பாதுகாப்பாக இருப்பீர்கள். இல்லையென்றால் நீங்கள் சம்பாதிக்கிற பணம் உங்களுக்குப் போதியதாக இருக்காது. இரண்டு மாதங்களுக்கு முன், ஆசிரமத்தில் நாங்கள் மின்சார உபயோகத்தைக் குறைத்தோம். அதனால் 1000 ரூபாய் மிச்சமானது. உடனடியாக சமீப காலத்தில் அரசாங்கமானது கட்டணத்தை உயர்த்திவிட்டது. மறுபடியுமாக ஆயிரம் ரூபாய் கூடுதலாக வந்தது.

மண்ணெண்ணெய், பால், அரிசி போன்றவற்றிலும் அதேவிதமாக உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலைக் குறித்து என்ன? ஒவ்வொரு வாரமும் விலையானது உயர்ந்துகொண்டே இருக்கிறது. பத்திரிக்கைச் செய்தியைப் பார்க்கும்போது திடீரென ஈராக் யுத்தம் தொடங்கிவிட்டால், எத்தனை கார் மற்றும் வாகனங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் இல்லாமல் தெருக்களில் நிற்கப்போகின்றது என்று தெரியவில்லை. நான் உங்களுக்கு சொன்ன அனைத்தையும் குறித்து சிந்தித்து செயல்படுங்கள். இப்பொழுதே ஒரு பழைய சைக்கிளை (மிதிவண்டியை) வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். எங்களிடத்தில் சைக்கிள் உள்ளது. பத்து சைக்கிள்கள் இருக்கின்றது. முந்நூறு அல்லது ஐந்நூறு ரூபாய் மதிப்புள்ள விலை குறைந்த சைக்கிளை நாங்கள் வாங்கிக் கொண்டிருக்கிறோம். எனவே எளிய வாழ்க்கை முறையை உங்கள் நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடியுங்கள். மேலும் வேதங்களில் கூறியுள்ளபடி அவர் இறைமக்களுக்கு கொடுத்துள்ள கட்டளைகளுக்கு கீழ்ப்படியுங்கள். அப்பொழுது இறைவன் உங்களை தம்முடைய திட்டத்தின்படி நடத்துவார்.

– தொகுப்பு : K.P. பாலு, தூத்துக்குடி

******

 

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்