தமிழ் | తెలుగు

» வாசகர் கருத்து » வாசகர் கருத்து

வாசகர் கருத்து

மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு, எனது வேண்டுகோளை ஏற்று தங்கள் ஆசிரமத்தின் நூல்களை எனக்கு அனுப்பி ஸ்ரீமந் நராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களின் மகிமையை நான் அறிய உதவியதற்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தங்களுக்கு சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். மேலும் ஆன்மீகத்தில் திசை தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த எனக்கு உண்மையை உணர்த்தியதற்கு மீண்டும் என் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் கல்கி மகா அவதாரம் என்பதை பல சான்றுகளுடன் நிரூபிக்கிறது. அதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. நிறை மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன். கல்கி மகா அவதாரம் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அருளாசியை பெறவும், ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் என் உள்ளத்தில் எப்போதும் நிறைந்து அவரின் மகிமையை வெளிப்படுத்த வேண்டும். அவர்களின் அருளாசிக்காகவும் என்றும் பிரார்த்தனை செய்வேன்.

பொதுவாக உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளும் உண்பது, உறங்குவது மற்றும் தற்காத்துக்கொள்வது இவற்றிலேயே குறியாக இருக்கும்போது, இதற்கு மேலாக ஆன்மீகம் இருக்கிறது என்பதையும் ஒன்றே குலம், ஒருவனே தேவன்! என உணர்த்திய ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களின் அனுபவ உண்மைகள் மூலம் அவரையே சரணடைந்து ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பாத மலர்களை பிரார்த்தித்து வெற்றியடைய விரும்பும் உண்மை விசுவாசி.

– ச. காளியப்பன், திருநெல்வேலி

✡✡✡✡✡✡

Filed under: வாசகர் கருத்து