தமிழ் | తెలుగు

» வாசகர் கருத்து » வாசகர் கடிதம்

வாசகர் கடிதம்

பேரன்புடையீர்,

என்மேல் அன்புகூர்ந்து தவறாது மனுஜோதி இதழை அனுப்பி வைப்பதற்கு தங்களுக்கு முதற்கண் என் இதய பூர்வ நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆகஸ்ட்-செப்டம்பர்-அக்டோபர் 2016 “மனுஜோதி” இதழில் இடம்பெற்ற கட்டுரைகள் ஒவ்வொன்றும் சமயம், பக்தி, வழிபாடு சம்பந்தப்பட்ட பல்வேறு உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளன. இது வெறும் முகஸ்துதி அல்ல, அதிலும் “நம்பினால் நம்புங்கள்! எது நிலையானது, சிற்றின்பமா? பேரின்பமா?”கட்டுரை அற்புதம், அதி அற்புதம், மகா அற்புதம்! நிகழ்கால மக்களின் அவலங்களை (என்னையும் சேர்த்துதான்) அப்படியே படம் பிடித்து காட்டுகிறது. தங்களுக்கு நன்றி.

– ராம முத்தையா, மலேசியா

✡✡✡

ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். மனுஜோதி இதழ் கிடைத்தது. நானும் படித்து அதை எல்லோருக்கும் விநியோகமும் செய்துகொண்டிருக்கிறேன். எல்லா மதத்தின் கருத்துக்களையும் சிறப்பாக எழுதி உள்ளீர்கள். ஒன்றே குலம் என்பது மனித குலம் வாழ சிறந்த கொள்கை. அது மாறினாலே மனிதன் மனிதனாக மாறிவிடுவான். தங்களின் பணி என்றும் சிறப்பாக தொடரட்டும். மனிதனை மனிதனாக உருவாக்குங்கள். அதில் சொர்வடையாதீர்கள். நான் லஹரி அய்யாவை நேசிக்கிறேன். அதினால் சிறப்பாக இருக்கிறேன் என்பதே உண்மை. அதை மறுக்க முடியாது.

– இரா. சண்முகவேல், திருநெல்வேலி

✡✡✡

தாங்கள் அனுப்பி வரும் மனுஜோதி இதழை பெற்று, அதில் வரும் நீதிக்கதைகளையும் மற்றும் தேவனாகிய கர்த்தர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகளையும் படித்து இன்புற்று வருகிறோம். மிக்க நன்றி! மேலும் அக்கருத்துக்கள் யாவும் மனது சோர்வுற்று இருக்கும் நேரத்தில் மனதிற்கு மாமருந்தாக பயன்படுகிறது. அய்யாவின் நீதிநெறிகளையும், வேத இரகசியங்களையும் படித்து வியப்பு ஏற்படுகிறது. இந்த இயந்திரமயமான உலகத்தில் மனுஜோதி கருத்துக்கள் மனிதனை சிந்திக்க வைக்கிறது.

– P. காளீஸ்வரி, ஈரோடு

✡✡✡

ஆசிரியர் அவர்களுக்கு எனது அன்பான வணக்கம். மனுஜோதி ஆகஸ்டு-அக்டோபர் 2016 இதழில் “சாந்தியளிக்கும் ஆன்மீகம்” படித்து மிகவும் சந்தோஷம் அடைந்தேன். அதில் தற்சமயம் உலகில் நடக்கும் விஷயங்கள் மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. உதாரணமாக இன்று அநேக மக்கள், நாம் மேலை நாடுகளுக்கு சென்று அந்த கலாச்சாரத்தை இறக்குமதி செய்யலாம் என்று நினைக்கிறார்கள். விவிலியத்தில் கூறப்பட்டுள்ள பத்து கட்டளைகளை இன்றுவரை யாரும் நிறைவேற்றவில்லை. ஆனால் இந்துக்கள் அதை நிறைவேற்றுகிறார்கள் என்று அருமையாக கூறியுள்ளீர்கள். உங்களுக்கு எங்கள் பாராட்டுக்கள்.

S. பிச்சைபிள்ளை, கன்னிஹாகுமரி

✡✡✡

மனுஜோதி ஆய்விதழ் படித்தேன். பலவிதமான ஆன்மீக கருத்துக்கள் நெஞ்சை தாலாட்டுவதாக உள்ளது. ஸ்ரீமந் நாராயணரின் பேரருள் அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் அனைத்து செய்திகளும் மற்றும் தங்களது அன்பு பணியும் இருக்கிறது. எத்தனையோ அன்பர்கள் இவ்வான்மீக பணியில் தங்களை இணைத்து உள்ளதை காண்கையில் மனம் மென்மை அடைகிறது, மேன்மை அடைகிறது. மகிழ்ச்சி! வாழ்த்துக்கள். மனம் தெளிவாகிட தெளிவான எண்ணம் வேண்டும். தெளிவான எண்ணம் வேண்டுமெனில் அமைதியான மனம் வேண்டும். அந்த அமைதிதானே மனுஜோதி.

இரா. நவமணி, அம்பாசமுத்திரம்

✡✡✡✡✡✡✡

Filed under: வாசகர் கருத்து