தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து » வரம்

வரம்

வரம் பெறுவதற்காக இறைவனை வேண்டி, கடுந்தவம் புரிந்ததாக நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இதிகாசங்களை வாசித்து அறிந்திருக்கிறோம்.

கிரேக்க புராணத்தில் உள்ள தகவல் இதுவாகும். டிராய் நாட்டின் இளவரசர் டிதூனுஸ். இவன் ஆயுளை அதிகரிக்கும் இறைவனான அரோராவை வணங்கி தனக்கு சாகாவரம் வேண்டும் என கேட்டான். இறைவனும் அவன் கேட்ட வரத்தை கொடுத்தார். இந்த வரத்தை கேட்கும்போது டிதூனுஸ் ஒரு வியத்தை மறந்து விட்டான். என்றும் இளமையுடன் சாகா வரம் வேண்டும் என்று கேட்டிருந்தால் அவன் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் சாகா வரம் மாத்திரம் கேட்டதால் அவன் வயதான பிறகும் மரணம் வராமல் வேதனைப்பட்டான். உடல் தளர்ந்து உள்ளம் உடைந்து வேதனை அடைந்த அவன் மீண்டும் இறைவனிடம் வேண்டினான். அவனது நிலைக்கு இறைவன் மனம் இரங்கி  அவனை ஒரு வெட்டுக்கிளியாக படைத்தாராம்.

ஜீவன் முக்தி, மரணமில்லா பெருவாழ்வு வேண்டுமென்று அநேகர் முயற்சி செய்தார்கள். இந்த கலியுகத்தில் அது இலவசமாக வழங்கப்படுகிறது. ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாதாமே கல்கி மகா அவதாரமாக வந்து அதை அருளுகிறார். அவர் அருளும் சாகா வரம் எப்படிப்பட்டது?

ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவை சரணடைந்தவர்களுக்கு கிட்டும் ஜீவன் முக்தியில் அவன் என்றும் இளமையாக இருப்பான். அத்துடன் அந்த தேகத்தில் பசி எடுக்காது, தாகம் எடுக்காது. நோய்நொடி வலி வராது, குளிர், வெப்பம் என்ற உணர்ச்சி ஏற்படாது. தண்ணீரினால் நனையாது. தீயினால் எரியாது, எந்த சுவருக்குள்ளும் ஊடுருவி செல்லும். எங்கேயாவது செல்ல விரும்பினால் எந்த வாகனமும் தேவையில்லை. நினைத்தவுடன் அந்த இடத்தை சென்றடையக்கூடிய ஆற்றல் வாய்ந்தது. களைப்பே ஏற்படாது, தூக்கம் தேவையில்லை. ஆண், பெண் என்ற வித்தியாசம் இருக்காது. இனக்கவர்ச்சி என்ற உணர்வு கிடையாது. வித்தை உண்டாலும் மரணம் ஏற்படாது, ஆயுதங்களாலும் மரணம் ஏற்படாது. அந்த தேகத்திற்கு உடை தேவைப்படாது, அந்த தேகம் அழுக்காகாது, அதனால் குளிக்க தேவையில்லை. எப்பொழுதும் நறுமணம் வீசுவதாக இருப்பதினால் நறுமண தைலங்கள் தேவையில்லை. மிக மிக முக்கியமான அம்சம் மனதில் தீய எண்ணங்கள் தோன்றாது. இப்படிப்பட்ட தேகத்துடன் நாம் மற்ற மானுடர்களுக்கு காட்சியளிக்கலாம். மறுபடியுமாக இறைவனின் சந்நிதிக்கு செல்ல விரும்பினால் உடனடியாக நாம் மகிமையின் தேகத்திற்கு மாறி இறைவன் முன்பு நிற்கலாம். இப்படிப்பட்ட மகத்தான வரம் இலவசமாக வழங்கப்படுகிறது.

நம் லௌகீக உலகத்தின் பணம், பொருள், ஆஸ்தி கொண்டு இதை வாங்க முடியாது. இதை வாங்க, இந்த வரத்தை பெற்றுக்கொள்ள  நாம் ஒரு விலையை கொடுக்க வேண்டும். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், கறுப்பன், வெள்ளையன், குள்ளன், நெட்டையன், பெண்கள், சிறுபிள்ளைகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் யார் வேண்டுமானாலும் இந்த விலையை கொடுக்க முடியும். அந்த விலை என்ன? இறைவன் ஒருவரை மாத்திரம் நேசித்து, எல்லாவற்றிற்கும் அவர்மேல் சார்ந்திருப்பதேயாகும். இந்த விலையை கொடுத்தால் நமக்கு சாகா வரம் கிட்டும்.

———✡✡✡✡✡✡———-

Filed under: ஆன்மீக கருத்து