தமிழ் | తెలుగు

» ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள் » மனிதன் மனிதனாக!!

மனிதன் மனிதனாக!!

ஓரறிவு படைத்த பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் சிருஷ்டி நாயகர் யாரென்று தெரியும். ஆனால் ஐம்புலன்கள் மற்றும் ஆறாம் அறிவாகிய சிந்திக்கும் ஆற்றல் படைத்த மனிதனுக்கு சுயாதீனம் அதாவது தெரிந்துகொள்ளும் சக்தி அவனுக்கு கொடுக்கப்பட்டதால் சிருஷ்டி நாயகரை அவனால் அறிய முடியவில்லை.

இந்த உலகில் மனிதனுக்கு ஏற்படும் போராட்டம் என்ன? அரசாங்கம், குடும்பம், மனைவி, பிள்ளைகள், சமுதாயம், தொழில் என்பவைகளுக்கு அடிமையாய் இருப்பதா? அல்லது தன்னுடைய சிருஷ்டி நாயகருக்கு அடிபணிவதா? என்பதுதான் இக்கலியுகத்தில் வாழும் மனிதனுக்கு ஏற்படும் போராட்டமாகும்.

இந்திய இஸ்லாமியர்களாக இருக்கலாம்; இந்திய கிறிஸ்தவர்களாக இருக்கலாம்; இந்திய இந்துக்களாக இருக்கலாம்; ஆனால் நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற தேசீய ஒருமைப்பாடு நமக்குள் இருக்க வேண்டும். அதுதான் முக்கியம்.

உங்களுடைய கெட்ட குணாதிசயங்கள், பழக்க வழக்கங்கள்தான் உங்களை தாழ்ந்த ஜாதியாக்குகிறது. உங்களுடைய நல்ல குணாதிசயங்கள் உங்களை ராஜரீக வம்சமாக்குகிறது.

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்