தமிழ் | తెలుగు

» பத்திரிகை செய்திகள் » மகாத்மா காந்தி அகிம்சையை பின்பற்றுவதற்கு காரணமான சம்பவம்!

மகாத்மா காந்தி அகிம்சையை பின்பற்றுவதற்கு காரணமான சம்பவம்!

ஜோசப் டோக் என்ற ஆங்கிலேயர் காந்தியடிகளை சந்தித்து நீண்ட நேரம் உரையாடிக்கொண்டிருந்தார். அப்பொழுது அவர் காந்தியடிகளை நோக்கி சத்தியாகிரகம் என்ற தத்துவ உணர்வு உங்களுக்கு தோன்றுவதற்கு அடிப்படையாக இருந்தது என்ன? என்று ஒரு கேள்வியைக் கேட்டார். நான் சிறு வயதில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது பாடத்தில் வந்திருந்த ஒரு குஜராத்தி மொழி பாடல்தான் சத்தியாகிரக உணர்வு என் மனதில் குடிகொண்டதற்கு காரணம் என்று மகாத்மா காந்தியடிகள் கூறினார். அது என்ன பாடல், அதின் கருத்தைக் கூறுங்கள் என்று ஜோசப் டோக் கேட்டார்.

அதற்கு காந்திஜி: “ஒருவன் உனக்கு தண்ணீர் கொடுக்கிறான் என்றால் அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்தால் அது ஒன்றும் பெரிய விஷயமல்ல. அது ஒரு சாதாரண விஷயம். தீமை செய்தவனை தீமையால் எதிர்ப்பதும் சாதாரண விஷயமே. மிருகங்களில்கூட இந்த வழக்கம் உள்ளது. தீமை செய்தவனுக்கு நன்மை செய்வதன் மூலம், அவன் தான் செய்த தீமையை உணரச்செய்வதுதான் மிகவும் போற்றத்தக்க ஒன்றாகும். இவ்வாறு அந்த குஜராத்தி மொழி பாடல் அறிவுறுத்தியது. அந்த கருத்துதான் என் மனதில் ஆழப்பதிந்தது. பின்னர் இயேசு நாதரின் மலை சொற்பொழிவை ஆழ்ந்து படித்தபோது குஜராத்தி மொழிப்பாடலின் உண்மையான பொருள் என்ன என்று முழுமையாக விளங்கிக்கொள்ள முடிந்தது” என்றார்.

✡✡✡✡✡✡

Filed under: பத்திரிகை செய்திகள்