தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து » பூமியிலே நாம் கடைபிடிக்க வேண்டியவைகளாக

பூமியிலே நாம் கடைபிடிக்க வேண்டியவைகளாக

வேதம் கூறுவது என்ன?

  1. ஸ்ரீமந் நாராயணருக்கு அருவருப்பான காரியங்களான மூடப்பழக்க வழக்கங்கள், பாரம்பரியம், சாம்பிரதாயம், நாள் பார்த்தல், ஜோசியம், ராசிபலன் போன்றவைகள் நம்மில் இருக்கக்கூடாது.

உபாகமம் 18:10-12: “தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களிடத்தில் இருக்கவேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார்”.

  1. உடலில் பச்சை குத்துவது, டாட்டூ வரைவது கூடாது. ஏனெனில் நம்முடைய உடல் இறைவன் வாசம் செய்யும் ஆலயமாக உள்ளது.

I கொரிந்தியர் 6:19: “உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?” லேவியராகமம் 19:28: “…அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்”.

  1. ஆண்களின் உடைகளை பெண்கள் அணிவது ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவுக்கு அருவருப்பானதாகும்.

உபாகமம் 22:5: “புருஷரின் உடைகளை ஸ்திரிகள் தரிக்கலாகாது, ஸ்திரிகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்”.

  1. ‘கடன் அன்பை முறிக்கும்’ என்று பழமொழி உள்ளது. தற்போது சிலர் கடன் வாங்கிவிட்டு, அதை திரும்ப செலுத்த முடியாமல் குடும்பமாக தற்கொலை செய்துகொள்வதை நாம் அன்றாடம் பத்திரிக்கைகளில் படிக்கிறோம். அதினால்தான் அன்பைத்தவிர வேறெதிலும் கடன் படக்கூடாது என்று ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறுகிறார்.

ரோமர் 13:8: “ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்…”

  1. மரங்களை அழிப்பதினால் நமக்கு நாமே சாபத்தை வரவழைக்கிறோம் என்று ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறியிருக்கிறார். மேலும் மழை பொய்க்கிறது, உஷ்ணம் அதிகரிக்கிறது, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது .

உபாகமம் 20:19: “…நீ கோடாரியை ஓங்கி, அதின் மரங்களை வெட்டிச் சேதம்பண்ணாயாக; அவைகளின் கனியை நீ புசிக்கலாமே…. வெளியின் விருட்சங்கள் மனுஷனுடைய ஜீவனத்துக்கானவைகள்”.

இறைவனுடைய பிரசன்னம் உங்கள் வீட்டில் காட்சி கொடுக்க வேண்டுமானால், உங்கள் வீட்டிலிருக்கும் எல்லா அசுத்தமான காரியங்களையும் அப்புறப்படுத்துங்கள்.

தொகுப்பு:- C. எல்சன் ஜோசப்

✡✡✡✡✡✡✡

Filed under: ஆன்மீக கருத்து