தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து » புத்தாடை அணிவதின் தத்துவம்

புத்தாடை அணிவதின் தத்துவம்

மனிதன்தான் புத்தாடை அணிவதற்காக பணம் கொடுத்து வாங்க வேண்டும். ஆனால் மரமானது, தன்னுடைய பழைய இலைகளை உதிர்க்கிறது, மிருகங்களும், பறவைகளும் தாங்களே தங்கள் இறகுகளையும், முடிகளையும் உதிர்க்கிறது. அதற்கு பதிலாக புதியது உருவாகிறது. மக்கள் பொதுவாக எல்லா பண்டிகைகளுக்கும் புத்தாடை அணிந்து கோவில், மசூதி மற்றும் ஆலயம் சென்று வழிபடுவார்கள். புத்தாடை அணிவதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. ஸ்ரீமத் பகவத்கீதை 2:22: மனிதன் எவ்வாறு நைந்துபோன துணிகளை எறிந்துவிட்டு வேறு புதியவற்றை எடுத்துக்கொள்ளுகிறானோ அவ்வாறே உடலில் உறைபவன் நைந்துபோன உடலங்களை விட்டுவிட்டு வேறு புதியவற்றை அடைகிறான்”. இறைவன் நமக்கு ஜீவன் முக்தியை அருளும்போது நமக்கு ஒரு புதிய தேகத்தை அல்லது புதிய உடலை கொடுக்கிறார். இப்பொழுது நாம் தேகத்தை மெய்என்று அழைக்கிறோம். ஆனால் இந்த மெய்பொய்யானது, அழியக்கூடியது. இக்கலியுகத்தின் முடிவில் இறைவன் நமக்கு நவானிதேஹியை அல்லது மரணமில்லாத வேறொரு புதிய சரீரத்தை அருளுகிறார் என்ற தத்துவத்தை உணர்த்தவே நாம் பண்டிகையின்போது புத்தாடையை அணிகிறோம். இந்த நவானிதேஹி அல்லது புதிய சரீரம் எப்படிப்பட்டது என்பதைக் குறித்து வரம்என்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

———✡✡✡✡✡✡———-

Filed under: ஆன்மீக கருத்து