தமிழ் | తెలుగు

» பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை » பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா -2

பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா -2

வழக்கமாக ஆசிரமத்தில் நடக்கும் கூடாரப் பண்டிகை, 1970-ம் ஆண்டு வேலூரில் நடந்தது. இதில் லாயிட் வில்லியம்ஸ் என்னும் அமெரிக்க நாட்டவர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். அந்த சமயம் வேலூர் கோட்டை மைதானத்தில் மிகப் பிரம்மாண்டமான பிரச்சார கூட்டத்தை நடத்தினார் பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா.

பைபிளில் ஏசாயா 61-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளபடி கடவுள் கீழே இறங்கி வந்ததின் நோக்கம் மூன்று நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சிறுமைப்பட்டவர்களுக்கு நற்செய்தி அளித்தல், இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயம் கட்டுதல், கலியனால் சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையை கூறுதல். கடவுளுடைய அநுக்கிரக வருஷத்தை அறிவித்தல். மோசே தீர்க்கதரிசனம் உரைத்தவிதமாக அவை இயேசு
தீர்க்கதரிசியாக வந்தபோது நிறைவேறியது.

இரண்டாம் நிலையாவது நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாள் என்பது தேவன் திருடனைப்போல, கீழே இறங்கி வந்து, உபத்திரவ காலம் ஆரம்பிப்பதற்கு முன்பாக அந்நிய ஜனங்கள் மீது நியாயத்தீர்ப்பை அறிவிப்பதற்கு மனுஷகுமாரனாக வருவது. இது மனுஷகுமாரனாகிய பாலாசீர் லாறியில் நிறைவேறியது. இவர்தான் தாவீதின் வம்சாவழியில் வந்த தாவீதின் குமாரன்.

மூன்றாம் நிலையாக ஒலிவ மலையில் துயரப்படுகிறவர்களுக்கு ஆறுதல் கூற யூதர்களுக்கு தாவீதின் குமாரனாக இவர் வெளிப்படுவார். 2000 ஆண்டுகளுக்கு முன் யூதர்களுக்கு இயேசுவின் வருகையைப் பற்றி முன்னறிவித்தார் தீர்க்கதரிசி யோவான். அந்த சமயம் வாழ்ந்த யூதர்கள் அவதார புருஷராகிய இயேசுவை புறக்கணித்தார்கள். அதன் விளைவாக யூதர்களின் இராஜ்ஜியம் அழிவு பெற்று தீத்து ராயனால் அவர்கள் சிதறடிக்கப்பட்டார்கள். இந்த யுகத்திலே யூதர்கள் அல்லாத பிற சமுதாயத்தினருக்கு இறை ஒளி அருள வந்தவர் கல்கி மகா அவதாரம் பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா. இவர் வருகையை முன்னறிவிக்க வந்தவர்தான் அமெரிக்காவைச் சேர்ந்த தீர்க்கதரிசி பிரன்ஹாம்.

இயேசுவை எப்படி யூதர்கள் புறக்கணித்தார்களோ அவ்வண்ணமே இக்காலத்து கிறிஸ்தவர்கள் இவரை புறக்கணித்தது மட்டுமல்லாமல் பிரன்ஹாம் தான் அவதார புருஷர் என நினைத்து கொண்டார்கள். பிரன்ஹாம் ஒரு வழிகாட்டியே தவிர அவர் மனுஷகுமாரன் அல்ல. மனுஷகுமாரனாகிய லாறி முத்துக்கிருஷ்ணாவை முன்னறிவிக்க வந்தவர் தீர்க்கதரிசி பிரன்ஹாம். தமது சொற்பொழிவிலே இயேசுவின் காலத்திலே என்ன சம்பவித்ததோ அதுவே இப்பொழுதும் சம்பவிக்கிறது என்பதை நினைக்கும்பொழுது தனக்கே மனநடுக்கமாக உள்ளது என்றார். காரணம் என்ன? கடவுள் சொல் தவறாதவர். மனுஷகுமாரனை முன்னறிவிக்க வந்தவன் நான். நாங்கள் இருவரும் ஒரே சமயத்தில் பணி செய்ய முடியாது. இனி வருங்காலத்தில் அவர் பணி பெருகும். எனது பணிகள் குறையும். 1969-ம் ஆண்டு மனிதன் சந்திரனில் கால் பதித்த அன்று சிக்காகோ நகரில் கடவுள் தன்னை வெளிப்படுத்தினார். அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த மக்கள் அதனை காண தவறிவிட்டனர்.

– தொடரும்…

*******

Filed under: பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை