தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து » பற்று

பற்று

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்குஎன்று வள்ளுவர் கூறியதின் பொருளாவது ஆசை அல்லது பற்றை விடுவதற்கு எல்லா பொருள்களுக்கும் மூலகாரணராகிய ஆசை அல்லது பற்று அற்ற பரம்பொருளின் அழகிய பாதங்களை இறுகப் பிடித்துக்கொள் என்பதாகும்.

இறைவன் ஆசை அற்றவன் என்று ஒப்புக்கொள்ளலாம். பற்று இல்லாதவன் என்றால் ஒத்துக்கொள்ள முடியாது. ஏன்? அவன் பற்றியிருப்பதினால்தானே வளியில் பூமி சுழன்று கொண்டிருக்கிறது, நட்சத்திரங்கள் தொங்கி கொண்டிருக்கின்றன, சூரியன் தொங்கி கொண்டிருக்கிறது. அத்துடன் அண்டசராசரத்திலுள்ள சகலமும் இறைவன் பற்றி பிடித்துக்கொண்டிருப்பதினால்தானே அவை தத்தம் இடத்தில் நின்று கொண்டிருக்கிறது.

விஞ்ஞானிகள் இந்த பற்றை புவிஈர்ப்பு சக்தி என்றார்கள். மெய்ஞானம் இதனை இறைவனின் கட்டுப்பாடு என்கிறது. அவ்வளவுதான்!!! திருக்குர்-ஆனும் இக்கருத்தை கூறுகிறது. நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான். பின்னர் அர்ஷின்மீது அமர்ந்தான். சூரியனையும், சந்திரனையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன. காரியத்தை அவனே நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான். (அல்குர்-ஆன் 13:2). நீங்கள் பார்க்கக்கூடிய தூணின்றி வானங்களைப் படைத்தான். உங்களை சாய்த்து விடாதிருக்க பூமியில் முளைகளை போட்டான். அதில் ஒவ்வொரு உயிரினத்தையும் பரவச் செய்தான். வானிருந்து தண்ணீரை இறக்கினோம். அதில் மதிப்புமிக்க ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்தோம். (அல்குர்-ஆன் 31:10).

எதையாவது பற்றுவதே மனிதனின் சுபாவமாகும். பற்று என்றால் பந்தம் அல்லது தொடர்பாகும். பற்றை விட்டு விட்டால் நாமும் விண்வெளியில் உள்ள சூரியன், கிரகங்கள், நட்சத்திரங்கள் போன்றவை இறைவனின் கட்டுப்பாட்டில் சுழல்வதுபோல சுழல்வோம் அல்லது இயங்குவோம். இப்படி நாம் இயங்க வேண்டும் என்பதே இறைவனின் ஆசையாகும்.

பற்று அல்லது இறைவனின் கட்டுப்பாட்டிற்குள் எவ்வாறு வருவது என்பதற்கு திருமூலர் விடை கூறுகிறார்.

நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடில்

ஊன்பற்றி நின்ற உணர்வுரு மந்திரம்

தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே”.    – திருமந்திரம் (85) – திருமூலர்

நான் பெற்ற இன்பத்தை இவ்வையகத்திலுள்ள அனைவரும் பெறுவதாகுக. வான் உயர் வேதத்தின் உட்பொருளை அறிந்து சொன்னால், அதுவே உயிர் தாங்கி நிற்கும் உடல் பெற்ற நாம், உணர்ந்து உய்யும் மந்திரமாகும். இந்த மந்திரத்தைத் தொடர்ந்து மனதில் தியானிக்கத் தியானிக்க, இறைவன் திருவருள் தானே கிட்டும்.

எவ்வாறு புவிஈர்ப்பு சக்தி நம் கண்களுக்கு புலப்படுகிறதில்லையோ அதேவண்ணம் இறைவனின் கட்டுப்பாடு புலப்படுகிறதில்லை. ஆனால் கல்கி மகா அவதாரம் கூறிய
ஸ்ரீ மந்திரத்தை கூற அவர்மேல் நமக்கு பற்று ஏற்படும் என்பது நிச்சயம்.

பற்றை விட்டு பற்றற்றான் பற்றை பற்றுவோம்!

———✡✡✡✡✡✡———-

Filed under: ஆன்மீக கருத்து