தமிழ் | తెలుగు

» ஸ்ரீமத் பகவத்கீதை » பரமபுருஷர் ஸ்ரீமந் நாராயணர் அருளிய ஆதிவேள்வியின் நற்செய்தி

பரமபுருஷர் ஸ்ரீமந் நாராயணர் அருளிய ஆதிவேள்வியின் நற்செய்தி

……வெவ்வேறு தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்ட பரிசுத்த வேதங்களிலிருந்தும்

மற்றும்

இந்த கலியுகத்திலே ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அருளிய

சொற்பொழிவுகளிலிருந்தும் விளக்கப்பட்டுள்ளது

 

ஸ்ரீமத் பகவத்கீதை

எட்டாம் உபதேசம்

ஸ்ரீமந் நாராயணரின் அழிவற்ற உருவத்தின் இரகசியம்

உலக மக்கள் அல்லது மனுபுத்திரர்கள் தங்களுடைய நற்கிரியைகளினிமித்தம் புதிய வானம் புதிய பூமியிலே உயிர்ப்பிக்கப்பட்டு, நியாயந்தீர்க்கப்பட்டு பிரவேசிக்கிறார்கள். அர்ச்சுனா! எல்லாக்காலங்களிலும் என்னை மட்டுமே நினைத்து போர் புரிவாயாக. மனத்தையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பணம் செய்து என்னிடம் நிலைநிறுத்தி சந்தேகமின்றி என்னையே வந்தடைவாய்.

ஓ! அர்ச்சுனா! அழிவற்ற யோகம் அல்லது ஆதிபலியின்மேல் உன்னுடைய மனதை ஒருமுகப்படுத்தி, என்றும் என்மேல் தியானம் செய்து, உலகத்தின் காரியங்கள் அல்லது ஐம்புலன்களைக் குறித்து நினைக்காமல், அவருடைய சேவையை செய்வதில் மட்டுமே நிலைபெற்று தரித்திருக்கிறவன் பிரகாசிக்கும் தெய்வீக புருஷரை அடைகிறான்.

பரமாத்மா எல்லாம் அறிந்தவர், காலவரையற்றவர் அல்லது பழமையானவர். அவருக்கு துவக்கம் என்பது கிடையாது. எல்லா உலகங்களுக்கும் நாயகனும், அதை கட்டுப்படுத்துகிறவரும் அவரே. அவர் அளவிலும் சிறியவர், பெரியவற்றில் பெரியவர். அவர் ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்டவர். மனித சிந்தையினால் அவரைப் பற்றிக்கொள்ள (அறிந்து கொள்ள) முடியாது. இந்த உலகத்தை பிரகாசிக்கச்செய்யும் ஒளி அவரே. அவர் இருளுக்கும் அப்பாற்பட்டவர்.

ஜீவன் முக்தி அல்லது மகிமையை அடைவதற்கு முன்பாக, ஒருவன் பரமபுருஷரின் ஆதிபலியின்மேல் தியானம் செய்து முழு பக்தியுடன் அவரை எப்பொழுதும் நினைக்கின்றானோ அவன் அந்த மகத்தான பரமபுருஷரை அடைகின்றான். என்னுடைய வேதங்களின் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட மகிமைப்படுதல் அல்லது மகத்தான இலக்கு என்பது அழிவற்றது என்று சுயத்தை துறந்த மக்கள் அறிந்திருக்கிறார்கள். அதைப்பற்றி சுருக்கமாக கூறுகிறேன்.

யாதொருவன் ஐம்புலன்களின் வாயில்களை அடைத்து, மனதையும் இருதயத்தையும் ஒருமுகப்படுத்தி, முழு இருதயத்தையும், சிந்தையையும்,  ஆத்துமாவையும், சரீரத்தையும் கடவுள்மேல் நிலைநிறுத்தி, மந்திரத்தை உச்சரித்து, மனதானது பரமாத்மாவை இடைவிடாமல் சிந்தித்து, ஜாதி, மதம், இனம் வேறுபாடின்றி அந்த உயர்ந்த கதியை (மகத்தான இலக்கை) அடைகிறான்.

அந்த மந்திரம் யாதெனில்: “பரமபுருஷர் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா ஒருவரே பரிசுத்தர்! பரிசுத்தர்!! பரிசுத்தர்!!! அவர் சதாகாலங்களிலும் ஜீவிக்கிறவர். ஆதிபலி அல்லது அழிவற்ற யோகத்தின் அன்பினால் என்னை மீட்டுக்கொண்டவர். அவரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.”

இந்த மந்திரத்தை நாம் வெளிப்படுத்தலுடன் உச்சரிக்க வேண்டும்.

✡✡✡✡✡✡✡

Filed under: ஸ்ரீமத் பகவத்கீதை