தமிழ் | తెలుగు

» ஸ்ரீமத் பகவத்கீதை » பரமபுருஷர் ஸ்ரீமந் நாராயணர் அருளிய ஆதிவேள்வியின் நற்செய்தி

பரமபுருஷர் ஸ்ரீமந் நாராயணர் அருளிய ஆதிவேள்வியின் நற்செய்தி

……வெவ்வேறு தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்ட பரிசுத்த வேதங்களிலிருந்தும் மற்றும்

இந்த கலியுகத்திலே ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அருளிய

சொற்பொழிவுகளிலிருந்தும் விளக்கப்பட்டுள்ளது

எட்டாம் உபதேசம்

ஸ்ரீமந் நாராயணரின் அழிவற்ற உருவத்தின் இரகசியம்

அர்ச்சுனன் அவதார புருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்த்து கேட்ட கேள்வி என்னவெனில்:  அழிவில்லாத பிரம்மம் அல்லது சிருஷ்டிகர்த்தா அல்லது பரமபுருஷர் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன? ஆதியாத்மா அல்லது கர்த்தருடைய ஆவி அல்லது பரமாத்மா என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன? கர்மம் அல்லது கிரியை என்றால் என்ன? ஆதிபூம் அல்லது திடப்பொருள் என்றால் என்ன? ஆதி தெய்வம் என்றால் என்ன? ஆதி யஜ்ஞம் என்றால் என்ன? அவர் சரீரத்தில் எங்ஙனம் வசிக்கிறார்? அவரை எவ்வாறு உணர்ந்து கொள்ள முடியும்?

ஸ்ரீ கிருஷ்ணர் கூறியது: அந்த மகத்துவமான அழிவற்ற உருவம் அல்லது சுயம்புவாகிய புருஷனே பரமபுருஷர் ஸ்ரீமந் நாராயணர். அவருக்குள் வாசம் பண்ணுகிற அந்த காணக்கூடாத பரமாத்மாவே ஆதியாத்மா என்று அழைக்கப்படுகிறார்.

✡✡✡✡✡✡✡

Filed under: ஸ்ரீமத் பகவத்கீதை