தமிழ் | తెలుగు

» ஸ்ரீமத் பகவத்கீதை » பரமபுருஷர் ஸ்ரீமந் நாராயணர் அருளிய ஆதிவேள்வியின் நற்செய்தி

பரமபுருஷர் ஸ்ரீமந் நாராயணர் அருளிய ஆதிவேள்வியின் நற்செய்தி

……வெவ்வேறு தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்ட பரிசுத்த வேதங்களிலிருந்தும்

மற்றும்

இந்த கலியுகத்திலே ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அருளிய சொற்பொழிவுகளிலிருந்தும் விளக்கப்பட்டுள்ளது

 

ஏழாம் உபதேசம் தேவனுடைய முதற்பேறானவர்

ஞானம்

ஆதிபுருஷரைப் பற்றிய இரகசியம்

ஆனால் நற்பண்புகளுள்ள மனிதர்கள் என்னை கிரஹித்து உணர்ந்து கொண்டதினால் அவர்களுடைய கர்ம பாவங்கள் மறைக்கப்படுகிறது. மேலும் அவர்கள் கண்டு விசுவாசிக்கும் தன்மையால் உண்டாகும் தவறான நம்பிக்கையை விட்டு எல்லா வழிகளிலும் திடமான தீர்மானத்துடன் என்னையே வணங்குவார்கள். மூப்பினின்றும் மரணத்திலிருந்தும் விடுபடுவதற்காக என்னை சரணடைந்தவர்கள் எவர்களோ, அவர்கள் நாராயணராகிய ஆதிபுருஷராகிய என்னை உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும் என்னில் மட்டுமே பரமாத்மா வாசஞ்செய்கிறார்.

மேலும் ஆதிபூதம், ஆதி தெய்வம், ஆதி யஜ்ஞம் (அழிவற்ற யோகம்) ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும் என்னை பரிபூரணராக அறிந்தவர்களும், எல்லா பக்தர்களின் இருதயத்தில் அந்த வேள்வியின் ஜீவ ஆத்மா அல்லது பரிசுத்த ஆவியான அமிர்தம் ஒரு சாட்சியாக வாசஞ்செய்கிறது. நிலைபெற்ற மனமுடையவர்கள் தங்களுடைய சரீரத்தை விட்டுச்செல்கிற காலத்திலும் அல்லது மரணத்திலும்கூட என்னை மட்டுமே அறிவர். எபேசியர் 4:30: “அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற பரமபுருஷருடைய ஜீவ ஆத்மா அல்லது பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.”

✡✡✡✡✡✡✡

Filed under: ஸ்ரீமத் பகவத்கீதை