தமிழ் | తెలుగు

» கவிதைகள் » பதங்கள் போற்றியே நாராயணா!

பதங்கள் போற்றியே நாராயணா!

உலகில் அரு உருக் கொண்டு நின்றானவன்

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஆனவன்

பலவும் பொருள் கொண்ட பல்லுயிர் வடிவானவன்

பரந்து விரிந்த ‘பிரபஞ்சம்’ அவன் தானானவன்

நிலவும் அமைதி அவனுள் உருவானது

நிதமும் இயக்கம் அவனால் உண்டானது-ஓம்

புலனும் அவனால் நமை ஆட்டுவிப்பது, அப்

பொறிகளைந்தும் தானே நம்மைக் கூட்டுவிப்பது

ஆட்டுவிப்பதும் நமை கூட்டுவிப்பதும்

அவனன்றி வேரில்லை என்பார்

ஆட்டங்காணும் மானுட வாழ்வின் முன்பால்,

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா என்றார்

 – கவிஞர் நா. சக்திமைந்தன், திருவாரூர்

✡✡✡✡✡✡✡

Filed under: கவிதைகள்