தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து, பிரமுகர்களின் உரை » நுகர்வோர் விழிப்புணர்வு மாநாடு

நுகர்வோர் விழிப்புணர்வு மாநாடு

ஹைதராபாத்தில் நடைபெற்ற நுகர்வோர் விழிப்புணர்வு மாநாட்டில் திரு. D. பால் உப்பாஸ் N. லாறி அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு

ஓம் நமோ பகவதே ஸ்ரீ லஹரி கிருஷ்ணாய நமஹ!

இந்த நுகர்வோர் விழிப்புணர்வு மாநாட்டிலே ஆன்மீக விழிப்புணர்வைக் குறித்து ஒரு சிலவார்த்தைகளை சொல்ல விரும்புகிறேன். ‘Consumer’ என்றால் நுகர்வோர் என்று பொருள். மனிதனால் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகிற எந்த ஒரு சேவையிலும் குறைபாடுகள் மற்றும் தாமதங்கள் (Human Error) ஏற்படத்தான் செய்யும். எல்லா நிறுவனங்களும் தாங்கள் மக்களுக்களிக்கும் சேவைக்கு ஏற்ப அதற்குரிய பணத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். இறைவன் நமக்கு அருளிய அனைத்துமே சுத்தமானது, தரமானது, நிறைவானது மற்றும் பரிபூரணமானது. அதேசமயம் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான காரியம் என்னவென்றால், மனிதன் தயாரித்து வழங்குகின்ற எல்லா பொருட்களுக்கும் மூலப் பொருள் என்னவென்று தெரியுமா? அது அவர்களுக்கு எப்படி கிடைக்கிறது என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

இந்த உலகிலுள்ள அனைத்து பொருட்களும் பூமியில் இறைவன் படைத்தவற்றிலிருந்து தயாரிக்கப்பட்டவை என்பதை மறந்து விடாதீர்கள். இதை நாம் இயற்கைவளங்கள் வாயிலாக பெற்றுக்கொள்ளுகின்றோம். சூரியன் நமக்கு ஒளியைக் கொடுக்கிறது. கடவுள்தான் அந்த ஒளியை நமக்கு இலவசமாகத் தந்திருக்கிறார். வேறு ஒருவராலும் தரமுடியாது. அதற்காக நீங்கள் கடவுளுக்கு எப்பொழுதாவது நன்றி செலுத்தியிருக்கிறீர்களா? ஆனால் அவர்தான் அனைத்து பொருட்களின் சிருஷ்டிகர்த்தா. மேலும் அவர் ஒருவரால் மட்டுமே அனைத்தையும் கொடுக்க முடியும். அனைத்துலகிற்கும் உணவளித்து உலகைத் தாங்குபவர்.

உதாரணத்திற்கு சிமெண்டிலுள்ள சுண்ணாம்பு, ஜிப்சம் போன்ற மூலப் பொருட்கள் மண்ணிலிருந்து எடுக்கப்படுபவையாகும். பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் செலவழித்தாலும் அவர் கொடுக்கும் மழையைப் போல அபரிமிதமான மழையை செயற்கையாக பெய்யச் செய்ய முடியாது. நம்முடைய கண்களுக்கு புலப்படாத வண்ணம் வீசிக் கொண்டிருக்கும் காற்றை செயற்கையாக உருவாக்க முடியாது. ஒரே ஒரு சூரியன் உலகத்தில் உதிப்பதினால்தான் உலகிற்கு ஒளி கிடைக்கிறது. சூரிய ஒளி இல்லையென்றால் செயற்கையாக எத்தனை மின்சார விளக்குகள் தேவைப்படும் என்று நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

அவ்வளவு மகத்தான கடவுள் நமக்கு இருக்கிறார். ஆனால் மனிதன் அவருக்கு நன்றி செலுத்துவதில்லை. மனிதனுடைய மிகப்பெரிய பாவம் என்ன? அவருடைய இரக்கங்களுக்காக கடவுளுக்கு நன்றி செலுத்துவதில்லை. நீங்கள் அவருக்கு நன்றி செலுத்தியிருந்தால் கடவுள் உங்களை ஏற்கனவே தொட்டிருப்பார். அதிகாலையில் எழும்புங்கள். கடவுளே நீர் கொடுக்கிற சுத்தமான காற்றுக்காக உமக்கு நன்றி செலுத்துகின்றேன் என்று பிரார்த்தனை செய்யுங்கள். ஒரு மனிதன் உங்களை காரில் ஏற்றிச் சென்றால் அவரிடம் நன்றி, நன்றி, நன்றி என்று கூறுகிறீர்கள். உங்களை ஒரு ரிக்க்ஷாவில் அழைத்துக் கொண்டு சென்றாலும் நன்றி நன்றி என்று கூறுகிறீர்கள். ஆனால் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறீர்களா? உங்களுடைய சுவாசம் நின்று விட்டால் நீங்கள் இறந்துவிடுவீர்கள். நாம் இதற்காக ஒருபோதும் அவருக்கு நன்றி செலுத்துவதில்லை.

சூரிய ஒளியை அவர் எல்லோருக்கும் இலவசமாகத் தந்திருக்கிறார். இவை அமெரிக்கா, ரஷ்யா, மலேசியா, லண்டன் நாடுகளுக்கு மட்டும் சொந்தமல்ல. அது எல்லாருக்கும் உரியது. பணக்காரர்களுக்கு மட்டுமல்ல ஏழைகளுக்கும் உரியது. எல்லோரும் அதை அனுபவிக்கிறோம். நம் அனைவரையும் சிருஷ்டித்த கடவுள் ஒரே ஒருவர்தான் என்கிற ஆன்மீக விழிப்புணர்வை மனுஜோதி ஆசிரமத்தின் மூலமாக உலகிற்கு சொல்லி வருகிறோம்.

வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி.

Filed under: ஆன்மீக கருத்து, பிரமுகர்களின் உரை