தமிழ் | తెలుగు

» கவிதைகள் » நீயருள வேண்டும்!

நீயருள வேண்டும்!

கலியுகத்தைக் காக்கவந்த ஸ்ரீ லஹரி கிருஷ்ணா
கவலைகளைத் தீர்க்கவந்த ஸ்ரீ லஹரி கிருஷ்ணா
நலிந்தவர்க்கு நாளெல்லாம் வாழ்வுதர வேண்டும்
நாடுநலம் பெறவேண்டி அனுகிரகமும் வேண்டும்!

கல்கியாக வாழவந்த ஸ்ரீ லஹரி கிருஷ்ணா
கடவுளுக்கு கடவுளனாய் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா
வாழ்வியலின் தத்துவத்தை தந்தருளிச் செய்தவா
வள்ளலுக்கு வள்ளலாக வந்த ஸ்ரீ லஹரி கிருஷ்ணா

நாடிவந்த மக்களுக்கு நாலும் செய்தாய் கிருஷ்ணா
நிலையான வாழ்வுக்கு வழியமைத்தாய் கிருஷ்ணா
தீயவற்றை வெல்லவேண்டும் என்றுரைத்தாய் கிருஷ்ணா
தீயவர்க்கும் நேர்வழியைக் காட்டுகின்றாய் கிருஷ்ணா!

– கே.வி. ஜனார்தனன், காஞ்சிபுரம்

*******

Filed under: கவிதைகள்