தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து » நீங்கள் சல்லடையா? முறமா?

நீங்கள் சல்லடையா? முறமா?

நீ சல்லடையாக இருக்க விரும்புகிறாயா? அல்லது முறமாக இருக்க விரும்புகிறாயா? என்ற வினாவை எழுப்பினார் ஆசிரியர். மாணவர்கள் பதில் சொல்ல தெரியாமல் திகைத்துப் போய் நின்றனர். ஒரு மாணவன் எழுந்தான். நான் முறமாக இருக்க விரும்புகிறேன் என்றான். எதற்காக? என்றார் ஆசிரியர். “சல்லடை நல்லவற்றையெல்லாம் கீழே தள்ளிவிட்டு, தேவையில்லாத கல், மண், கசடுகளை மட்டும்தான் தன் வசம் வைத்துக்கொள்ளும். முறம்  அப்படியல்ல, கல், மண், கசடுகளைக் கீழே தள்ளிவிட்டு, நல்லவற்றை மட்டுமே தன் வசம் வைத்துக்கொள்ளும்என்றான். ஆசிரியர் அந்த மாணவனை பாராட்டிவிட்டு, நீங்களும் முறத்தைப் போல் நல்லவற்றைமட்டுமே மனதில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அதுவே உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் என்றார். அறிவுரைகள் அனுபவத்தின் மூலமாக வருகிறது. அதுவும் அறிஞர்களுடைய அறிவுரைகள் என்றால், பலநீதி நூல்களைப் படிப்பதற்குச் சமம். நல்லவர்களைக் கண் குளிரக் காண்பதும் நன்மை தரும். நல்லவர்களின் உரைகளைச் செவி மகிழ கேட்பதும் நன்மை தரும். நல்லவர்களின் இனிய குணங்களை வாயாரப் புகழ்வதும் நன்மை தரும்.

இத்தகைய குணங்களையுடைய அவர்களோடு சேர்ந்தே இருப்பதும் நன்மை தரும்.

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க

       நல்லார்சொல் கேட்பதுவும் நன்றேநல்லார்

          குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு 

            இணங்கி இருப்பதுவும் நன்றேஎன்று மூதுரையில்ஒளவையார்குறிப்பிடுகிறார்.

பூ. மு. காஜா  நஜிமுதீன்

Filed under: ஆன்மீக கருத்து