தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து » தெலுங்கு என பெயர் வர காரணம் என்ன?

தெலுங்கு என பெயர் வர காரணம் என்ன?

முன்னொரு காலத்தில் தமிழ் கலாச்சாரமானது உலகெங்கும் பரவியிருந்தது. நம்முடைய இந்தியாவானது ஜாவா, டெஹ்ரான், போர்டியோ, சுமத்திரா அங்கிருந்து இந்தியா வரை ஒரே தேசமாக இருந்தது. அது அகண்ட பாரதம் என்று அழைக்கப்பட்டது. இந்திய சரித்திரத்தை ஆங்கிலேயர்கள் மறைத்து விட்டனர். இந்தியா முதல் ஆப்பிரிக்கா வரை  ஒரே நிலப்பரப்பாக இருந்தது. உங்களால் இதை நம்ப முடிகிறதா?

எகிப்து, பாபிலோன் போன்ற நாடுகளில் உள்ளவர்கள் தமிழ் நாட்டில் உள்ளவர்கள் என்று தெரியுமா? பல நூறு வருடங்களுக்கு முன்னர் தமிழ் கலாச்சாரம்தான் எகிப்து தேசத்திற்கு சென்றது. எகிப்திய ஜனங்கள் அதை ரோம் தேசத்திற்கு எடுத்து சென்றார்கள். அதன்பிறகு கிரேக்க மக்கள் எடுத்துக்கொண்டு சென்றார்கள். பிறகு வடக்கு வழியாக திரும்பவும் இந்தியாவுக்கு கொண்டு வந்தார்கள். பின்னர் தமிழ் கலாச்சாரம் ஜப்பானுக்கு சென்றது. பின்னர் தென் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் தமிழ் மொழியானது வேறு எந்த மொழியுடனும் ஒத்துப்போவதில்லை. ஆங்கிலேயர்கள் இந்த பெயர்களையெல்லாம் மாற்றி விட்டனர். அதனால்தான் நாம் யார் என்று நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. தெலுங்கு என்ற பெயர் தங்களுக்கு எப்படி வந்தது என்று தெலுங்கு மக்களுக்குகூட தெரியாது.

தெலுங்கு என்ற மொழி தென்னிந்தியாவில் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானத்தில் பேசப்படும் மொழியாகும். உலகில் அதிக அளவில் பேசும் மொழிகளில் தெலுங்கு பதிமூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஹிந்தியை அடுத்து தெலுங்கு மொழியை பேசுவோர் அதிக அளவில் உள்ளனர். தேசிய கவிஞர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தெலுங்கு மொழியைப்பற்றி கூறும்போது சுந்தர தெலுங்குஎன்று குறிப்பிடுகிறார்.

தெலுங்கு என்ற பெயர் அந்த மொழிக்கு எப்படி வந்தது என்று தெரியுமா? திரிலிங்கம் என்ற வார்த்தையானது மருவி தெலுங்கு என ஆனது. நூறு வருடங்களுக்கு முன்னதாக திரிலிங்க வழிபாடானது தெலுங்கு தேசத்தின் மக்களிடையே இருந்து வந்தது. தெலுங்கு மக்கள் என்றால் திரிலிங்க மக்கள் என்று பொருள். அதாவது லிங்கத்தை (ஜீவனை) வழிபடும் மக்கள் என்று அர்த்தம். மெதுவாக திரிலிங்க மக்கள் என்பது மருவி தெலுங்கானா மக்கள் என்று மாறி, தெலுங்கு என்ற பெயர் வந்தது. ஒருவேளை நூறு ஆண்டுகள் கழித்து தெலுங்குஎன்ற வார்த்தையும்கூட மருவி விடக்கூடும்.

எதற்காக திரிலிங்கம் என்று அழைக்கப்பட்டது என்பது தெரியுமா? லிங்க வழிபாடானது மூன்று இடங்களிலே நடைபெற்றது. 1) ஸ்ரீ சைலம் 2) காளஸ்தி 3) ஓர்கல் (வராங்கல்) என மூன்று இடங்கள் சேர்ந்து திரிலிங்க ஆலயங்கள் என்று அழைக்கப்பட்டன. யாரெல்லாம் அதை வழிபட்டார்களோ அவர்கள் தெலுங்கானா மக்கள் அதாவது திரிலிங்க மக்கள் என்று அழைக்கப்பட்டனர். பின்னர் அது தெலுங்கு என்று பெயர் பெற்று விட்டது. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அறியாமல் போனோம். ஸ்ரீமந் நாராயணர் வந்த பின்னர்தான் நம் அனைவரையும் கூட்டிச் சேர்த்தார். இப்பொழுது அவர் நமக்கு கொடுத்த செய்தியின் மூலமாக நாம் அனைவரும் ஒன்றிணைக்கப்பட்டிருக்கிறோம்.

– திரு. தேவாசீர் இ. லாறி

———✡✡✡✡✡✡———-

Filed under: ஆன்மீக கருத்து