தமிழ் | తెలుగు

» கவிதைகள் » திருக்காட்சி!!

திருக்காட்சி!!

மண்ணகத்தில் ஒரு சொர்க்கம் இயங்குவதை
மக்கள் கூற அறிந்து கொண்டேன் கண்ணா!
புண்ணியர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் மகத்தான
மணிமொழிகள் இயங்குமிடமென உணர்ந்தேன் கண்ணா!

வாழ்கின்ற நாளில் யான் நின் நாமம் கூற வேண்டும்!
ஊழ்வினைகள் நீங்க நின் திருவடி வணங்க வேண்டும்!
ஆழ்கடலென அடியேன் மனதில் அமைதி வேண்டும்!
வீழ்வதற்குள் உம் திருக்காட்சி காண வேண்டும் கண்ணா!

– கவிதாயினி திருமதி. மணி அர்ஜுனன், நீலகிரி மாவட்டம்

✡✡✡✡✡✡✡

Filed under: கவிதைகள்