தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து » சிறுமையைக் கண்டு இகழாதே!

சிறுமையைக் கண்டு இகழாதே!

ஒரு தையற்காரர் தனது கடையில் தைத்துக் கொண்டிருந்தார்; அவரது மகன் அவனிடமிருந்து அவர் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான். தையற்காரர் ஒரு புதுத் துணியை எடுத்தார். அதை ஒரு அழகிய பளபளக்கும் கத்தரிக்கோலால் துண்டுகளாக வெட்டினார். பின்னர் கத்திரிக்கோலை காலருகே போட்டு விட்டு துணியைத் தைக்கலானார். துணி தைத்து முடிந்ததும் அந்த சிறிய ஊசியை எடுத்து தனது தலையிலிருந்து தொப்பியில் குத்தி பத்திரப்படுத்தினார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த அவரது மகன் அவரிடம் அப்பா, கத்தரிக்கோல் விலையுயர்ந்தது, அழகானது. அதை அலட்சியமாக காலடியில் போடுகிறீர்கள். ஊசி சிறியது, மலிவானது. ஆனால் அதை தலையில் பாதுகாக்கிறீர்களே அது ஏன்? என்று கேட்டான். அதற்கு தந்தை நீ சொல்வது உண்மைதான். கத்தரிக்கோல் அழகாகவும், மதிப்புள்ளதாகவும் இருந்தாலும் அதன் செயல் வெட்டுவது, அதாவது பிரிப்பதாகும். ஆனால் ஊசி சிறியதாகவும், மலிவானதாகவும் இருந்தாலும் அதன்செயல் சேர்ப்பதாகும் என்றார்.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து – வினைத் திட்பம் உருளுகின்ற பெரிய தேருக்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணி போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர். அதனால் ஒருவரது உருவின் சிறுமையைக் கண்டு இகழக்கூடாது.

*******

Filed under: ஆன்மீக கருத்து